Published:Updated:

மார்ச் 31-க்குள் ஆதார் கார்டையும், பான் கார்டையும் இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

ஆதார்
ஆதார்

வங்கியில் வைத்திருக்கும் வைப்பு நிதிக்கு இந்த 2019-20-ம் நிதியாண்டில் ஒருவருக்கு ரூ.40,000-க்கும் அதிகமான வட்டி வருமானம் இருந்தால், அவரிடம் செயல்பாட்டிலுள்ள பான் எண் இருந்தால் 10% வரிப் பிடித்தம் செய்யப்படும்;

ஒருவர் ஆதார் கார்டையும், பான் கார்டையும் 2020 மார்ச் 31-க்குள் இணைக்காமல் விட்டுவிட்டால், அவரின் பான் எண்ணை வருமான வரித்துறை செயலிழக்கச் செய்துவிடும் (Deactivate). எப்போது அவர் பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைக்கிறாரோ அப்போதுதான் அவரின் பான் எண் செயல்படுத்தப்படும் (Activate). இதற்கான வழிமுறைகள் வருமான வரிச் சட்டத்தில் விதி எண் 113AAA-ல் உருவாக்கித் தரப்பட்டுள்ளன.

இணைக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்:

ஆதார் கார்டையும், பான் கார்டையும் இணைக்காமல்விட்டால், பான் எண் செயலிழக்கும் அபாயமுண்டு. அதாவது, இணைக்கப்படாத பான் எண் இனி இயங்காமல் போய்விடும். அந்த நிலை ஏற்பட்டால், ஒருவருக்குக் கிடைக்கும் வருமானத்தில் வரிப் பிடித்தம் செய்யும்போது (TDS), அதிக சதவிகிதத்துக்கு வரிப் பிடித்தம் செய்யப்படும்.

உதாரணமாக, வங்கியில் வைத்திருக்கும் வைப்பு நிதிக்கு இந்த 2019-20-ம் நிதியாண்டில் ஒருவருக்கு ரூ.40,000-க்கும் அதிகமான வட்டி வருமானம் இருந்தால், அவரிடம் செயல்பாட்டிலுள்ள பான் எண் இருந்தால் 10% வரிப் பிடித்தம் செய்யப்படும்; பான் எண் இல்லாமலிருந்தால் 20% வரிப் பிடித்தம் செய்யப்படும்.

மார்ச் 31-க்குள் ஆதார் கார்டையும், பான் கார்டையும் இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

மேலும், வருமான வரிச் சட்டப்படி பான் கார்டு இல்லாமல் 18 விதமான நிதி சார்ந்த நடவடிக்கைகளையும் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியாது. அவற்றில் குறிப்பிடத்தகுந்த சில அம்சங்கள்...

1. மோட்டார் வாகனம் வாங்க, விற்க

2. வங்கியில் புதிய கணக்கு தொடங்க

3. வங்கியில் கிரெடிட் கார்டு வாங்க

4. டீமேட் கணக்கு தொடங்க

5. ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் பில் தொகை ரூ.50,000-க்கு மேல் பணமாகச் (Cash Payment) செலுத்த

6. வங்கியில் ரூ.50,000-க்கு மேல் பணம் டெபாசிட் செய்ய

7. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரூ.50,000-க்குமேல் முதலீடு செய்ய

8. ஆயுள் காப்பீடு பிரீமியம் தொகை ஒரு நிதியாண்டில் ரூ.50,000-க்கு மேல் செலுத்த

9. அசையாச் சொத்துகள் பத்திரப்பதிவு அடிப்படையில் ரூ.10 லட்சத்துக்கு மேல் வாங்க, விற்க

10. எந்தவிதமான சரக்கு வாங்கும்போதும், விற்கும்போதும், சேவை பெறும்போதும், தரும்போதும் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனை செய்ய.

`மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு செயலிழக்கப்படும் பான் எண் விவரங்களைச் சரிபார்க்கும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்’ என்று வருமான வரித்துறை மூத்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

மார்ச் 31-க்குள் ஆதார் கார்டையும், பான் கார்டையும் இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

- ஆதார் கார்டு எண்ணை (Aadhaar Card Number) பான் கார்டு எண்ணுடன் (PAN Card Number) இணைப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆதார் கார்டை பான் கார்டுடன் ஏன் இணைக்க வேண்டும்? எப்படி இணைக்க வேண்டும்? யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது? - இதுதொடர்பான கைடன்ஸ் கட்டுரையை நாணயம் விகடன் இதழில் வாசிக்க > ஆதார் கார்டு - பான் கார்டு இணைப்பு... ஏன்... எதற்கு... எப்படி? https://www.vikatan.com/news/general-news/why-and-how-should-you-link-aadhar-and-pan-cards

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு