Published:Updated:

ePass உஷார்: ரஜினியின் மொத்த பயோடேட்டாவும் உருவப்பட்டது எப்படி?

ரஜினி
ரஜினி

வெளியான ரஜினியின் இ-பாஸை வைத்து அவரின் மொத்த பயோடேட்டாவையும் வெளிக்கொண்டு வந்துவிட்டனர் நெட்டிசன்கள். 'ரஜினிக்கே இந்தக்கதி என்றால்...?' என்ற கேள்வி சாதாரண சிட்டிசனுக்கு எழுத்தானே செய்யும்

ரஜினி இ-பாஸ் இல்லாமல் சென்னையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்துக்குச் சென்றதாக சர்ச்சை எழுந்தது.

இரண்டு நாள்கள் கழித்து புதிதாக ஒரு இ-பாஸ் ஆதாரத்தை ரஜினிகாந்த் தரப்பு வெளியிட, அது சொந்தச் செலவில் சூனியம் ஆனது. கேளம்பாக்கத்தில் இருக்கும் மகள் சௌந்தர்யாவின் வீட்டுக்கு ரஜினி மருத்துவக் காரணங்களுக்காகச் சென்றதாக அந்த இ-பாஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.

'மகள் வீட்டுக்குப் போவதில் என்ன மருத்துவ அவசரம்?', இ-பாஸ் தேதி, ரஜினி பயணித்த வாகனம் என அடுக்கடுக்காக வைக்கப்பட்ட பல கேள்விகளுக்கு ரஜினி தரப்பிலிருந்து முறையான பதில்கள் இல்லை.

அது ஒருபக்கம் இருக்கட்டும், ஆனால் வெளியான ரஜினியின் இ-பாஸை வைத்து அவரின் மொத்த பயோடேட்டாவையும் வெளிக்கொண்டு வந்துவிட்டனர் நெட்டிசன்கள். 'ரஜினிக்கே இந்தக்கதி என்றால்...?' என்ற கேள்வி சாதாரண சிட்டிசனுக்கு எழுத்தானே செய்யும்.

ரஜினி
ரஜினி

சரி, இந்தத் தகவல்களை எப்படி எடுத்தனர்?

ரஜினியின் இ-பாஸை வெளியிட்ட ஊடகங்கள், அதிலிருக்கும் முக்கியத் தகவல்களை மறைத்தே வெளியிட்டனர். ஆனால் அதிலிருக்கும் QR கோடை மட்டும் ஸ்கேன் செய்து ரஜினியின் இ-பாஸை அனைவராலும் பதிவிறக்க முடிந்தது.

ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டு முகவரி, கேளம்பாக்கம் வீட்டு முகவரி, ரஜினி எந்தக் காருக்கு இ-பாஸ் வாங்கினார், அவரது ஆதார் கார்டு எண் என்ன என எல்லாத் தகவல்களும் அதன்மூலம் கிடைத்துவிட்டன.

அதுமட்டுமல்ல, சீட் பெல்ட் அணியாமல் வண்டி ஓட்டிய காரணத்திற்காக ரஜினிக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. ஒரு மாத காலமாக அதைக் கட்டாமல் வைத்திருந்தார் ரஜினி. இந்த விவரத்தையும்கூட சிலர் தோண்டி எடுத்துவிட்டார்கள். (ஜூலை 23-ம் தேதி அதைக் கட்டிவிட்டார்)

எப்படி இதெல்லாம் சாத்தியமானது..? ஒன்றும் பெரிய விஷயமில்லை. அரசே அனைத்தையும் வெளிப்படையாகப் பொதுவெளியில் வைத்திருக்கிறது. mParivahan என்ற செயலி உங்களிடம் இருந்தால் போதும். அதில் ஒரு வாகனத்தின் பதிவு எண்ணை மட்டும் குறிப்பிட்டால், அதன் உரிமையாளர் யார், அவருடைய டிரைவிங் வரலாறு என்ன என்பதையெல்லாம் கண்டுபிடித்துவிட முடியும்.

- எல்லோரும் ரஜினி ஆக முடியாது. ஆனால், ரஜினிக்கு வந்த பிரச்னை எல்லோருக்கும் வந்துவிடவும் கூடாது. இதற்கு நாம் தெரிந்துவைத்திருக்க வேண்டிய விஷயங்களைச் சொல்லும் ஆனந்த விகடன் கட்டுரையை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3f88q2U > ரஜினிக்கு நடந்தது உங்களுக்கும் நடக்கலாம் உஷார்! https://bit.ly/3f88q2U

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு