Published:Updated:

உயரப்போகும் தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள்!

குறைந்த விலை டேட்டாவுக்கு டாட்டா...
பிரீமியம் ஸ்டோரி
குறைந்த விலை டேட்டாவுக்கு டாட்டா...

குறைந்த விலை டேட்டாவுக்கு டாட்டா...

உயரப்போகும் தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள்!

குறைந்த விலை டேட்டாவுக்கு டாட்டா...

Published:Updated:
குறைந்த விலை டேட்டாவுக்கு டாட்டா...
பிரீமியம் ஸ்டோரி
குறைந்த விலை டேட்டாவுக்கு டாட்டா...

50,921 கோடி ரூபாய்... இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் மட்டும் வோடஃபோன் இந்தியாவில் அடைந்த நஷ்டம் இது! இந்திய வரலாற்றில் எந்த ஒரு நிறுவனமும் ஒரே காலாண்டில் இவ்வளவு பெரிய நஷ்டமடைந்ததில்லை. ‘`அரசு உதவி செய்தால் மட்டுமே எங்களால் இந்தியச் சந்தையில் இயங்க முடியும்’’ என்று பகிரங்கமாக உதவி கேட்கும் அளவுக்குச் சிக்கலான சூழலில் சிக்கித் தவிக்கிறது வோடஃபோன். தொலைத்தொடர்புச் சந்தையை கடந்த சில வாரங்களாகவே பல சர்ச்சைகள் சூழ்ந்துள்ளன. தொலைத்தொடர்பு துறையில் என்னதான் நடக்கிறது?

இவை அனைத்துக்கும் காரணம் என்னவென ஆராய்ந்தால், ஜியோவின் அதிரடி வருகையைத் தான் எல்லோருமே கைகாட்டுகின்றனர். இலவச அழைப்புகள், குறைந்த விலையில் டேட்டா என புயலாய் தொலைத்தொடர்புச் சந்தையை ஆட்கொண்டது ஜியோ. இதனால் வேறு வழி தெரியாமல் மற்ற நிறுவனங்களும் இறங்கி வந்தன; விலைகளைக் குறைத்தன. அழுத்தம் தாங்காமல் ஏர்செல் போன்ற நிறுவனங்கள் காணாமலேயே போயின. இதனால், உலகளவில் குறைந்த விலையில் டேட்டா கிடைக்கும் நாடாக உருவெடுத்தது இந்தியா.

இந்த அழுத்தத்தைத் தாங்க, வோடஃபோன் நிறுவனமும் ஐடியா நிறுவனமும் இணைந்து சேவைகளை வழங்க முடிவுசெய்தன. இதனால், `வோடஃபோன் - ஐடியா’ என்னும் புதிய தொலைத்

தொடர்பு நிறுவனம் உருவானது. ஆனால் அப்படியும் சறுக்கலையே சந்தித்தது இந்தக் கூட்டணி. தொடர்ந்து வாடிக்கை யாளர்களை இழந்துவந்த இந்த நிறுவனம், இப்போது மிகவும் இக்கட்டான சூழலில் சிக்கித் தவிக்கிறது.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது, சமீபத்தில் வெளியான Adjusted Gross Revenue (AGR) குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்த AGR தொகை என்பது, ஸ்பெக்ட்ரம் பயன்பாடு மற்றும் உரிமத்துக்காக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்குத் தரவேண்டிய வருவாய்ப் பங்கீட்டுத்தொகை. இதை எப்படி வசூலிக்க வேண்டும் என்பதில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. தொலைத்தொடர்பு இயக்கம் அல்லாத மற்ற வருவாயிலும் (சொத்துகள், முதலீடுகள், வரிகள்) தொலைத்தொடர்பு நிறுவனம் பங்கு தரவேண்டும் என்று தொலைத்தொடர்பு அமைச்சகம் கேட்டது. தொலைத்தொடர்பு இயக்கத்தில் வரும் வருவாயின் பங்கை மட்டும்தான் தர முடியும் என்றன தொலைத்தொடர்பு நிறுவனங்கள். அக்டோபர் 24-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்குச் சாதகமாகவே அமைந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால் 92,000 கோடி ரூபாய் வரையிலான பாக்கித்தொகையை மூன்று மாதங்களுக்குள் அரசுக்குக் கட்டவேண்டிய நெருக்கடியான சூழலில் சிக்கின தொலைத்தொடர்பு நிறுவனங் கள். ‘இந்தியாவைவிட்டுக் கிளம்புவதைத் தவிர வேறு வழியில்லை’ என வோடஃபோன் நிறுவனம் அறிவித்திருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

குறைந்த விலை டேட்டாவுக்கு டாட்டா...
குறைந்த விலை டேட்டாவுக்கு டாட்டா...

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச அளவில் வோடஃபோன் நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமார் இரண்டு பில்லியன் யூரோவாக இருந்தது. ஆனால், வோடஃபோன் - ஐடியா இணைப்புக்குப் பிறகு இந்த வருட மே மாதத்தில் அதன் சொத்துமதிப்பு 1.5 பில்லியன் யூரோவாகக் குறைந்தது. இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது, வோடஃபோனின் இந்தியப் பிரிவின் நஷ்டங்கள்தான். குறைந்த பங்குமதிப்பு, தொடர் நஷ்டங்கள், குறைந்த பண சுழற்சி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவை இதில் அடங்கும்.

இதுதொடர்பாக லண்டனில் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுப் பேசிய வோடஃபோனின் தலைமை செயல் அதிகாரி நிக் ரெட், ‘‘இந்தியாவில் வோடஃபோன் நிறுவனத்தின் சேவை கலைக்கப்படலாம். இதற்கு அரசாங்கம் ஏதாவது தீர்வு அளித்தால் மட்டுமே முடிவுக்கு வரும். இல்லாவிட்டால், இதுவே இறுதி முடிவாக இருக்கும்’’ என்றார்.

‘‘இந்தியாவில் அதிக அந்நிய முதலீடுகள் கொண்டுவருவதில் வோடஃபோன் நிறுவனம்தான் முதல் இடம் வகிக்கிறது. இப்போதுள்ள நெருக்கடியான சூழலில், இந்தியாவில் கூடுதலாக முதலீடு செய்யப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டது வோடஃபோன். இந்த முடிவு இந்தியாவின் அந்நிய முதலீடுகளின் மதிப்பை பெருமளவில் பாதிக்கும்’’ என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

இந்தியச் சந்தையிலிருந்து வோடஃபோனும் கிளம்பிவிட்டால், ஜியோ, ஏர்டெல், பி.எஸ்.என்.எல் என மூன்று நிறுவனங்கள் மட்டுமே சந்தையில் இருக்கும். இதில் ஜியோ, ஏர்டெலுக்கு இடையே மட்டும்தான் கடும்போட்டி இருக்கும். இப்படியான இருமுனைப் போட்டி தொலைத்தொடர்புத் துறைக்கு ஆரோக்கியமானதாக இருக்காது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க இறுதி ஆயுதமாக தங்கள் சேவையின் விலைகளை உயர்த்தப்போவதாக அறிவித்திருக்கின்றன வோடஃபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள். இந்த விலை உயர்வை டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்குக் கொண்டுவர உள்ளது வோடஃபோன்-ஐடியா. இதனால் இப்போது கொடுப்பதைவிட 10 முதல் 30 சதவிகிதம் வரை அதிக தொகையை அடுத்த மாதம் முதல் வாடிக்கையாளர்கள் கட்டவேண்டியதிருக்கும்.

ஆனால், ஜியோவும் ஒத்துழைத்தால்தான் விலை உயர்வால் இந்த நிறுவனங்கள் பயன்பெற முடியும். மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இந்த விண்ணப்பத்துக்கு ஜியோ நிறுவனம் பணியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அடுத்தடுத்த மாதங்களில் மொத்தமாக தொலைத்தொடர்பு சேவைகளின் கட்டணம் உயரவுள்ளது.

இந்த நிலையில், தொலைத்தொடர்புத் துறையில் இருக்கும் அழுத்தத்தை உணர்ந்து மத்திய அரசும் முக்கிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. AGR பாக்கித்தொகையைச் செலுத்த இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதாக அறிவித்திருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் பேசுகையில், ‘‘பொருளாதாரச் சிக்கலால் எந்த ஒரு தொலைத்தொடர்பு நிறுவனமும் மூடப்பட்டுவிடக் கூடாது’’ என்றார்.

இதனால் முன்பு இருந்த குறைந்த விலையில் அதிக டேட்டா என்ற நிலை விரைவில் மாறவுள்ளது. இது சிறிய ஸ்டார்ட்-அப் தொடங்கி அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற பெரும்நிறுவனங்கள் வரை டிஜிட்டல் தொழில் செய்யும் அனைவரையும் மறைமுகமாக பாதிக்கும்.