Published:Updated:

தஞ்சை:ஆக்ஸிஜன் வசதியுடன் பேருந்துகள்;மனநல ஆலோசனை- கொரோனா தடுப்பில் சுற்றிச் சுழலும் மாவட்ட நிர்வாகம்

கலெக்டர் கோவிந்தராவ்
கலெக்டர் கோவிந்தராவ் ( ம.அரவிந்த் )

தனது பணியை ஒரு நாள் கூட குறைத்து கொள்ளவில்லை.சிகிச்சை முறையை தாண்டி உளவியல் ரீதியாகவும் கொரோனா பாத்திதவர்களின் மன அழுத்தத்தை போக்கும் நடவடிக்கையினையும் கலெக்டர் கோவிந்தராவ் எடுத்து வருகிறார்.

வ்தஞ்சாவூரில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வரவும், பாதிக்கப் பட்டவர்களின் மன அழுத்தம் போக்குதல், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய ஸ்கூல் மினி பேருந்து அறிமுகம் என பொதுமக்கள் கவனம் பெறும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்து களத்தில் சுழன்று வரும் கலெக்டர் கோவிந்தராவை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

கொரோனா தடுப்பு பணியில் கலெக்டர்
கொரோனா தடுப்பு பணியில் கலெக்டர்

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை தீரிவரமாக எடுத்து வருகிறது. தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் முதன் முதலாக இரண்டாவது அலையின் பாதிப்பு தொடங்கியது.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாப்பேட்டை அரசு உதவி பெறும் மகளிர் பள்ளி ஒன்றில் படித்த, ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர்.பொதுமக்கள் கொரோனா முடிவிற்கு வந்து விட்டதாக நிம்மதி பெருமூச்சுவிட்ட நேரத்தில் மீண்டும் கொரோனா பரவியது அச்சத்தை ஏற்படுத்தியது.

கொரோனா தடுப்பு பணி
கொரோனா தடுப்பு பணி

உடனடியாக பள்ளி மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடி விசிட் அடித்த தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவ், அப்பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்தி கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைய எடுத்தார். இதே போல் பட்டுக்கோட்டை, கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளிலும் கொரோனா பரவி வந்தது. அப்போது சட்டமன்ற தேர்தல் பணிகளும் விறு விறுப்புடன் நடைபெற்று வந்தன. அதற்கிடையிலும் கலெக்டர் கோவிந்தராவ் தனி கவனம் செலுத்தி கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முன்னெடுப்பு பணியினை மேற்கொண்டு வந்தார். அதனால் ஆரம்பத்திலேயே அபாயகட்டத்தை அடைய வேண்டிய தஞ்சாவூர் அதிலிருந்து தப்பியதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவரம் அறிந்த சமூக ஆர்வலர்கள் நம்மிடம் கூறியதாவது, `` கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை கட்டுக்குள் கொண்டு வர மருத்துவத்துவத் அதிகாரிகளுடன் கரம் கோர்த்து களத்தில் பம்பரமாய் சுழன்று வருகிறார் கலெக்டர் கோவிந்தராவ். ஒரு பகுதியில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் உடனடியாக அந்த பகுதிக்கு நேரில் விசிட் அடித்து கட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

மருத்துவமனையில் ஆய்வு
மருத்துவமனையில் ஆய்வு

தினமும் மீட்டிங் நடத்தி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துதல்,கும்பகோணம்,பட்டுக்கோட்டை பகுதிகளுக்கும் ஆய்வு செல்லுதல் என தனது பணியை ஒரு நாள் கூட குறைத்து கொள்ளவில்லை. சிகிச்சை முறையை தாண்டி உளவியல் ரீதியாகவும் கொரோனா பாத்திதவர்களின் மன அழுத்தத்தை போக்கும் நடவடிக்கையினையும் எடுத்து வருகிறார். குறிப்பாக தஞ்சாவூர் வல்லத்தில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மன இறுக்கத்தை போக்கும் விதமாக, ஜீவன் சுருதி என்ற இசைக் குழுவை நடத்தி வரும் இசை கலைஞர் பிராங்ளின் என்பவர் மூலம் வாரத்தில் ஒரு நாள் இசைக்கச்சேரி நடந்து வருகிறது. அப்போது சிகிச்சையில் இருக்கும் பலர் தங்களை மறந்து நடனமாடும் சுவராஸ்ய சம்பவங்களும் நடந்தேறின.

தாமரை பன்னாட்டு தனியார் பள்ளி மூலம் கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வருவதற்காக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய இரண்டு ஸ்கூல் மினி பேருந்துகளை அறிமுகம் செய்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். ஒவ்வொரு மினி பேருந்திலும் தலா நான்கு படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதே போல் சிட்டி யூனியன் வங்கி உதவியுடன் 100 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவியினை செயல் பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். ரூ1 கோடி மதிப்பில் சிட்டி யூனியன் வங்கி இதனை செய்து கொடுத்திருக்கிறது. இந்த கருவி உதவியுடன் ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவி இல்லாமல் நேரடியாக காற்றிலிருந்து 100 பேர் பயன்படுத்தக் கூடிய அளவில் தட்டுப்பாடின்றி ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும்.

மீட்டிங்
மீட்டிங்

புதுப்பட்டியில் உள்ள தனியார் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலையில், தினமும் எவ்வளவு ஆக்ஸிஜன் தயாரிக்கப்படுகிறது வெளியே கொண்டு செல்லப்படுகிறது என்பதை அறிய, தனியாக தாசில்தார் ஒருவரை நியமனம் செய்துள்ளார். மக்கள் ஒரே இடத்தில் கூடாமல் இருக்க 71 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவிட் டெஸ்ட் எடுக்கும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறது மாவட்ட நிர்வாகம். மருத்துவக் கல்லூரியில் பெட்டுகள் நிரம்பி வருவதால் அடுத்த கட்டமாக இராசா மிராசுதார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் 320 புதிய படுக்கைக்கு ஏற்பாடு செய்யபட்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனா பாதிப்பால் அச்சப்பட்டு பொதுமக்களில் யார் போன் செய்தாலும் வணக்கம் நான் கலெக்டர் பேசுறேன் என தொடங்கி எதிர்முனையில் பேசுபவரின் குறைகளை பொறுமையாக கேட்டு அவர்களுக்கு தேவையான வற்றை கிடைக்க ஏற்பாடு செய்கிறார். சிகிச்சைக்காக வாட்ஸப்பில் தகவல் அனுப்பினாலும் கவனத்தில் எடுத்து கொள்கிறார். இந்த நேரத்திலும் தன்னை யார் சந்திக்க வந்தாலும் மறுக்காமல் சந்திப்பதுடன் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறார்.

கலெக்டர் கோவிந்தராவ்
கலெக்டர் கோவிந்தராவ்

ஒரு வீட்டில் பெற்றோர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளானால் அவர்கள் சிகிச்சை முடிந்து வரும் வரை அவர்களின் குழந்தைகளுக்கு உணவு மற்றும் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து கவனித்து கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கும் உத்தவிட்டிருக்கிறார். இக்கட்டான இந்த சூழ்நிலையிலும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர நேரம் காலம் பார்க்காமல் அவர் பணி செய்து வருவது எங்களுக்கு வியப்பை தருகிறது" என்கிறனர்.

அடுத்த கட்டுரைக்கு