Published:Updated:

இந்த ஆட்டோக்களை ஃபாலோ பண்ணுங்கப்பா!

ஆட்டோ டிரைவர்கள் சங்கம்
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டோ டிரைவர்கள் சங்கம்

அடுத்த கூட்டத்துல, மது குடிச்சிட்டு யாரும் ஆட்டோ ஓட்டக் கூடாதுன்னு சொன்னோம். அதைக் கேட்டு எங்காளுங்க அதிர்ந்துட்டாங்க.

இந்த ஆட்டோக்களை ஃபாலோ பண்ணுங்கப்பா!

அடுத்த கூட்டத்துல, மது குடிச்சிட்டு யாரும் ஆட்டோ ஓட்டக் கூடாதுன்னு சொன்னோம். அதைக் கேட்டு எங்காளுங்க அதிர்ந்துட்டாங்க.

Published:Updated:
ஆட்டோ டிரைவர்கள் சங்கம்
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டோ டிரைவர்கள் சங்கம்

ஆட்டோ பயணம் என்றாலே தாறுமாறான கட்டணம், தகராறு செய்யும் டிரைவர்கள் என்ற பிம்பத்தை உடைத்திருக்கிறது, தஞ்சாவூரின் ஆட்டோ டிரைவர்கள் சங்கம்.

இந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் குடித்து விட்டு வந்து ஆட்டோ ஓட்டக் கூடாது. புகை பிடித்தபடி ஓட்டவோ, பயணிகளை அவமரியாதையாகப் பேசவோ முடியாது. அப்படிச் செயல்பட்டால் சங்கமே தலையிட்டு, கடுமையான தண்டனைகளைக் கொடுக்கிறது. ஆட்டோ ஓட்டுநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அடங்கிய 50 பக்கம் கொண்ட சட்ட விதிமுறைப் புத்தகத்தையே உருவாக்கியிருக்கிறார்கள். தஞ்சாவூர்ப் பேருந்து நிலைய ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தின் தலைவர் நாகலிங்கத்திடம் பேசினேன்.

இந்த ஆட்டோக்களை ஃபாலோ பண்ணுங்கப்பா!

``1995-ல் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட போது ராஜீவ்காந்தி பெயரில் 60 டிரைவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு ஆட்டோ ஓட்டுநர் நலச் சங்கத்தைத் தொடங்கினோம். ஆரம்பத்துல கலர் சட்டை, கைலி, கையில பீடியும் வாயில புகையுமா ஆட்டோ டிரைவர்களுக்கே உரிய டிரேடு மார்க்கோடுதான் எங்க சங்கத்துல இருந்த ஓட்டுநர்களும் இருந்தாங்க. வெளியூரிலிருந்து தனியா ஒரு பொண்ணு வந்துச்சுன்னா அதை அனுப்புறவங்க, ‘ஆட்டோவுல பார்த்துப் பத்திரமா போம்மா’ன்னு எச்சரிக்கை செய்யுற நிலைமைதான் இங்கேயும் இருந்துச்சு. அதை மாற்றி, பயணிகளோடு நல்லுறவோட இருக்கணும்னு நினைச்சோம். அதனால் எங்க சங்கத்துல இருந்த உறுப்பினர்களை அழைச்சுப் பேசினோம். நம்ம சங்கத்துக்குப் புதுசா விதிமுறைகளை வகுப்போம்னு எல்லோரும் சொன்னாங்க. அதனால் உறுப்பினர்கள் ஒவ்வொருவரோட கருத்தையும் கேட்டு சங்கத்துக்கான விதிகளை வகுத்தோம். காக்கி யூனிபார்ம் போடலன்னா யாரும் ஸ்டாண்டு பக்கமே வரக்கூடாது, வண்டியும் ஓட்டக் கூடாதுன்னு கண்டிஷன் போட்டோம். `காக்கிச் சட்டைதானே... போட்டுட்டாப்போச்சு’ன்னு எல்லாரும் ஒத்துக்கிட்டுப் பின்பற்ற ஆரம்பிச்சாங்க.

நாகலிங்கம், கருணாகரன்
நாகலிங்கம், கருணாகரன்

அடுத்த கூட்டத்துல, மது குடிச்சிட்டு யாரும் ஆட்டோ ஓட்டக் கூடாதுன்னு சொன்னோம். அதைக் கேட்டு எங்காளுங்க அதிர்ந்துட்டாங்க. ஏன்னா அந்த அளவுக்கு நிறைய பேர் ரெகுலரா குடிச்சாங்க. ஆனா அந்த விதியைக் கடுமையாக்கினோம். சிலர் அதையும் மீறிக் குடிச்சாங்க. குடிச்சா ஸ்டாண்ட் பக்கமே வரக் கூடாது, மீறி வந்து ஆட்டோவைத் தொட்டா 10,000 ரூபாய் அபராதம்னு அறிவிச்சதும் கைமேல் பலன் கிடைச்சது.

பர்மிட், இன்ஷூரன்ஸ்னு எல்லா பேப்பரும் கரெக்டா இருக்கணும்னு வலியுறுத்தியிருக்கோம். இன்ஷூரன்ஸ் முடிவது, எப்.சி-க்குப் போவதை எல்லாம் நினைவுபடுத்த ஒரு டிரைவரை நியமிச்சிருக்கோம். ரோட்டுல போலீஸார் வாகனங்களை நிறுத்தி பேப்பர்களை சோதனை செய்றப்ப எங்க ஸ்டாண்ட் வண்டியைப் பார்த்ததும், `அவங்க கிட்ட எல்லா பேப்பரும் சரியா இருக்கும்’னு நம்பிக்கையோடு அனுப்பிடுறாங்க’’ என்று பெருமை பொங்கப் பேசினார்.

இந்த ஆட்டோக்களை ஃபாலோ பண்ணுங்கப்பா!

ராஜீவ்காந்தி ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கத்தின் செயலாளர் கருணாகரன், ``எங்க சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் பத்தாவது முடிச்சதும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை கொடுக்கிறோம். பெரிய அளவுல டிரைவருக்கு உடம்புக்கு முடியாம ஆட்டோ ஓட்ட முடியாமப் போச்சுன்னா அந்த மாசம் அவருக்கு 8,000 ரூபாய் தர்றோம். சங்கத்தைச் சேர்ந்தவங்க குடும்பத்துல யாராவது இறந்துட்டா இறுதிக் காரியச் செலவுக்கு நாலாயிரம் ரூபாய் கொடுப்பதோடு, மூன்று மணி நேரம் ஆட்டோ ஓட்டாம அவங்க கூடவே இருந்து கவனிச்சுக்குவோம். ஒரு பொண்ணுகிட்ட திருடன் ஒருத்தன் செயினைப் பறிச்சுக்கிட்டு ஓடினான். அங்கே இருந்த எங்க சங்கத்து ஆட்டோ டிரைவர்கள் ஓடிப்போய் திருடனைப் பிடிச்சி போலீஸ்கிட்ட ஒப்படைச்சோம். எல்லோரும் எங்களை போலீஸுக்கு இணையா மதிச்சுப் பாராட்டினப்ப பெருமையா இருந்துச்சு.

எங்க சங்க நிர்வாகத்தைப் பார்த்துப் பல மாவட்டங்களில் உள்ள ஆட்டோ சங்கத்துல இதுபோன்ற விதிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கியிருக்காங்க” என்று மகிழ்ச்சி பொங்கப் பேசினார்.

பாராட்டுகள் பாஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism