Published:Updated:

`மதுரை டெடி பொக்கே' - இந்த வருட காதலர் தினத்தின் புதிய டிரெண்ட்!

டெடி பொக்கே

முன்பு பூக்களால் செய்யப்பட்ட பொக்கே மட்டுமே டிரெண்டில் இருந்தது. அதைத் தொடர்ந்து சாக்லேட் பொக்கேவை அதிகம் பேர் தங்கள் ஆசைக்குரியவர்களுக்குப் பரிசளித்தனர். அந்த வரிசையில் தற்போது புதிதாகச் சேர்ந்திருப்பதுதான் இந்த டெடி பியர் பொக்கே.

`மதுரை டெடி பொக்கே' - இந்த வருட காதலர் தினத்தின் புதிய டிரெண்ட்!

முன்பு பூக்களால் செய்யப்பட்ட பொக்கே மட்டுமே டிரெண்டில் இருந்தது. அதைத் தொடர்ந்து சாக்லேட் பொக்கேவை அதிகம் பேர் தங்கள் ஆசைக்குரியவர்களுக்குப் பரிசளித்தனர். அந்த வரிசையில் தற்போது புதிதாகச் சேர்ந்திருப்பதுதான் இந்த டெடி பியர் பொக்கே.

Published:Updated:
டெடி பொக்கே

காதலர் தினம் நெருங்கிவிட்டாலே பரிசுகளுக்கான மவுசு அதிகமாகிவிடும். காதலை வெளிப்படுத்தி தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களை இம்ப்ரஸ் செய்வதற்கு என்ன பரிசு வாங்கலாம், புதிதாக, வித்தியாசமாக என்ன வாங்கலாம் என ரூம் போட்டு ஐடியா தேடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு காதலர் தினத்துக்கான சிறந்த பரிசுப் பொருளாக மதுரையைக் கலக்கி வருகிறது புதிய வகை பொக்கே.

valentines day gifts
valentines day gifts

முன்பு பூக்களால் செய்யப்பட்ட பொக்கே மட்டுமே டிரெண்டில் இருந்தது. அதைத் தொடர்ந்து சாக்லேட் பொக்கேவை அதிகம் பேர் தங்கள் ஆசைக்குரியவர்களுக்குப் பரிசளித்தனர். அந்த வரிசையில் தற்போது புதிதாகச் சேர்ந்திருப்பதுதான் இந்த டெடி பியர் பொக்கே. டெடி பியரோடு சாக்லேட், பூக்கள் என வெவ்வேறு காம்பினேஷன்களிலும் இந்த பொக்கேவை தயார்செய்து தருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், டெடி பியர்களை மட்டுமே வைத்து செய்யப்படும் பொக்கே நீண்ட காலத்துக்கு அப்படியே இருக்கும் என்பது கூடுதல் ப்ளஸ். இந்த பொக்கேக்கள் அழகாக இருப்பதோடு வித்தியாசமாகவும்‌, வழக்கமாகக் கொடுக்கும் பரிசுகளுக்கு மாற்றாகவும் உள்ளன.

டெடி பொக்கே
டெடி பொக்கே

டெடிபியர் பொக்கே விற்பனை செய்யும் மதுரை `ஃபெர்ன்ஸ் அண்ட் பெட்டல்ஸ்' கடைக்கு விசிட் அடித்தோம். கடையிலேயே ரெடிமேடாக சில டெடி பொக்கேக்கள் தயார்செய்து வைக்கப்பட்டிருந்தன. ``காதலர் தினம் என்பதால் ஸ்பெஷலாக பூக்களோடு ஹார்டின் உருவங்களை வைத்தும் பரிசுப் பொருள்களை உருவாக்குகிறோம். ஆனால் டெடி பியர் பொக்கேதான் இந்த வருஷ டிரெண்ட்.

800 ரூபாய் முதல் இந்த டெடி பியர் பொக்கேக்கள் கிடைக்கும். விலைக்கேற்ப டெடி பியர் பொம்மைகளின் எண்ணிக்கை, பொக்கேயின் அளவு, டிசைன் போன்றவை மாறுபடும். எங்களிடம் இருக்கும் மாடல்களைத் தவிர, உங்கள் கிரியேட்டிவிட்டிக்கு ஏற்ப நீங்கள் சொல்லும் டிசைனிலும் பிரத்யேகமான கஸ்டமைஸ்டு பொக்கேக்கள் தயார்செய்து கொடுப்போம். வேலன்டைன்ஸ் டே மட்டுமன்றி, பிறந்தாள், திருமண விழாக்கள் உள்ளிட்டவற்றுக்கும் இதைப் பரிசளிக்கலாம்.

டெடி பியர் பொக்கே
டெடி பியர் பொக்கே

பொதுவாக எங்கள் கடையில் பொக்கேக்கள்தான் அதிகம் விற்பனை ஆகும். ஏதாவது விசேஷ தினங்களில் அதற்கேற்ற மாதிரி பொக்கே விற்பனை செய்வோம். உதாரணமாக, கிறிஸ்துமஸ் நேரத்தில் சான்டக்ளாஸ் பொம்மையை வைத்து கிஃப்ட் பொருள்கள், பொக்கே செய்து விற்பனை செய்வோம். காதலர் தினத்துக்கு ஸ்பெஷலே பூக்கள்தான். அதனால் நிறைய பேர்‌ உண்மையான பூக்களால் செய்யப்பட்ட பொக்கேக்களையும் பரிசுகளையும் விரும்பி வாங்குவார்கள்" என்கிறார் கடையை நடத்தும் இன்பசேகரன்.

டெடி பியர் பொக்கேயோடு ஹேப்பி வேலன்டைன்ஸ் டே!