Published:Updated:

அரிய நோயால் உயிருக்குப் போராடும் குழந்தை; காப்பாற்ற பெண் காவலர் எடுத்த முயற்சி - வைரலாகும் வீடியோ!

தஞ்சாவூரைச் 21 மாத குழந்தை பாரதி, ஸ்பைனல் மஸ்குலர் அட்டாக் (எஸ்.எம்.ஏ) என்கிற முதுகுத்தண்டுவட தசைநார் லெவல் 2 குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள செய்தியைக் கேள்வியுற்று காவலர் அஸ்வினி குழந்தைக்கு உதவ அனைவரும் சேர்ந்து கைகொடுப்போம் என சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்துள்ளார்.

"தஞ்சாவூரில் எஸ்.எம்.ஏ குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தை பாரதியை  அனைவரும் இணைந்து காப்பாற்றுவோம்" என பெண் காவலர் ஒருவர் சமூக வலைதளங்களில் விடுத்துள்ள அழைப்பு வைரலாகி வருகிறது.

பெண் காவலர்
பெண் காவலர்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக பணிபுரிபவர் அஸ்வினி. காவல்துறையில் இரவுபகல் பார்க்காமல் வேலை பார்ப்பதால் ஏற்படும் பணிச்சுமை மற்றும் மனச்சோர்வினைப் போக்க  சமூக வலைதளங்களில் நகைச்சுவை பதிவுகளைப்  பதிவிட்டு வந்துள்ளார்.  இவரைக்  காவல் துறையிலேயே சமூக வலைதளங்களில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை அதிகம்.

தஞ்சாவூரைச் சேர்ந்த ஜகதீஷ்-எழிலரசி தம்பதியினரின் 21 மாத குழந்தை பாரதி, ஸ்பைனல் மஸ்குலர் அட்டாக் (எஸ்.எம்.ஏ) என்கிற முதுகுத்தண்டுவட தசைநார் லெவல் 2 குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள செய்தியைக் கேள்வியுற்று அஸ்வினி மனவேதனை அடைந்துள்ளார். குழந்தையின் சிகிச்சைக்காக காவல்துறையில் பணியாற்றும் நண்பர்கள் தங்களால் இயன்ற தொகையை வழங்கியுள்ளனர். அதன்பின்னும் திருப்தியடையாத அஸ்வினி, குழந்தைக்கு உதவ அனைவரும் சேர்ந்து கைகொடுப்போம் என சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், 

"தஞ்சாவூரைச் 21 மாத குழந்தை பாரதிக்கு எஸ்.எம்.ஏ. குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். 2 வயது முடிவதற்குள் மருந்தை செலுத்த வேண்டும். தாமதித்தால் எழுந்து நடக்க முடியாமல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இந்தக் குறைபாட்டுக்கு இந்தியாவில் எந்த சிகிச்சை முறையும் இல்லை. பாரதிக்கு தேவையான மருந்து வெளிநாட்டில் மட்டுமே  கிடைப்பதால், அம்மருந்தினை இறக்குமதி செய்ய வேண்டும். இந்தத்  தொகையை தனி ஒருவராக திரட்டுவது சாத்தியமே கிடையாது. இந்தக் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற கடுமையாகப் போராடிய பெற்றோர் ,கடைசியாக அக்குழந்தையைக் காப்பாற்றும் பொறுப்பை மக்களாகிய நம்மிடம் ஒப்படைத்துள்ளனர். எனவே நமது வீட்டில் உள்ள குழந்தையாக  நினைத்து மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்யுங்கள். நீங்கள் செய்யும் சிறு உதவியும் அக்குழந்தையைக் காப்பாற்றி வாழவைக்கும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அக்குழந்தையைக் காப்பாற்ற முயற்சி செய்வோம்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெண் காவலர்
பெண் காவலர்

இவரது பதிவுக்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது. இவரது வேண்டுகோளை ஏற்று பலரும் குழந்தை பாரதிக்கு உதவி செய்து வருகின்றனர். மேலும், அஸ்வினியின் இந்த முயற்சியை காவல் அதிகாரிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு