Published:Updated:

பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள்..! - அவசியம் அறிய வேண்டியவை

பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய  10 கட்டளைகள்
பிரீமியம் ஸ்டோரி
பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள்

நம் நாட்டில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை சுமார் 2 சதவிகிதம் முதல் 6% வரை இருக்கிறது!

பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள்..! - அவசியம் அறிய வேண்டியவை

நம் நாட்டில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை சுமார் 2 சதவிகிதம் முதல் 6% வரை இருக்கிறது!

Published:Updated:
பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய  10 கட்டளைகள்
பிரீமியம் ஸ்டோரி
பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள்
தானாக ஓடும் கார், பிளாக்செயின் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, இணையதளம் சம்பந்தப்பட்ட பொருள்கள், அவை வழங்கும் சேவைகள் எனத் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

இதனால் வேலைவாய்ப்பு பெருகுமா அல்லது இருக்கக்கூடிய வேலைகளும் பறிபோகுமா என்பது பற்றி மிகவும் விரிவாக, பலதரப்புத் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டு சமீபத்தில் வெளிவந்திருக்கும் புத்தகம் ‘ஜாப் க்ரைசிஸ் இன் இந்தியா’ (Job Crisis in India). இதை எழுதியிருப்பவர் பிரபல பத்திரிகையாசிரியர் ஆர்.ஜெகநாதன். மாக்மில்லன் நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கே...

பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள்..! - அவசியம் அறிய வேண்டியவை

வேலை பார்க்கும் 44 கோடிப் பேர்..!

நம் நாட்டில் வேலை உருவாக்கம் என்பது நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சி சதவிகிதத்தைவிட மிகவும் குறைவாகவே இருந்துவருகிறது. வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை சுமார் 2 சதவிகிதத்திலிருந்து 6% வரை இருக்கிறது. வேலைக்கான ஊதியம் கவர்ச்சிகரமாக இல்லாததால், பெரும்பாலானவர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அல்லது சிறிய அளவில் சுயதொழில் செய்பவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

2017, 2018-ம் ஆண்டுகளில் தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பச் சேவைகள், வங்கி, நிதிச்சேவை, காப்பீடு ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பால் ஏற்பட்ட வேலையிழப்பு சுமார் 15 லட்சம் வரை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் வேலை பார்ப்பவர்களின் (பகுதி நேர பணியாளர்கள் உள்பட) எண்ணிக்கை சுமார் 44 கோடி முதல் 49 கோடி. இவர்களில் பெரும்பாலானவர்கள் முறைசாராத துறைகளிலும், ஒப்பந்த அடிப்படையிலும், சுயதொழில் செய்பவர்களுமாக இருக்கிறார்கள். வேலை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசுத்துறையிலும் ஆள் குறைவு..!

இயந்திரமயமாக்கலும் தொழில்நுட்பமும் வேலைகளுக்குப் பெரிய அபாயமானவையாக இருந்தாலும் இவற்றால் ஒரு சில தொழில் துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகவும் வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, கூகுள், அமேஸான், ஆப்பிள், ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் இதில் முன்னணியில் இருக்கின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நமது நாட்டின் தொழிலாளர் சட்டத்தைச் சீரமைப்பது முக்கியம்.

பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள்..! - அவசியம் அறிய வேண்டியவை

சில துறைகளில் வேலை அதிகரிக்க வாய்ப்புகள் இருந்தாலும், அதற்கு அதிக திறன் / திறமை தேவையாக இருக்கும். அத்துடன், இந்தியா உற்பத்தித்துறையில் பின்தங்கி இருப்பதும், அதிக வேலைகள் உருவாகாமல் இருப்பதற்கு ஒரு முக்கியமான காரணமாகும்.

நமது நாடு ‘நடுத்தர வருமானம்’ கொண்ட நாடாக மாறும்போது, அரசுத்துறைகள் விரிவாகும். அந்தக் காலகட்டத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. உலக வங்கியின் ஒரு தரவின்படி, இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 1.7% பேர் மட்டுமே பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்துவருகிறார்கள். இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. (உதாரணமாக, ஸ்வீடன் 13.7%, டென்மார்க் 17.3%, நார்வே 17.8%, தென் ஆப்பிரிக்கா 3.1%).

* செயலி அடிப்படையிலான டாக்ஸி சேவை, லாஜிஸ்டிக்ஸ், உயர் தொழில்நுட்ப மென்பொருள்கள் சேவை ஆகிய துறைகளில் வேலைவாய்ப்புகள் உண்டாகியிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு, மருத்துவம், கல்வி ஆகிய துறைகளில் அரசு இன்னும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

இலவசங்களை மக்கள் ஒதுக்கக் காரணம்..!

2016-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து அரசு, தன் ஒவ்வொரு குடிமகனுக்கும் வேலை எதுவும் செய்யாமல் மாதம் சுமார் 2,500 சுவிஸ் ஃப்ராங்க் (அதாவது, ரூ.1,72,500) இலவசமாகத் தருவதற்காக மக்களின் கருத்தறிய நாடு தழுவிய வாக்குப்பதிவையும் நடத்தியது. அதன்படி, பெரும்பாலான மக்கள் இலவசப் பணம் தங்களுக்குத் ‘தேவையில்லை’ என வாக்களித்ததால், அரசு தன் முடிவை மாற்றிக்கொண்டது. (இப்படியெல்லாம் நம் நாட்டில் நடக்குமா?).

பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள்..! - அவசியம் அறிய வேண்டியவை

இலவசப் பணத்தை மக்கள் விரும்பாமல் போனதற்கு என்ன காரணம்? இதற்காக அரசு, ரூ 1.72 லட்சம் கோடி செலவிட வேண்டியிருக்கும். இதனால் அரசு மற்ற சமூகநலத் திட்டங்களுக்குச் செலவிடும் தொகை குறையும் அல்லது இதை ஈடுகட்ட அதிக வரி விதிக்க வேண்டிவரும். எனவே, நடைமுறையில் பாதிக்கப்படுவது ‘நாம்’தான் என்பதை மக்கள் உணர்ந்ததால், `அரசு தரும் இலவசம் வேண்டாம்’ என்று நிராகரித்தனர்.

பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள்!

உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராளமயமக்கல், இயந்திரமயமாக்கல், தொழில் நுட்பமயமாக்கல் ஆகியவற்றுடன் பணியாளர்கள் பயணிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த 10 கட்டளைகள்...

1. வேலை பார்க்கும் நிறுவனத்தின்மீது வைக்கும் விசுவாசத்தைவிட உங்கள் மீதும், உங்கள் எதிர்காலத்தின் மீதும் விசுவாசம் வையுங்கள்.

2. உங்களுடைய திறனைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளுங்கள்.

3. மென் திறமைகள் (Politeness, Good manners, Communication) மற்றும் மொழித்திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்.

4. ஒரு வேலையில் அல்லது ஒரு குறிப்பிட்ட திறனில் அல்லது ஒரு குறிப்பிட்ட பணி நிலையில் மூன்று வருடங்கள் என்பது அதிகம்.

5. இடப்பெயர்வும், நெகிழ்வுத்தன்மையும் (Mobility and Flexibility) முக்கியம்.

6. பிரதான வேலை தவிர, வேறொரு வேலையையும் (எழுதுவது, பாடம் சொல்லிக் கொடுப்பது போன்றவை) செய்ய ஆரம்பியுங்கள். இது அவசரத்துக்குக் கைகொடுக்கும்.

7. கணவன், மனைவி இருவரும் வேலை செய்யும்பட்சத்தில் புரிந்துகொள்ளலும், நெகிழ்வுத்தன்மையும் முக்கியம்.

8. நிதியைத் திறமையாகக் கையாளக் கற்றுக் கொள்ளுங்கள். (கோவிட்-19 ஒரு நல்ல படிப்பினையை நம் அனைவருக்கும் கொடுத்திருக்கிறது. குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு அவசர காலத்துக்கான நிதி, குடும்பத்தினர் அனைவருக்குமான மருத்துவக் காப்பீடு, டேர்ம் இன்ஷூரன்ஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்).

9. பொறுப்புகளைக் குறைவாக வைத்துக் கொள்ளுங்கள். பொறுப்புக்கும் சொத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குழப்பிக் கொள்ளாதீர்கள். (உதாரணம், வாகனம் வைத்திருப்பது சொத்து இல்லை).

10. முழு ஓய்வு என்பதை மறந்துவிடுங்கள். மனிதனின் ஆயுட்காலம் கூடி வருவதால், 60 அல்லது 65 வயது என்பது அதிகாரபூர்வ ஓய்வுக்காலமாக இருந்தாலும், உடல்நிலை இடம் தரும்பட்சத்தில் மனதையும் உடலையும் ‘ஆக்டிவாக’ வைத்துக்கொள்ள ஏதாவது பகுதிநேர/முழுநேர வேலையில் ஈடுபடுங்கள்.

இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி குறிப்பிட்டிருப்பது இந்நூலின் கூடுதல் சிறப்பு!