Published:Updated:

படுத்தும் பாதாளச் சாக்கடை... பாழாகும் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்!

பாதாளச் சாக்கடைக் கழிவுநீர்
பிரீமியம் ஸ்டோரி
பாதாளச் சாக்கடைக் கழிவுநீர்

விவசாயத்துக்குப் பயன்படுத்தும் காவிரியின் கிளை ஆறான வடவாற்றிலேயே பல வருடங்களாகக் கழிவுநீரையும் திறந்துவிடுறாங்க.

படுத்தும் பாதாளச் சாக்கடை... பாழாகும் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்!

விவசாயத்துக்குப் பயன்படுத்தும் காவிரியின் கிளை ஆறான வடவாற்றிலேயே பல வருடங்களாகக் கழிவுநீரையும் திறந்துவிடுறாங்க.

Published:Updated:
பாதாளச் சாக்கடைக் கழிவுநீர்
பிரீமியம் ஸ்டோரி
பாதாளச் சாக்கடைக் கழிவுநீர்

தஞ்சாவூரில் பாதாளச் சாக்கடைக் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் ஆறு, ஏரிகளில் கலப்பதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் அவலம் தொடர்வதாக வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

இது குறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க தஞ்சை மாநகர மாவட்டச் செயலாளர் ராஜேஸ்வரன், ‘‘ஸ்டாலின் துணை முதலமைச்சராகப் பதவி வகித்தபோது தஞ்சாவூர் மாநகராட்சியில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. நகரிலிருந்து வரும் கழிவுநீர், வரலாற்றுச் சிறப்புமிக்க சமுத்திரம் ஏரியின் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்ட பம்ப்பிங் ஸ்டேஷனுக்குக் கொண்டுசெல்லப்பட்டு சுத்திகரிக்கப்பட்டது. கழிவுநீரிலுள்ள குப்பை, மண், பாக்டீரியா போன்றவற்றை ஒவ்வொரு கட்டமாகச் சுத்திகரிப்பு செய்து, மாசற்ற தண்ணீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தும் வகையில் அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அடுத்து வந்த, அ.தி.மு.க ஆட்சியில் பம்ப்பிங் ஸ்டேஷன் முறையாகப் பராமரிக்கப்படாததால், திட்டம் செயலிழந்தது. இதனால் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமலேயே சமுத்திரம் ஏரியிலும், வடவாற்றிலும் கலந்ததில் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.

படுத்தும் பாதாளச் சாக்கடை... பாழாகும் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்!

அ.தி.மு.க ஆட்சியின் இறுதியில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் அதே இடத்தில் 88 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பம்ப்பிங் ஸ்டேஷன் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அந்தப் பணியும் இப்போது ஆமை வேகத்தில் நடக்கிறது. இன்னொருபுறம் செயல்படாத பம்ப்பிங் ஸ்டேஷனை, செயல்படுவதாகக் கணக்கு காட்டுவதுடன், பராமரிப்புக் கட்டணமாக மாதம்தோறும் பெரும் தொகையை முறைகேடாக எடுக்கிறார்கள்’’ என்றார் கொதிப்புடன்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி தட்சணாமூர்த்தியோ, ‘‘விவசாயத்துக்குப் பயன்படுத்தும் காவிரியின் கிளை ஆறான வடவாற்றிலேயே பல வருடங்களாகக் கழிவுநீரையும் திறந்துவிடுறாங்க. இதனால் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டிருக்கு. மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடெல்லாம் கழிவுநீரைக் குடிச்சு செத்துப்போகுது. வயலில் வேலை செய்யுற எங்களுக்கும் தோலில் அரிப்பு, கால்களில் வீக்கம் எனப் பல தொந்தரவுகள் ஏற்படுது.

ராஜேஸ்வரன், தட்சணாமூர்த்தி
ராஜேஸ்வரன், தட்சணாமூர்த்தி

பசுமையாக இருந்த பகுதிகளில் சில, கழிவுநீர் பாதிப்பால் பாலைவனம்போல மாறிவருகின்றன. பாதாளச் சாக்கடையால் பாழாகும் தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் பற்றி மாநகராட்சி அதிகாரிகள், அமைச்சர்கள் என எல்லோரிடமும் முறையிட்டுவிட்டோம். யாருமே கண்டுக்கலை’’ என்றார் புலம்பலாக.

தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதனிடம் இந்தப் பிரச்னை குறித்துக் கேட்டபோது, ‘‘பம்ப்பிங் ஸ்டேஷனில் சுத்திகரிப்பு செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த இரண்டு இயந்திரங்களில் ஒன்று பழுதாகி சில மாதங்களாகச் செயல்படவில்லை. அதைச் சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. புதிதாக ஓர் இயந்திரத்தை அமைக்கும் பணியும் தொடங்கப் பட்டிருக்கிறது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அதன் பணிகள் முடிவடைந்துவிடும். அதன் பிறகு கழிவுநீர் 100 சதவிகிதம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்படும்’’ என்று உறுதியளித்தார்.