Published:Updated:

அடல் பென்ஷன் திட்டம்... கூடுதல் சலுகைகள்..!

அடல் 
பென்ஷன் 
திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
அடல் பென்ஷன் திட்டம்

விடுபட்ட மாதங்களுக்குரிய சந்தா தொகையை அபராத வட்டி எதுவுமில்லாமல் செலுத்தலாம்!

டல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் (APY) 18 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்தியக் குடிமக்கள் அனைவரும் வங்கிக் கிளைகள் அல்லது தபால் அலுவலகங்கள் மூலம் சேரலாம். இந்தத் திட்டத்தில் 60 வயது வரை முதலீடு செய்தால், அதன் பிறகு பென்ஷன் கிடைக்கும். இவர்களுக்கு வங்கிச் சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டியது அவசியம். அதன் மூலம்தான் இந்தத் திட்டத்துக்கான மாதச் சந்தாவைச் செலுத்த முடியும்.

ஜூலை 1-ம் தேதி முதல் வருடத்தில் எந்த மாதத்திலும் சந்தா தொகையை மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு முன்னர் இந்த வசதி ஏப்ரல் மாதத்தில் மட்டும் என்றிருந்தது. இதனால், சந்தாதாரர்களின் வருமானம் குறைந்திருக்கும் காலத்தில் சந்தாவைக் குறைவாகச் செலுத்த முடியும். இந்தத் திட்டத்தில் இணைந்திருப்பவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் என்பதால், இந்த மாற்றம் அவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பி.எஃப்.ஆர்.டி.ஏ), அனைத்து வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களுக்கு இது குறித்த உத்தரவை அனுப்பியுள்ளது.

அடல் 
பென்ஷன் 
திட்டம்
அடல் பென்ஷன் திட்டம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கோவிட் பாதிப்பால், ஜூன் 30 வரை சந்தா தொகையை வங்கிக் கணக்கிலிருந்து தானாக எடுத்துக்கொள்ளும் வசதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் அந்த வசதி கொண்டு வரப்பட்டிருப்பதுடன், `விடுபட்ட மாதங்களுக்குரிய சந்தா தொகையை அபராத வட்டி எதுவுமில்லாமல் செலுத்தலாம்’ என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.