Published:Updated:

70 வயது ஆர்வம்... நஞ்சில்லா உணவுக்கான நல்ல தொடக்கம்!

பிரமிளா
பிரீமியம் ஸ்டோரி
பிரமிளா

மாடித்தோட்ட விவசாயி பிரமிளா

70 வயது ஆர்வம்... நஞ்சில்லா உணவுக்கான நல்ல தொடக்கம்!

மாடித்தோட்ட விவசாயி பிரமிளா

Published:Updated:
பிரமிளா
பிரீமியம் ஸ்டோரி
பிரமிளா

``குடும்பம், குழந்தைங்கனு ஓடித்திரிஞ்ச பெண்களுக்கு, குறிப்பிட்ட வயசுக்கு மேல, எனர்ஜி இல்லாம போயிரும்னு சொல்வாங்க. ஆனா, நான் என்னோட 59 வது வயசுலதான் ஓட ஆரம்பிச்சேன். இப்போ எனக்கு 70 வயசு. அம்மா, மனைவி, பாட்டினு எல்லா பொறுப்புகளையும் பார்த்துட்டு, இப்போ எனக்கான தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கேன்’’ - பெருமையாகச் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பிரமிளா. பத்து வருடங்களுக்கு மேலாக, கோடம்பாக்கத்தில் உள்ள தன் வீட்டில் மாடித்தோட்டம் வைத்துப் பராமரித்து வரும் பிரமிளா, அந்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

70 வயது ஆர்வம்... நஞ்சில்லா உணவுக்கான நல்ல தொடக்கம்!
70 வயது ஆர்வம்... நஞ்சில்லா உணவுக்கான நல்ல தொடக்கம்!

‘`இதுக்கு முன்னாடி நாங்க வெளிநாட்டுல இருந்தோம். அங்க பால்கனியில செடிகள் வெச்சுப் பராமரிச்சுட்டு இருந்தேன். சென்னைக்கு வந்ததும், அரசு மானிய விலையில கொடுத்த தோட்டக்கலைப் பொருள்களை வெச்சு, பத்து செடிகளோட தோட்டத்தை ஆரம்பிச்சோம். இன்னிக்கு அது 1,250 சதுர அடியில விஸ்தாராமா மாறியிருக்கு.

தோட்டம் அமைக்கும்போதே, இயற்கை விவசாயம்தான் செய்யணும்னு முடிவு பண்ணிட்டேன். செடிகளுக்கான விதைகளை இயற்கை விவசாயம் செய்யுறவங்ககிட்டருந்து தேடித்தேடி வாங்குனேன். என் குடும்பத்தோட தேவை போக மீதி காய்களை அக்கம் பக்கத்தாருக்கு கொடுப்பேன். என்னைப் பார்த்துட்டு தோழிகள் சிலரும் மாடித் தோட்டம் போட்டிருக்காங்க. தாய் விதைகளை எங்களுக்குள்ள பரிமாறிக்குவோம்'' என்ற பிரமிளா தன் தோட்டத்தைச் சுற்றிக் காட்ட ஆரம்பித்தார்.

“என்னோட தோட்டத்துல சிவப்பு அவரை, குட்டை புடலை, நீள புடலை, வெண்டை, செடி முருங்கை, முள்ளங்கி, கத்திரிக்காய், தக்காளி, பாலக் கீரை, வெந்தயக் கீரை, இஞ்சி, மஞ்சள், சேனைக்கிழங்கு, மிளகாய் உள்பட நிறைய காய்கறிகள் இருக்கு, மகரந்தச் சேர்க்கையை அதிகரிக்க சாமந்தி, ரோஜா, அரளி, செம்பருத்தினு நிறைய பூச்செடிகளும் வெச்சுருக்கேன். குளிர்கால காய்கறிகளான முட்டைகோஸ், காலிஃப்ளவர், பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகளை வருஷத்துக்கு நாலு மாசம் மட்டும் பயிரிடுவேன். இந்தக் காய் கறிகள் என் தோட்டத்தோட ஸ்பெஷல்.

70 வயது ஆர்வம்... நஞ்சில்லா உணவுக்கான நல்ல தொடக்கம்!
70 வயது ஆர்வம்... நஞ்சில்லா உணவுக்கான நல்ல தொடக்கம்!

பூச்சித்தாக்குதலைத் தடுக்க, அரை லிட்டர் வேப்ப எண்ணெயில 100 கிராம் பூந்திக்காயை ஊறவெச்சு, கைகளால கசக்கி, நுரைச்ச அந்தத் தண்ணீரை வடிகட்டி, தண்ணீர் கலந்து, வாரம் ஒரு முறை செடிகளுக்கு ஸ்பிரே பண்றேன். செடிகள் வாடியிருந்தா புளிச்ச மோரை தண்ணீரில் கலந்து தெளிப்பேன். மாசம் ஒரு முறை காய்கறிக் கழிவுகள்லேருந்து தயாரிக்கப்பட்ட உரத்தைப் பயன்படுத்துறேன். இது மூலமா நாங்க எல்லாரும் நஞ்சில்லாத உணவு சாப்பிடற திருப்தியும் கிடைக்குது’’

- பசுமைப் புன்னகையோடு விடை கொடுக்கிறார் பிரமிளா.

70 வயது ஆர்வம்... நஞ்சில்லா உணவுக்கான நல்ல தொடக்கம்!

காய்கறிக்கழிவுகளில் இயற்கை உரம்

“மூடியோடு உள்ள பழைய வாளியை எடுத்து வாளியின் பக்கவாட்டில் சின்னச் சின்ன துளைகள் போட்டுக்கணும். அந்த வாளியில லேயர் லேயரா காய்கறிக்கழிவு, காய்ந்த இலைகள், பூக்கள், தென்னங்கழிவுகள்னு நிரப்பணும். இப்படி வாளி முழுக்க நிரப்பி கொஞ்சம் மோர் ஊற்றி மூடி வைக்கணும். மூணே மாசத்துல இயற்கை உரம் தயார்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism