Published:Updated:

ரயிலில் அனுப்பப்பட்ட பெண் உடல் மாயம்; 200 கிலோமீட்டர் தூரத்தில் மீட்பு!

ரயிலில் ஏற்றப்பட்ட சவப்பெட்டி

மும்பையிலிருந்து உத்தரப்பிரதேசத்துக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட பெண் உடல் காணாமல் போய்விட்டது.

ரயிலில் அனுப்பப்பட்ட பெண் உடல் மாயம்; 200 கிலோமீட்டர் தூரத்தில் மீட்பு!

மும்பையிலிருந்து உத்தரப்பிரதேசத்துக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட பெண் உடல் காணாமல் போய்விட்டது.

Published:Updated:
ரயிலில் ஏற்றப்பட்ட சவப்பெட்டி

இறந்தவர்களின் உடல்களை ரயில்களில் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்வது வழக்கம். அது போன்று மும்பையிலிருந்து ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு பெண்ணின் உடல் காணாமல் போய்விட்டது. மும்பையில் வசிக்கும் குல்பாம் ஷேக் என்பவர் உத்தரப்பிரதேசத்திலிருந்து தனது தாயாரை மும்பைக்கு அழைத்து வந்து தன்னுடன் வைத்திருந்தார். அவரின் தாயார் சர்வாரி ஷேக்குக்கு புற்றுநோய் இருந்தது. இதற்காக டாடா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சமீபத்தில் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனார். இதனால் குல்பாம் ஷேக் தன் தாயாரின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல முடிவு செய்தார். தாயாரின் உடலை வாரணாசி செல்லும் ரயிலில் அனுப்பிவைத்தார்.

ரயிலில் ஏற்றப்பட்ட சவப்பெட்டி
ரயிலில் ஏற்றப்பட்ட சவப்பெட்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரயில் வாரணாசி சென்றவுடன் குல்பாம் ஷேக் தனது உறவினர்களுடன் தனது தாயாரின் உடலை எடுக்கச் சென்றபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரயிலில் அனுப்பப்பட்ட உடல் காணாமல் போயிருந்தது. இது குறித்து ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டனர். மும்பையிலிருந்து வாரனாசி வரும் ரயில் தடம் முழுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினர் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 12 மணி நேர தேடுதலுக்குப் பிறகு மத்தியப் பிரதேசத்திலுள்ள மைஹர் என்ற ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் தண்டவாளத்தில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது வாரணாசியிலிருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் உடல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நடந்த சம்பவத்துக்கு இறந்த பெண்ணின் உறவினர்கள்தான் காரணம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். உடல் ஏற்றப்படும் பெட்டியில் உறவினர் ஒருவர் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இதில் உறவினர் யாரும் உடல் இருந்த பெட்டியில் இல்லை. எனவே, ரயில் வேகமாகச் சென்றபோது சவப்பெட்டி நகர்ந்து நகர்ந்து கீழே விழுந்துவிட்டது என்று தெரிவித்தனர். ஆனால் ரயில்வேயின் கவனக்குறைவு காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்திருப்பதாக குல்பாம் ஷேக் தெரிவித்தார். நடந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism