Published:Updated:

ஹிந்துஜா குழுமத்தில் குடும்ப யுத்தம்! - ஆட்டம் காணும் சாம்ராஜ்ஜியம்!

ஸ்ரீசந்த், கோபிசந்த், பிரகாஷ், அசோக்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீசந்த், கோபிசந்த், பிரகாஷ், அசோக்

மற்ற மூன்று சகோதரர்களின் வாரிசுகளுக்கும் ஆதரவாக இருந்தது நான்கு சகோதரர்களும் கையெழுத்திட்ட ஓர் ஒப்பந்தம்தான்!

ஹிந்துஜா குழுமத்தில் குடும்ப யுத்தம்! - ஆட்டம் காணும் சாம்ராஜ்ஜியம்!

மற்ற மூன்று சகோதரர்களின் வாரிசுகளுக்கும் ஆதரவாக இருந்தது நான்கு சகோதரர்களும் கையெழுத்திட்ட ஓர் ஒப்பந்தம்தான்!

Published:Updated:
ஸ்ரீசந்த், கோபிசந்த், பிரகாஷ், அசோக்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீசந்த், கோபிசந்த், பிரகாஷ், அசோக்
லகின் ஆதி யுத்தம் சகோதரர்களுக்கு இடையில்தான் தோன்றியிருக்க வேண்டும். அதற்கு மகாபாரதத்திலிருந்து இன்றுவரை பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி ஒரு சகோதரச் சண்டை இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் குழுமமான ஹிந்துஜா நிறுவனத்தில் ஏற்பட்டிருப்பதுதான் லேட்டஸ்ட் சர்ச்சை.

இதுவரை ‘ஃபேபுலஸ் ஃபோர்’ (Fabulos Four) என்று பெருமையுடன் அழைக்கப்பட்டு, உலகின் கண்ணே பட்டுவிடும் என்ற அளவுக்கு ஒற்றுமையோடு திகழ்ந்த இந்தச் சகோதரர்கள்தான் தற்போது சகோதர யுத்தத்தில் சிக்கியிருக்கிறார்கள்.

ஹிந்துஜா குழுமத்தில் குடும்ப யுத்தம்! - ஆட்டம் காணும் சாம்ராஜ்ஜியம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஈரானில் தொடங்கிய ஹிந்துஜா..!

ஹிந்துஜா இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே தொடங்கப்பட்ட வணிக சாம்ராஜ்ஜியம். வணிகத்துக்குப் புகழ்பெற்ற சிந்து குடும்பத்தில் பிறந்தவர் பரமானந்த் தீப்சந்த் ஹிந்துஜா. இவரால் ஹிந்துஜா நிறுவனம் 1914-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிறகு 1919-ல் ஈரானில் தன் தொழிலைத் தொடங்கி, பிறகு பிரிட்டனுக்கு நகர்ந்து, அங்கிருந்து சர்வதேச ஏற்றுமதியில் கொடிகட்டிப் பறந்தது. பரமானந்துக்கு மொத்தம் நான்கு மகன்கள். மூத்தவர் ஸ்ரீசந்த், அடுத்து கோபிசந்த், மூன்றாவது பிரகாஷ், நான்காவது அசோக்.

ஹிந்துஜா குடும்பத்தின் அனைத்து நிறுவனங்களுக்கும் ஸ்ரீசந்த்தான் தலைவர். அவருக்கு இப்போது 84 வயது. கோபிசந்த்துக்கு தற்போது 79 வயது. இவர்தான் ஹிந்துஜா குழுமத்தின் துணைத் தலைவராகச் செயல்படுகிறார். மேலும், ஹிந்துஜா ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் தலைவராகவும் செயல்படுகிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மூன்றாமவரான பிரகாஷ் ஹிந்துஜா குழுமத்தின் மொத்த ஐரோப்பியச் செயல்பாடுகளையும் பார்த்துக்கொள்கிறார். இவருக்கு வயது 75. தமிழகத்தில் புகழ்பெற்ற அசோக் லேலாண்ட் நிறுவனம் நான்காவது மகனான அசோக்கின் தலைமையில் செயல்படுகிறது. இவருக்கு வயது 69.

