Published:Updated:

'வெங்காய' அரசியல்... அன்று ஆட்சியைக் கைப்பற்ற இந்திரா கையில் எடுத்த ஆயுதம்!

வெங்காயம்
வெங்காயம்

2010-ம் ஆண்டு, காங்கிரஸ் அரசுக்கு வெங்காய விலை உயர்வு கடும் நெருக்கடியைத் தந்தது. அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் முதன்முறையாக வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்ததோடு, பாகிஸ்தானிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய உத்தரவிட்டார்

வெங்காயம் சாப்பிடாத குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவராம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 'சைவ உணவுக்காரரான நான் வாழ்நாளில் இதுவரை வெங்காயமே சாப்பிட்டதில்லை... எனக்கு வெங்காயத்தின் விலை உயர்வு குறித்து எப்படித் தெரியும்' என்று கேள்வி எழுப்புகிறார் குடும்பநலத்துறை மத்திய அமைச்சர் அஸ்வினி சௌபி. இந்த இரு அமைச்சர்களுக்கும் வெங்காயத்தின் விலை குறித்து தெரியாமல் இருக்கலாம்; நிர்மலா சொல்வதுபோலவே அதுபற்றி கவலைப்படத் தேவையில்லாமலும் இருக்கலாம். ஆனால், பா.ஜ.க என்னும் கட்சி, வெங்காய விலை குறித்து கவலைப்படவேண்டிய நிலையில்தான் உள்ளது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2YyDiCY

அன்று டெல்லியில் கோலோச்சி இருந்த பா.ஜ.க-வை வீட்டுக்கு அனுப்பியது வெங்காய விலை உயர்வினால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிதானே? இந்த வரலாற்றை எடுத்துச் சொல்ல, அப்போது வெங்காய அரசியலால் அதிக பாதிப்புக்குள்ளான சுஷ்மா ஸ்வராஜ் இன்று உயிருடன் இல்லை. அவசரநிலை நெருக்கடிக்குப் பிறகும் இந்திராவை ஆட்சியில் அமர்த்தி ஜனதா கட்சியை வீட்டுக்கு அனுப்பியதும் வெங்காய விலை அரசியல்தானே...

'வெங்காய' அரசியல்... அன்று ஆட்சியைக் கைப்பற்ற இந்திரா கையில் எடுத்த ஆயுதம்!

நாடாளுமன்றத்தில் வெங்காய விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் எழுப்பின. காங்கிரஸுக்கு மிகப் பெரிய வெற்றி வரலாற்றை கடந்த காலத்தில் தந்திருக்கிறது வெங்காய விலை உயர்வு. 1980-ம் ஆண்டு தேர்தலின்போது ஜனதா கட்சி ஆட்சியில் வெங்காயம் கிலோ 5 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நெருக்கடிநிலைக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற இந்திரா கையில் எடுத்த தேர்தல் ஆயுதம் வெங்காயம். பிரசாரங்களில் வெங்காய மாலையோடு சென்று பங்கேற்றார். 'இந்தியாவைக் காப்பாற்ற மீண்டும் இந்திராவைக் கொண்டுவாருங்கள்' என்ற முழக்கம் வைக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் வெங்காய அரசியலை வைத்து அமோகமாக அறுவடை செய்தார் இந்திரா காந்தி.

1998-ம் ஆண்டு, மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் மனோகர் ஜோஷி முதல்வராக இருந்தார். அவருக்கு எதிராக வெங்காய அரசியலை கையில் எடுத்தது காங்கிரஸ். முதல்வருக்கு வெங்காயத்தைத் தீபாவளி பரிசாக அனுப்பியது.

அதே 1998-ம் ஆண்டு, டெல்லி முதல்வராக இருந்த சுஷ்மா ஸ்வராஜுக்கும் தலைவலியை ஏற்படுத்தியது வெங்காய விலை. கிலோ 5 ரூபாய் என விலையைக் கட்டுக்குள் வைப்பதாக உறுதியளித்தார் சுஷ்மா. அந்த ஆண்டு ராஜஸ்தானில் பொய்த்த பருவமழை வெங்காயம், உருளை, உப்பு என அனைத்துப் பொருள்களுக்கும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி டெல்லியை ஆட்டம்காண செய்தது. 1998-ம் ஆண்டு தேர்தலின்போது, 'பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு அணுக்கதிர்கள் உருவாக்க வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கைப் பயன்படுத்தியதால்தான் தட்டுப்பாடு' என்றொரு குற்றச்சாட்டை முன்வைத்தது காங்கிரஸ். வெங்காய மாலைகளோடு பிரசாரத்தை மேற்கொண்ட காங்கிரஸ் டெல்லியைக் கைப்பற்றி வெற்றி மாலை சூடினார் ஷீலா தீட்சித்.

'வெங்காய' அரசியல்... அன்று ஆட்சியைக் கைப்பற்ற இந்திரா கையில் எடுத்த ஆயுதம்!

2010-ம் ஆண்டு, காங்கிரஸ் அரசுக்கு வெங்காய விலை உயர்வு கடும் நெருக்கடியைத் தந்தது. அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் முதன்முறையாக வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்ததோடு, பாகிஸ்தானிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய உத்தரவிட்டார். இந்த முறை வெங்காய மாலைகளை அணிந்துகொண்டும் வெங்காயங் களையே தொப்பியாக மாட்டிக்கொண்டும் போராடி, பதிலடி கொடுத்தது பா.ஜ.க.

2013-ம் ஆண்டு தேர்தலின்போது டெல்லியில் வெங்காய விலை உயர்வைக் கண்டித்து பா.ஜ.க-வும் ஆம் ஆத்மி கட்சியும் வேன் வேனாக வெங்காயத்தைக் கொண்டுவந்து மலிவு விலையில் விற்று நூதனப் போராட்டம் நடத்தின. 1998-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க-வின் சுஷ்மாவை எந்த ஆயுதத்தால் காங்கிரஸின் ஷீலா தீட்சித் வீழ்த்தினாரோ, அதே வெங்காய ஆயுதத்தால் இந்த முறை ஷீலாவை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

- வெங்காய அரசியல் தாக்கம் தொடர்பாகவும், தற்போதைய சூழலையும் முன்வைத்து அவள் விகடன் இதழில் சுகிதா சாரங்கராஜ் எழுதிய சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > https://www.vikatan.com/news/politics/onion-price-hike-issue

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு