Published:Updated:

உனக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி ஒத்துப்போகுது! - வேதியியல் ஆசிரியரின் பாலியல் டார்ச்சர்!

பாலியல் டார்ச்சர்
பிரீமியம் ஸ்டோரி
பாலியல் டார்ச்சர்

பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் தனித்தனியாக அழைத்து விசாரித்தபோதுதான் ஆசிரியர் ஸ்ரீதரின் இன்னொரு முகம் தெரியவந்தது

உனக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி ஒத்துப்போகுது! - வேதியியல் ஆசிரியரின் பாலியல் டார்ச்சர்!

பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் தனித்தனியாக அழைத்து விசாரித்தபோதுதான் ஆசிரியர் ஸ்ரீதரின் இன்னொரு முகம் தெரியவந்தது

Published:Updated:
பாலியல் டார்ச்சர்
பிரீமியம் ஸ்டோரி
பாலியல் டார்ச்சர்

மாணவிகளிடம் வரம்புமீறிவிட்டு, வெட்கமே இல்லாமல், “பைக்ல பின்னால உட்கார்ந்தப்ப எப்பிடி ஃபீல் பண்ணுனே...” என்று போனில் டார்ச்சர் செய்த வேதியியல் ஆசிரியர் இப்போது புழல் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் உட்கார்ந்து ‘ஃபீல்’ பண்ணிக்கொண்டிருக்கிறார்.

சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்தி லுள்ள ஓர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர், படிப்பில் சரிவர கவனம் செலுத்தாமல், யாரிடமும் பேசாமல் செல்போனையே பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். பெற்றோர் செல்போனை ஆராய்ந்தபோது, “நம்ம கெமிஸ்ட்ரி சாரைப் பத்தின எல்லா விஷயமும் வீட்ல தெரிஞ்சுடுச்சு, ஒரே பிரச்னை...” என மகளுக்கு ஒரு மாணவி வாட்ஸ்அப் அனுப்பியிருந்ததை கவனித்தனர்.`என்னவாக இருக்கும்..?’ என்று குழம்பிய மாணவியின் தாய், மகளிடம் பக்குவமாக விசாரித்தார். அப்போது, கெமிஸ்ட்ரி சார் ஸ்ரீதர் தன்னை பைக்கில் வெளியே அழைத்துச் சென்றதாகவும்,  ஒரு தடவை அவர், தன்னை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்ததாகவும் மாணவி தெரிவித்தார். கூடவே, தனக்கு தினமும் பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் மெசேஜ் அனுப்புவதாகவும், அடிக்கடி வெளியே கூப்பிட்டுத் தொந்தரவு செய்வதாகவும் கூறினார். அதிர்ச்சியடைந்த மாணவியின் அம்மா, செல்போனில் அழிக்கப் படாமலிருந்த ஆசிரியர் ஸ்ரீதரின் மெசேஜ்களைப் பார்த்து, மேலும் கொதிப்படைந்தார்.

உனக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி ஒத்துப்போகுது! - வேதியியல் ஆசிரியரின் பாலியல் டார்ச்சர்!

உடனே அவர், மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலகத்துக்கு நேரில் மகளை அழைத்துக் கொண்டு சென்றார். அங்கு, ஆசிரியர் ஸ்ரீதர் மாணவிகளுக்குக் கொடுத்த பாலியல் டார்ச்சர்கள் குறித்து விவரமாகத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மாணவியும் ஆசிரியர் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்கள், போன் உரையாடல்கள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொடுத்தார். அதையெல்லாம் பெற்றுக்கொண்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கஸ்தூரி, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியர் ஸ்ரீதர் குறித்து மாணவிகளிடம் தனித்தனியே விசாரித்தார். அப்போது ஆசிரியர் ஸ்ரீதரால் பாதிக்கப்பட்ட இன்னும் சில மாணவி களும் தங்களுக்கு நடந்த பாலியல் டார்ச்சர்களைக் கண்ணீர்மல்கத் தெரிவித்தனர்.  இதையடுத்து அவர், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஆசிரியர் ஸ்ரீதர் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கிடையே வளரும் மாணவிகளைச் சீரழித்த அந்த ஆசிரியரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும் என்று பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் மாணவிகளின் பெற்றோரும், உறவினர்களும். அவர்களில் சிலரிடம் பேசினோம். ``ஆசிரியர் ஸ்ரீதரும் சில மாணவிகளும் போனில் பேசிய ஆடியோவைக் கேட்கும்போது மனசு பதறுகிறது. அவர் பேசியவற்றை முழுக்க வெளியே சொல்லவே வாய் கூசுகிறது. கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடக்கும்போதுதான், ஒவ்வொரு மாணவியிடமும் செல்போன் வாயிலாக அன்பொழுகப் பேசி, நெருக்கம் காட்டியிருக்கிறார். ஸ்கூலிலும், நீட் பயிற்சியிலும் ’உனக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி ஒத்துப்போகுது, வெளியில ஜாலியா போகலாம்’ என்று சொல்லி பல மாணவிகளை மூளைச்சலவை செய்திருக்கிறார். கிஃப்ட் வாங்கிக் கொடுத்து பரிவு காட்டியிருக்கிறார். அதனால் அவரின் தவறுகளை உடனே தட்டிக்கேட்க முடியாத நிர்பந்தத்துக்கு மாணவிகள் ஆளாகியிருக்கிறார்கள். அதைப் பயன்படுத்தி எல்லை மீறியிருக்கிறார் அந்த வாத்தியார்.

ஸ்ரீதர்
ஸ்ரீதர்

சில மாணவிகளை அவர் பைக்கில் வெளியில் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது பைக்கின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த மாணவியிடம், ‘ஸ்பீடு பிரேக்ல வேகமா ஏத்தி இறக்குனேனே... அப்ப என்ன ஃபீல் பண்ணுனே... அடுத்த தடவை பின்னால் உட்காரும்போது ரெண்டு பேருக்கும் நடுவுல பேக்கை வைக்காதே’ என்றெல்லாம் போனில் பேசியிருக்கிறார். பாடம் சம்பந்தமாகக் கேள்வி கேட்டால்கூட, `உன்னோட போட்டோவை அனுப்பு’ என்று பதில் அனுப்பியிருக்கிறார். இன்னொரு மாணவியிடம், ‘நான் கிஸ் பண்ணினது எப்படி இருந்துச்சு?’ என்று கேட்டிருக்கிறார். பிரச்னை வந்த பிறகு, தன்னுடைய தப்பை மறைக்க அனுப்பிய மெசேஜ்கள், போட்டோக்களை யெல்லாம் அழித்துவிடும்படியும் ஆடியோவில் கூறியிருக்கிறார். மகள் வயதுள்ள பிள்ளைகளுக்கு செக்ஸ் டார்ச்ச்ர் கொடுத்த அந்த மிருகத்தைத் தூக்கிலிட வேண்டும்” என்றனர் கோபத்தோடு.

ஆசிரியர் ஸ்ரீதருக்கு ஆதரவாகப் பேசும் சிலர், ``இந்த ஸ்கூல்ல, ஒரே ஒரு ஆண் ஆசிரியர் அவர் தான். அவரை இந்த ஸ்கூல்ல இருந்து வெளியில் அனுப்ப ஒரு டீமே திட்டம் போட்டு மாணவி களைத் தூண்டிவிட்டிருக்காங்க” என்கிறார்கள்.

திருமங்கலம் போலீஸாரிடம் பேசினோம். ``பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் தனித்தனியாக அழைத்து விசாரித்தபோதுதான் ஆசிரியர் ஸ்ரீதரின் இன்னொரு முகம் தெரியவந்தது. மாணவிகள் கொடுத்த ஆதாரங்களுடன் ஆசிரியர் ஸ்ரீதரின் செல்போனையும் ஆய்வுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்” என்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உடனடித் தேவை கவுன்சலிங்!