ஸ்ரீசந்த், கோபிசந்த்
ஸ்ரீசந்த், கோபிசந்த்

இந்த நால்வரும் இணைந்து ஐ.டி., மீடியா, நிதித்துறை, ஆட்டோமொபைல் துறை, கட்டுமானம், கெமிக்கல் மற்றும் ஹெல்த்கேர் எனப் பல்வேறு துறைகளிலும் புகுந்து கலக்கிவருகிறார்கள்; உலகில் சுமார் 38 நாடுகளில் கிளைகளோடு தங்களின் நிறுவனத்தை விரிவாக்கம் செய்திருக்கிறார்கள்.

தற்போது ஹிந்துஜா குழுமத்தின் ஒட்டுமொத்த மதிப்பு கிட்டத்தட்ட ரூ.8.5 லட்சம் கோடி. ஹிந்துஜா சகோதரர்கள் லண்டன் பணக்காரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

சர்ச்சைக்குக் காரணமான வங்கி..!

பரமானந்த் உருவாக்கிய வணிக நிறுவனத்தை அவரின் இந்த நான்கு மகன்களும் எந்தக் குறையுமின்றி நடத்தி, ஒரு சாம்ராஜ்ஜியமாகவே அதை மாற்றியிருக்கிறார்கள். இவர்களுக்கு இடையே பெரிய பிரச்னைகள் உருவானதில்லை. இப்போது இந்த நால்வரின் மகன் மற்றும் மகள்கள் நிறுவனத்தின் பொறுப்புக்கு வந்து அதை ஏற்று நடத்துகிறார்கள். அனைத்து நிறுவனங்களிலும் நால்வருக்கும் பங்கு இருக்கும் நிலையில் ஒரு நிறுவனம் மட்டும் முழுக்க முழுக்க ஸ்ரீசந்த்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதுதான் ஹிந்துஜா பேங்க்.

சுவிட்சர்லாந்தில் செயல்படும் ஹிந்துஜா வங்கி, ஜெனீவாவில் 1978-ம் ஆண்டு நிதி நிறுவனமாகத் தொடங்கப்பட்டு, பிறகு 1994-ம் ஆண்டு வங்கியாக மாறியது. உலகமெங்கும் முக்கிய வணிக மையங்களில் இந்த வங்கியின் கிளைகள் உள்ளன. 2018-ம் ஆண்டு கணக்குப் படி, ஹிந்துஜா வங்கியின் ஆண்டு வருவாய் 50 பில்லியன் டாலர். இத்தனை பெரிய நிறுவனத்தை மூத்தவர் தன் மகளுக்கு தாரை வார்த்துவிட்டார் என்று பிற சகோதரர்களின் வாரிசுகள் புகார் சொல்லத் தொடங்கினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்ரீசந்த்துக்கு தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரின் மூத்த மகள் விநோ, தற்போது ஹிந்துஜா வங்கியை நிர்வகிக்கிறார். `இதில் அனைத்துச் சகோதரர்களின் வாரிசுகளுக்கும் பங்கிருக்கிறது’ என்ற புகார் எழுந்தது. மற்ற மூன்று சகோதரர்களின் வாரிசுகளுக்கும் ஆதரவாக இருந்தது 2014-ம் ஆண்டு நான்கு சகோதரர்களும் கையெழுத்திட்ட ஓர் ஒப்பந்தம்தான்.

பிரகாஷ், அசோக்
பிரகாஷ், அசோக்

எல்லா சொத்துகளும் நால்வருக்கே!

ஜூலை 2, 2014-ம் ஆண்டில் நான்கு சகோதரர்களும் இணைந்து ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம், `ஒரு சகோதரரிடம் இருக்கும் எந்தவொரு சொத்தும் நால்வருக்கும் சொந்தமானதே’ என்பதுதான்.

ஆனால், காலங்கள் மாறும், காட்சிகள் மாறும் என்பதுபோல ஸ்ரீசந்த் தற்போது ஹிந்துஜா வங்கி தனக்கு மட்டுமேயானது என்று சொந்தம் கொண்டாடத் தொடங்கினார். 2015-ம் ஆண்டு, மே மாதம் 2-ம் தேதி ஸ்ரீசந்த் தனது சட்ட ஆலோசனை நிறுவனமான கிளிஃப்போர்டு மூலம் ஒரு இ-மெயில் அனுப்பினார். அந்த மெயிலில் 2014-ல் செய்துகொண்ட ஒப்பந்தம் எந்தவிதத்திலும் தன்னைச் சட்டப்படிக் கட்டுப்படுத்தாது என்று தெரிவித்தார். மேலும், 2015 ஜூலை மாதம் ஸ்ரீசந்த் வெளியிட்ட கடிதத்தில் தன் மகள் விநோ நிறுவனத்தின் பொறுப்பை ஏற்று நடத்துவார் என்று தெரிவித்தார்.

ஒப்பந்தம் சட்டபூர்வமானதல்ல..!

ஸ்ரீசந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலமில்லாமல் இருக்கிறார். இந்த நிலையில், விநோவே ஸ்ரீசந்த்தின் சட்டபூர்வமான வாரிசாக வங்கியை நிர்வகிக்கிறார். மற்ற சகோதரர்கள் லண்டன் உயர் நீதிமன்றத்தில் 26 நவம்பர், 2019 அன்று வழக்கு தொடுத்தார்கள். தங்களுக்குச் சாதகமாக இருக்கும் நான்கு சகோதரர்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தமும் சமர்ப்பிக்கப்பட்டது.

விநோ, தன் தந்தையின் சார்பாகத் தன்னை அறிவித்து வாதாட அனுமதி பெற்றார். அவர் முன்வைத்தது முக்கியமான வாதம். அந்தக் கடிதம் ஓர் உயிலோ அல்லது சட்ட மதிப்புள்ள பதிவு செய்யப்பட்ட ஆவணமோ அல்ல என்று தன் தரப்பை முன்வைத்தார். அந்த வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம், ‘அந்த ஒப்பந்தம் சட்டபூர்வமானதல்ல’ என்று தீர்ப்பு வழங்கி வழக்கை ஸ்ரீசந்த் தரப்புக்கு சாதகமாக்கி முடித்துவைத்தது. அதுபோக, `வழக்குக்கு செய்யப்பட்ட செலவான ரூ.1,77,00,000-ஐ ஸ்ரீசந்த் தரப்புக்குத் தர வேண்டும்’ என்றும் தீர்ப்பு வழங்கியது.

இந்தப் பணமெல்லாம் ஹிந்துஜா சகோதரர்களுக்குப் பெரிய தொகை இல்லை. ஆனாலும், ‘‘குடும்பத்துக்குள் தீர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு பிரச்னையை நீதிமன்றம் வரை கொண்டு சென்றுவிட்டாரே...’’ என்று ஸ்ரீசந்த் மகளான விநோவின் மீது மிகவும் வருத்தப்படுகிறார்கள் ஹிந்துஜா சகோதரர்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் மூன்று சகோதரர்களும் ‘‘அரை நூற்றாண்டுக்கும் மேலாக தாங்கள் பாதுகாத்துவந்த குடும்ப விழுமியங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டன’’ என்று வருத்தப்பட்டிருக்கிறார்கள்.

சகோதரர்களின் ஒற்றுமைதான் அவர்களை இந்த உயரத்துக்கு உயர்த்தியது என்பதை அவர்களின் அடுத்த தலைமுறை உணர்ந்துகொண்டால், இதுபோன்ற சண்டைகளெல்லாம் ஹிந்துஜாவில் மட்டுமல்ல, வேறு எந்த நிறுவனத்திலும் எழாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism