எங்கு பார்த்தாலும் பொருளாதார மந்தநிலை பற்றிய பேச்சுகளே அடிபடுகின்றன. பெரிய நிறுவனங்களில் உற்பத்தி மற்றும் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதனால், பெரிய நிறுவனங்களைச் சார்ந்து இயங்குகிற சிறு, குறு நிறுவனங் களும் பாதிப்பு அடைகின்றன. இதன் தாக்கம், உடனடியாக வங்கிகளின் வாராக்கடனாக உருவெடுக்கின்றன. இதனால் நிறுவனங்களின் செயல்பாடுகளில் மேலும் தொய்வு ஏற்படுகிறது. ஒட்டுமொத்தத்தில், நுகர்வோர் தேவை குறைகிறது.

இந்த நிலையில், ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது. அதுதான், வீடு கட்டுவதற்குத் தேவைப்படும் பொருள்களின் விலை குறைந்திருப்பது. சமீபத்தில் இல்லாத அளவுக்கு வீடுகட்டத் தேவைப்படும் பொருள்களின் விலை குறைந்திருப்பது, வீடு கட்டலாமா என்கிற யோசனையில் இருப்பவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். வீடுகட்டத் தேவைப்படும் பொருள்களின் விலை ஏன் குறைந்தது, இது வீடு கட்ட சரியான நேரமா என்கிற கேள்விகளுக்கான பதிலைப் பார்ப்போம்.

பொருளாதார மந்தநிலை நிலவிவரும் இந்தச் சமயத்தில், விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு சில நிறுவனங்கள் பொருள்களின் விலையைக் குறைத்துவிற்கின்றன. பொருளாதாரத்தில் அனைத்துமே சுழற்சியின் அடிப்படையில் இயங்குகின்றன என்றாலும், பெரிய நிறுவனங்களோ சிறு நிறுவனங்களோ, எதுவாக இருப்பினும் இத்தகைய காலகட்டங் களையெல்லாம் தாக்குப்பிடிக்கிற நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும்.

இரும்புப் பொருள்கள்

பொதுவாக, ஒரு துறையில் மூலப்பொருள்களின் விலைச்சரிவு, மற்றொரு துறையின் வளர்ச்சிக்குச் சாதகமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, சந்தையின் டிமாண்ட் காரணமாக, ஸ்டீல் தயாரிக்கத் தேவையான மூலப்பொருளான இரும்புத்தாதுவின் விலை 1 மெட்ரிக் டன் 50 அமெரிக்க டாலரிலிருந்து படிப்படியாக உயர்ந்து 185 டாலர்கள் வரை அதிகரித்தன. இந்த விலையேற்றத்தை டாடா ஸ்டீல் போன்ற நிறுவனங்கள், நுகர்வோரிடமிருந்து வசூலித்தன. இதனால் வீடுகட்டத் தேவையான இரும்பின் விலை நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தது.

ஆனால், இன்றோ நிலைமை தலைகீழ். 185 டாலராக இருந்த இரும்புத்தாதுவின் விலை இன்று 85 டாலர்களாகக் குறைந்திருக்கிறது. சர்வதேசச் சந்தையில் இரும்பின் விலை குறைந்த தால், உள்நாட்டிலும் குறைக்க வேண்டிய கட்டாயம் இரும்பு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்போது வீடு கட்ட நினைப்பவர்களுக்கு யோகம் அடித்திருக்கிறது.

இந்தியாவின் மொத்த இரும்புத் தேவையில் 55% என்ற அளவிற்குக் கட்டுமானத் துறையும் 10% முதல் 15% வரை வாகனத்துறையும் பூர்த்தி செய்து வருகிறது. அரசாங்கம் கட்டுமானத்துறையை ஊக்குவிக்கப் பல்வேறு திட்டங்களை அறிவித்ததாலும், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு இல்லாத காரணத்தாலும் மற்றும் வாகனத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாகவும் இரும்பின் தேவை குறைந்துள்ளது. இந்த இரண்டு துறைகளுமே, உடனடியாக சகஜநிலைமை திரும்புவதற்கான வாய்ப்புகள் இல்லையென்பதால், இரும்புக்கான தேவை கடுமையாகக் குறைய வாய்ப்பிருக்கிறது.

உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும்போது, குறிப்பாக ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தத்தைப் (Free Trade Agreement - FTA) பயன்படுத்தி நம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யலாம் என்ற அச்சமும் சந்தையில் நிலவுகிறது. மேலும் அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப்போர், உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கிறபோது, சீனாவின் உலோகத் தேவை கணிசமான அளவிற்குக் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. (பார்க்க வரைபடம் 1)

சிமென்ட்

2017-18-ம் நிதியாண்டில் 9% வளர்ச்சி காணப் பட்டது. 2018-19-ம் நிதியாண்டில் 12 சதவிகிதமாக அதிகரித்தது. ஆனால், 2019-20-ம் ஆண்டில் இந்த வளர்ச்சியானது 5 - 5.5 சதவிகிதமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசு சார்ந்த செலவினங்கள் குறைந்து காணப்பட்டது. 35% முதல் 40% வரையிலான சிமென்ட் தேவையைக் குறைக்கச் செய்ததும் ரியல் எஸ்டேட் நிறுவனங் களின் செயல்பாடுகளில் சுணக்கம் என்ற வகையில் 5% - 8% வரையிலான சிமென்ட் தேவையைக் குறைக்கச் செய்ததும் முக்கியமான காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. அதே சமயத்தில், 2019-ம் ஆண்டுத் தொடக்கத்தில் ஒரு மூட்டை சிமென்ட் ரூ.50 (தென் இந்தியாவில் ரூ.70 வரையிலும்) என்ற அளவில் உயர்த்தி விற்பனை செய்தன. இதனால் நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் தொடங்கி மே இறுதி வரையிலான காலத்தில் இந்தியா முழுவதுமாகச் சராசரியாக 12% விலை உயர்ந்தது.

ஆனால், தேவை மிகக் குறைவாக இருப்பதைத் தொடர்ந்து, சிமென்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் வேறு வழியில்லாமல் விலையைக் குறைக்கத் தொடங்கின. தேவை தொடர்ந்து குறைந்து வருவதால், சிமென்டின் விலையையும் தொடர்ந்து குறைத்து வருகின்றன சிமென்ட் தயாரிக்கும் நிறுவனங்கள்.

மேலும், நடப்பு இரண்டாம் அரையாண்டில் சிமென்ட் உற்பத்தியானது 14 முதல் 15 மெட்ரிக் டன்கள் வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வரும் மாதங்களில் சிமென்டின் விலை மேலும் 10% வரை இறக்கம் காண வாய்ப்பிருக்கிறது. (பார்க்க வரைபடம் 2)

விலைச்சரிவு நுகர்வோருக்குப் பயன் அளிக்குமா?

கட்டுமானத்துறை சார்ந்த பொருள் களின் விலைச்சரிவு நுகர்வோருக்கு அதாவது, சாமானிய மக்களுக்குச் சாதகமான செய்தியாக பார்க்கப் படுகிறது. வீடு கட்டலாம் என்று முடிவு எடுத்துள்ளவர்கள், தற்போதைய மந்தமான சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி அழகாக வீடு கட்டத் தொடங்கலாம்.

கட்டுமானப்பொருள்களின் தற்போதைய விலைக்கும், இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்த விலையுடன் ஒப்பிடும்போது, எந்த அளவிற்கு சேமிப்புத் தரக்கூடியதாக இருக்கும் என்பதை விளக்கமாகப் பார்க்கலாம். (பார்க்க கட்டுமானப் பொருள்களின் விலை வித்தியாசம் அட்டவணை)

1000 சதுர அடியில் ஒருவர் வீடு கட்ட முனைகிறார் எனில், மொத்த செலவில் எந்தெந்தத் துறைக்குத் தோராயமாக செலவுகள் செய்ய வேண்டியிருக்கும், அதில் எந்தத் துறையில் விலைச் சரிவு காணப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

சிமென்ட் - 13%, ஸ்டீல் - 20%, மணல் - 20%, ஜல்லி, கிராவல் - 8%, பெயின்ட், தரை ஓடுகள் மற்றும் செங்கல் - 16%, ஜன்னல், கதவுகள், பிளம்பிங், எலெக்ட்ரிக்கல் 23%, மொத்தம் - 100%

(மேற்கண்ட துறை சார்ந்த செலவுகள், இடத்திற்கு இடம் மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.)

கட்டுமானப்பொருள்களின் விலைச்சரிவு, வங்கிகளின் வீட்டுக்கடன் மீதான வட்டி குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பது மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பலன் ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்களின் கனவை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

எவ்வளவு விலை குறையும்?

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் விவசாயத்துக்கு அடுத்த மிகப் பெரிய துறையாக இருப்பது, ரியல் எஸ்டேட் துறை. பணமதிப்பு நீக்கம், பத்திரப்பதிவுக் கட்டண உயர்வு, ஜி.எஸ்.டி வரி விதிப்பில் முரண்பாடுகள் குறிப்பாக, கட்டுமானப்பொருள்களுக்கு விதிக்கப்பட்ட அதிகப்படியான ஜி.எஸ்.டி, புதிய ஒழுங்குமுறை சட்டம் (ரெரா) உள்ளிட்ட அடுத்தடுத்த அதிரடிகளால் இந்தத் துறையில் கடந்த சில ஆண்டுகளாகத் தேக்கநிலை ஏற்பட்டது.

தற்போது நிலவிவரும் பொருளாதார மந்தநிலையின் விளைவாக, சமீப காலத்தில் கட்டுமானத்துக்குப் பயன்படும் சிமென்ட், ஸ்டீல், மணல், ஜல்லி, கிராவல், செங்கல், தரை ஓடுகள், பெயின்ட், ஜன்னல், கதவுகள், பிளம்பிங், எலெக்ட்ரிகல் போன்ற கட்டுமானப்பொருள் களின் விலை 10% முதல் 15% வரைக்கும் குறைந்திருக்கிறது.

இந்தக் கணக்குப்படி பார்த்தால், 1,000 சதுர அடி கட்டுவதற்கு சுமார் ரூ.1.5 லட்சம் வரை செலவு குறைகிறது. எனவே, அடுக்குமாடிக் கட்டடங்கள் உள்பட புதிய வீடுகளின் விலை குறைய வாய்ப்புள்ளது.

‘‘புதிய வீடு கட்ட சரியான தருணம்தான்!’’

வ.நாகப்பன், நிதி ஆலோசகர்

“பொருளாதார மந்தநிலை காரணமாக கட்டுமானப்பொருள்களின் விலை சற்றுக் குறைந்திருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, கட்டுமானத்துக்கு உதவும் இரும்புக் கம்பிகள் விலை குறைந்துள்ளது. இதன் விலை ஏறாமல் அப்படியே இருந்தாலேகூட அது விலைக்குறைவுக்கு ஒப்பானதுதான்.

தற்போது கட்டுமான வேலைகள் அதிகமில்லாததால், பில்டர்களுக்கு அதிக வேலை இருக்காது. எனவே, இந்தச் சூழலில் அவர்களுக்கு வீடு கட்டும் பணியைக் கொடுத்தால் குறைந்த லாப வரம்புக்குள் செய்துமுடிப்பார்கள். காலம் கடத்தாமல் விரைவாகவும் வேலையை முடித்துத் தருவார்கள். எனவே, புதிய வீடு கட்டுவோருக்கு ஏற்ற தருணமாகத்தான் இதை நான் பார்க்கிறேன்.

வீட்டுக்கடனைப் பொறுத்தவரை, முன்பிருந்த விகிதத்துடன் ஒப்பிடுகையில், வட்டி விகிதம் குறைந்துள்ளது. எனவே, இதுவும் சாதகமான அம்சம்தான். அடுத்ததாக, ஒருவரின் கையில் பணம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதை வங்கி வைப்புத்தொகையாக முதலீடு செய்தால் வட்டி குறைவாகவே இருக்கும். அதற்கு அடுத்தகட்ட முதலீடு என்று பார்த்தால் தங்கம், ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை ஆகியன வருகின்றன. தங்கத்தின் விலை ஏற்கெனவே ஏறிவிட்டதால், அதைத் தவிர்த்துவிட்டு, வீடு கட்டுவதற்காகப் பயன்படுத்துவதே சரியானதாக இருக்கும்.

பங்குச் சந்தை ஓரளவுக்குக் குறைந்திருந்தாலும்கூட அனுபவமுள்ளவர்கள் மட்டுமே அதில் முதலீடு செய்வது சரியாக இருக்கும். தற்போது, ‘ரெரா’ மிகக் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் செய்யப்படும் முதலீடுகளும் பாதுகாப்பானவையே என்பதால், இதில் நம்பிக்கையாக முதலீடு செய்யலாம்.”

- தெ.சு.கவுதமன்

‘‘அடுக்குமாடி வீடுகள் விலை குறைய வாய்ப்புண்டு!’’

மணிசங்கர், தலைவர், ஃப்ளாட் அண்டு ஹவுஸிங் புரமோட்டர்ஸ்

“தற்போது கட்டுமானப்பொருள்களின் விலை குறைந்துள்ளதால், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மத்திய அரசு கொண்டுவந்த ‘வாங்கத் தகுந்த விலையிலான வீடுகள்’ (Affordable), தற்போது சென்னைப் புறநகர்ப் பகுதியில் ஓரளவு குறைந்த விலைக்குக் கிடைப்பதால், அவற்றின் விற்பனை நல்ல நிலையில் இருக்கிறது.

ஆனால், பெரிய குடியிருப்புகள், வில்லாக்கள் உள்ளிட்ட வீடுகளின் விற்பனை மந்தமாக உள்ளது. வீட்டுக்கடன் வட்டி விகிதம், ஜி.எஸ்.டி என இதற்குக் காரணங்களைச் சொல்கிறார்கள். ஆனால், வீடு வாங்குவதற்கான பணம் கொடுக்கல் வாங்கலில் இருக்கும் சிக்கலும் முக்கியமான காரணம் ஆகும். இதற்கு அடுத்துதான் ஜி.எஸ்.டி, பத்திரப்பதிவுக் கட்டணம் போன்ற காரணங்களைச் சொல்லலாம்.

ஜி.எஸ்.டியைப் பொறுத்தவரை, கட்டுமானப்பொருள்களின் மீதான ஜி.எஸ்.டி அளவைக் குறைத்தால், வீட்டு விலையும் கணிசமாகக் குறையும். ஜி.எஸ்.டியைக் குறைப்பது தொடர்பான கலந்தாலோசனைகள் நடந்துவருகின்றன. எனவே, ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டால், வீட்டு விலை மேலும் குறைவதற்கான வாய்ப்புள்ளது. வீட்டுவிலை குறையும்போது வாங்கும் சக்தியும் அதிகரிக்கிறது. வாங்கும் சக்தி அதிகரிக்கும்போது விற்பனை அதிகரிக்கும்.

-தெ.சு.கவுதமன்