Published:Updated:

வாரன் பஃபெட்டின் வருடாந்தரக் கடிதம்!

வாரன் பஃபெட்
பிரீமியம் ஸ்டோரி
வாரன் பஃபெட்

சில சுவாரஸ்யங்கள்!

வாரன் பஃபெட்டின் வருடாந்தரக் கடிதம்!

சில சுவாரஸ்யங்கள்!

Published:Updated:
வாரன் பஃபெட்
பிரீமியம் ஸ்டோரி
வாரன் பஃபெட்

லக அளவில், ஆகச் சிறந்த முதலீட்டாளர்களில் பிதாமகராக அறியப்படுபவர் வாரன் பஃபெட். அவர் பர்க்‌ஷையர் ஹாத்அவே நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு வருடந்தோறும் கடிதம் எழுதுவது வழக்கம். 2020-ம் ஆண்டுக்கான பஃபெட் எழுதிய கடிதத்தில் அடங்கியிருக்கும் சில சுவாரஸ்யமான தகவல்களையும், முதலீட்டாளர்களுக்கான படிப்பினைகளையும் இங்கு பார்ப்போம்.

வாரன் பஃபெட்டின் வருடாந்தரக் கடிதம்!

உண்மை உலகம் Vs கணக்கியல் உலகம்..!

பொதுவாக, எந்த நிறுவனமும் வெற்றிகரமான நிதிநிலை அறிக்கைகளை மட்டுமே வெளியிட விரும்பும். முதலீடு செய்திருக்கும் பங்குதாரர்களையும், கடன் வழங்கியிருக்கும் நிதி நிறுவனங்களையும் திருப்திப்படுத்தும் வகையில் அதிக லாபத்தைக் காட்டுவதற்காகக் கணக்கீட்டு முறைகளை மாற்றியமைப்பதும் (Accounting Policy Change), சில விரும்பத்தகாத விஷயங்களை மூடிமறைக்க முயல்வதும் முதலீட்டு உலகில் நாம் அடிக்கடி கேள்விப்படக்கூடியவைதான்.

`கணக்குவழக்குகளை இஷ்டத்துக்கு மாற்றி இல்லாத லாபத்தைக் காட்டுவதைவிட, இருப்பதை இருப்பதுபோலச் சொல்வதே சரி’ என்று தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார் வாரன் பஃபெட். `கடந்த வருடத்தில் பர்க்‌ஷையர் அடைந்த லாபத்தில் (81.4 பில்லியன் டாலர்) பெரும் பங்கு (53.7 பில்லியன் டாலர்) புதிய கணக்கியல் விதிமாற்றத்தால் மட்டுமே வந்திருக்கிறது. 27.7 பில்லியன் டாலர் மட்டுமே அந்த நிறுவனம் பெற்ற உண்மையான வருவாய்’ என்று தனது கடிதத்தின் ஆரம்பத்திலேயே தைரியமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் வாரன் பஃபெட்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கணக்கு வழக்குகளை மாற்றி இல்லாத லாபத்தைக் காட்டுவதைவிட, இருப்பதை இருப்பதுபோலச் சொல்வதே சரி!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தக்கவைக்கும் லாபத்தின் முக்கியத்துவம்

ஒரு நிறுவனம், தான் சம்பாதித்த லாபத்தை தானே வைத்துக்கொள்ள முடியும் அல்லது அதன் ஒரு பகுதியை டிவிடெண்டாக பங்குதாரர்களுக்குப் பிரித்துத் தரலாம். கூட்டு வட்டியின் மகத்துவத்தைச் சரியாகப் புரிந்துவைத்திருக்கும் பஃபெட், சம்பாதித்த லாபத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் நிறுவனங்களில் முதலீடு செய்யவே விரும்புவதாக தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

வாரன் பஃபெட்டின் வருடாந்தரக் கடிதம்!

பர்க்‌ஷையர் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களின் ஈவுத் தொகை மற்றும் தக்கவைக்கும் வருவாய் (Retained Earnings) அளவுகளை மேற்கோள் காட்டும் அவர், நிறுவனங்களில் தக்கவைக்கப்படும் வருவாயின் அளவுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

பங்கு முதலீடு Vs பிசினஸ் முதலீடு

புதிய நிறுவனங்களில் முதலீடு செய்ய பஃபெட் விதிக்கும் மூன்று நிபந்தனைகள்...

1. நிகர சொத்து மதிப்பின் மீதான வருவாய் விகிதம் (Return on Tangible Net Worth) சிறப்பாக (நிகர சொத்து மதிப்பில் 20 சதவிகிதத்துக்கும் மேலாக) இருக்க வேண்டும். அந்த வருவாயும் நிறுவனத்தின் அடிப்படையான தொழில்முறைச் செயல்பாடுகளிலிருந்து பெற்றதாக இருக்க வேண்டும்.

2. நிறுவனத்தின் மேலாண்மை நேர்மையானதாகவும், திறன் மிகுந்ததாகவும் இருக்க வேண்டும்.

3. பங்கின் விலை நியாயமானதாக இருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் தொழில் லாபம் ஈட்டுவது மட்டுமே..!

கடந்த 2000-ம் ஆண்டில், பர்க்‌ஷையர் ஹாத்அவே எனர்ஜி நிறுவனம் முதன்முறையாக மின்சார விநியோகத்துறையில் தடம் பதித்தபோது, அமெரிக்காவின் அயோவா மாகாணத்துக்கான மொத்த மின் விநியோகத்தில் 76% மின்சாரத்தை வழங்கும் வாய்ப்பைப் பெற்றது. அடுத்த இருபது ஆண்டுகளில் அயோவா மாநிலம் முழுமைக்கும் மின்சாரம் வழங்கும் அளவுக்கு மின்சார உற்பத்தியை அதிகரித்தது. அத்துடன் தனது போட்டி நிறுவனத்தைவிட 70% குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கக்கூடிய அளவுக்கு உற்பத்தித்திறனையும் அதிகரித்தது. இதற்கு முக்கியக் காரணம், காற்றாலைகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ததுதான்.

வாரன் பஃபெட்
வாரன் பஃபெட்

காற்றாலை மின்சாரத்தின் பொருளாதார ரீதியான பயன்களைப் பட்டியலிடும் பஃபெட், இதே மாடலை 100 பில்லியன் டாலர் முதலீட்டுடன் நாடு முழுமைக்கும் விரிவாக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கிறார். ஆனால், கடிதத்தின் எந்த வரியிலும் ‘பருவநிலை மாற்றம்’ அல்லது ‘மாற்றுத்திறன் உற்பத்தி’ போன்ற சாதாரண மக்களுக்குப் பழக்கமில்லாத வார்த்தைகளை அவர் பயன்படுத்தவே இல்லை.

வெளியேறும் திட்டம்!

ஒரு நிறுவனத்தின் ஸ்திரத்தன்மைக்கு தலைமை தொடர்ச்சித் திட்டம் (Continuity Plan) மற்றும் வெளியேறும் திட்டம் (Exit Plan) மிகவும் அவசியம். பர்க்‌ஷையர் நிறுவனத்தின் தலைவரான வாரன் பஃபெட் மற்றும் துணைத் தலைவர் சார்லஸ் முங்கர் ஆகியோர் அதிவிரைவில் ஓய்வு பெறப்போவதாகவும் இந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. `இதற்காக பங்குதாரர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்’ என்றதுடன், அதற்கான ஐந்து காரணங்களையும் பட்டியல் போட்டிருக்கிறார்.

`வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் வருடாந்தரப் பங்குதாரர்கள் கூட்டத்தில் நிர்வாகக்குழு உறுப்பினர்களான அஜீத் ஜெயின் மற்றும் கிரேக் ஏபெல் ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்’ என்று சொல்லியிருக்கிறார் பஃபெட்.

பங்குச் சந்தையின் தீராக் காதலன் பஃபெட்!

அமெரிக்க அரசு ஓர் ஆண்டில் வசூலிக்கும் மொத்த கார்ப்பரேட் வரித் தொகை 243 பில்லியன் டாலர். இதில் பர்க்‌ஷையர் நிறுவனத்தின் பங்கு மட்டும் 3.6 பில்லியன் டாலர். மொத்த வரித் தொகையில் சுமார் 1.5% தன்னுடைய நிறுவனம் மட்டுமே செலுத்துவதைப் பெருமையாகக் குறிப்பிடும் பஃபெட், பர்க்‌ஷையர் நிறுவனத்தில் தனக்குள்ள பங்குகளை நற்பணிகளுக்கு வழங்க தற்போது முடிவுசெய்திருக்கிறார். அந்தப் பங்குகளை உடனடியாக விற்பனை செய்ய வேண்டாம் என்றும், தனது வாழ்வு முடிந்த பின்னரும்கூட அவை (வரையறுக்கப்பட்ட காலம் வரை) பங்குகளாகவே தொடர வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

`பங்கு முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்றாலும் கூட்டு வட்டியின் மகத்துவம் மற்றும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் போக்கு ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால், நீண்டகால முதலீட்டுக்குப் பங்குகள்தான் உகந்தவையாக இருக்கும்’ என்று சொல்கிறார் பஃபெட். மேலும், எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடன் வாங்கி பங்கு முதலீடு செய்யக் கூடாது என்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடிந்தவரே பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கை மணி அடிக்கிறார் வாரன் பஃபெட். அவர் சொல்வதை நாமும் காதுகொடுத்துக் கேட்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism