Published:Updated:

பொருளாதார மந்தநிலை... முதலீட்டாளர்கள் செய்யவேண்டியது என்ன?

Investment
பிரீமியம் ஸ்டோரி
Investment

முதலீடு

பொருளாதார மந்தநிலை... முதலீட்டாளர்கள் செய்யவேண்டியது என்ன?

முதலீடு

Published:Updated:
Investment
பிரீமியம் ஸ்டோரி
Investment

ம் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் இந்த நிலையில் பங்குச் சந்தைகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு உள்பட எல்லா முதலீடுகளின் மதிப்பும் கணிசமாகக் குறைந்துள்ளன. இந்த நிலையில், முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

வைப்பு நிதி

‘‘பணவீக்கம் குறைவாக இருப்பதால், தற்போது வங்கி மற்றும் நிறுவன வைப்பு நிதித்திட்டங்களின் வட்டி விகிதம் லாபகர மானதாக உள்ளது. எனவே, வைப்புநிதியில் நீண்ட காலத்துக்கு ‘லாக்இன்’ செய்துகொள்வது நல்லது.

Va Nagappan
Va Nagappan

தங்கம்

பல ஆண்டுகளாக இறக்கத்திலிருந்த தங்கம் தற்போது ஏறத் தொடங்கியுள்ளது. இதற்குமேலும் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது. அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது மற்றும் பல நாட்டு வங்கிகள் திடீரென கணிசமான அளவில் தங்கம் வாங்கத் தொடங்கியது ஆகிய காரணங்களால் தங்கம் விலை ஏறியுள்ளது. தற்போதைக்கு தங்கத்தின் விலையில் பெரிய அளவில் இறக்கம் வர வாய்ப்பு குறைவு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொருளாதார மந்தநிலை... முதலீட்டாளர்கள் செய்யவேண்டியது என்ன?

எனவே, ஏற்கெனவே தங்கம் வாங்கியவர்கள் அப்படியே வைத்துக்கொள்ளலாம். புதிதாக வாங்க நினைப்பவர்கள், அவ்வப்போது ஏற்படும் சிறிய இறக்கங்களின்போது வாங்கலாம். அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் தங்கம் தேவை எனக் கருதுபவர்கள் மட்டுமே தற்போது வாங்குவது நல்லது. ஐந்தாண்டுக்காலத்துக்குப்பின்பு தான் தங்கம் தேவை என்றிருப்பவர்கள், மத்திய அரசு ரிசர்வ் வங்கி வெளியிடக் கூடிய தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்வது நல்லது. இதில் செய்யப்படும் முதலீட்டுக்கு வட்டி வருமானம் உண்டு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட் துறை, கடந்த பத்தாண்டு களாக விலை ஏறாமலே உள்ளது. பல இடங் களில் விலை இறங்கவும் செய்திருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் இறக்கம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அப்படி இறங்கும்போது, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்கள் செய்யலாம். சொந்தத் தேவைக்காக வீடு வாங்க நினைப்பவர்கள், காத்திருப்பதைவிட இப்போதே வாங்கிக்கொள்ளலாம்.

பொருளாதார மந்தநிலை... முதலீட்டாளர்கள் செய்யவேண்டியது என்ன?

வருங்காலத்தில், ரியல் எஸ்டேட் துறை முழுவதையும் ஆதாருடன் அல்லது பான் கார்டுடன் இணைக்க வேண்டுமென்று ஏதேனும் சட்டம் வந்தால், மீண்டும் அனைத்துப் பத்திரங் களையும் பதிவுசெய்ய வேண்டியிருக்கும். அப்படிச் செய்தால், ரியல் எஸ்டேட் துறை மீண்டெழுவது அடுத்த சில ஆண்டுகளுக்குத் தடைப்படுவதுடன், மேலும் விலைச்சரிவைச் சந்திக்க நேரிடலாம். இதனால் சிறு முதலீட்டாளர் களுக்குப் பாதிப்பு இருக்காது. ஆனால், இந்தத் துறையில் பெரிய அளவில் ஈடுபடுபவர்களுக்குப் பாதிப்பு இருக்கும்.

பங்குச் சந்தை / மியூச்சுவல் ஃபண்ட்

தற்போதுள்ள நிலையிலிருந்து பங்குச் சந்தை மேலேறி வர இரண்டு ஆண்டுகள்கூட ஆகலாம். இந்த இரண்டு ஆண்டுகளில் பங்குச் சந்தை கீழே இறங்கும் வாய்ப்புகளே அதிகம். குறிப்பாக, லார்ஜ் கேப் மற்றும் முன்னணிப் பெருநிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகம் இறங்க வாய்ப்புள்ளது. எனவே, லார்ஜ்கேப் பங்குகள் மற்றும் ஃபண்டு களை சற்றுப் பொறுத்து வாங்கலாம்.

ஸ்மால்கேப், மிட்கேப் பங்குகளில் ஏற்கெனவே பெரிய அளவிலான வீழ்ச்சி நடந்துவிட்டது. இதற்குமேல் பெரிதும் வீழ்ச்சியடைய வாய்ப்பு குறைவே. நல்ல மிட்கேப் பங்குகள் மற்றும் ஃபண்டுகளை இப்போதே வாங்கத் தொடங்கலாம். காரணம், பல பங்குகள் விலை குறைவாகவும் நியாயமான மதிப்பிலும் கிடைக்கின்றன. நல்ல நிர்வாகத் திறனும் நேர்மையான அணுகுமுறையும் கொண்ட நிறுவனமா என்பதைக் கவனித்து, எஸ்.ஐ.பி முறையில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம். ஸ்மால்கேப் பங்குகள் மற்றும் ஃபண்டுகளைத் தயவுசெய்து வாங்க வேண்டாம். சிறு முதலீட்டாளர்களுக்கு அது ரிஸ்க்கானது.’’

நிபுணர் சொல்வதை முதலீட்டாளர்கள் ஃபாலோ செய்யலாமே!