Published:Updated:

கோவிட்-19... அதிகரிக்கும் ‘வெல்நெஸ் ஹோம்ஸ்!’ - என்னென்ன வசதிகள்..?

வெல்நெஸ் ஹோம்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
வெல்நெஸ் ஹோம்ஸ்

ஜிம்மையும் நீச்சல் குளத்தையும் அமைத்து, வெல்நெஸ் ஹோம் என்கிறார்கள். எச்சரிக்கை அவசியம்!

ரபரப்புக்குப் பஞ்சமில்லாதது நம் வாழ்க்கை. ஊர் முழுக்க அலைந்து திரிந்தாலும், நம்மை நாம் புத்துணர்வு ஆக்கிக்கொள்ள மிகச்சிறந்த இடம் நம்மூடைய வீடுதான். வீடு என்பது சில மணி நேரம் உறங்கி எழுந்து செல்லும் இடமாகத்தான் இதுவரை இருந்துவந்தது.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் அனைவருக்கும் வீட்டின் உன்னதத்தை எடுத்துக்காட்டியிருக்கிறது. வீடே தற்போது அலுவலகம், பள்ளி, கல்லூரி என மாறி, 24 மணி நேரத்தையும் அங்கேயே கழிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. நோய்ப் பரவல், தனிமனித இடைவெளியின் முக்கியத்துவம் போன்றவை ஆரோக்கியமான வீடுகளில் வாழ வேண்டியதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தியிருக்கிறது.

கோவிட்-19... அதிகரிக்கும் ‘வெல்நெஸ் ஹோம்ஸ்!’ - என்னென்ன வசதிகள்..?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில் ‘வெல்நெஸ் ஹோம்ஸ்’ (Wellness Homes) எனும் ஆரோக்கிய வீடுகள் பற்றி அனைவரும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றனர். நைட் ஃபிராங்க் இந்தியா ரியல் எஸ்டேட் ஏஜென்சி 2020-ம் ஆண்டுக்கான ஹெல்த் ரிப்போர்ட்டை சமீபத்தில் வெளியிட்டது. அதில், ‘2020-ம் ஆண்டு வீடு வாங்க விரும்புவோரில் 55% பேர் ஆரோக்கிய வாழ்க்கைக்குரிய வசதிகள் இருக்கும் வீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வகை வீடுகளுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பசுமை வீடுகளும் வெல்நெஸ் ஹோம்ஸும்..!

அதென்ன ‘வெல்நெஸ் ஹோம்ஸ்’ என்று பாரதி ஹோம்ஸ் நிறுவனர் அருண் பாரதியிடம் கேட்டோம்.

கோவிட்-19... அதிகரிக்கும் ‘வெல்நெஸ் ஹோம்ஸ்!’ - என்னென்ன வசதிகள்..?

“புதுப்பிக்கத்தக்க பொருள்களான மூங்கில், சணல் போன்ற இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களிலிருந்தோ இடிக்கப்பட்ட கட்டடங்களிலிருந்து மீட்கப்படும் பொருள்களிலிருந்தோ கட்டப்படுவது பசுமை வீடுகள். அந்த வகை வீடுகளும் ‘வெல்நெஸ் ஹோம்ஸ்’ என்ற கருத்தாக்கமும் வேறு வேறு.

வெல்நெஸ் ஹோம் என்பது ஒரு மனிதன் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவின் அளவைக் (Carbon Footprint) குறைப்பதற்காக உருவாக்கப் பட்டவை. மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அல்லது சீர்படுத்தும் வகையில் இருப்பதுதான் வெல்நெஸ் ஹோம்ஸ்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நான்கு முக்கிய அம்சங்கள்..!

இந்த வகை வீடுகளில் நான்கு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். சிறப்பான காற்றோட்ட வசதி, போதுமான அளவு சூரிய ஒளி வீட்டுக்குள் வருதல், மன அமைதி அல்லது மன அழுத்தத்தைப் போக்கும் தோட்டம் அல்லது லவுஞ்ச் இடம் (Lounge Space), இயற்கையாகவே சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஆகிய வசதிகள் இருக்க வேண்டும். இந்த நான்கு அம்சங்களும் கிடைத்துவிட்டாலே நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி நகர்ந்துவிட்டோம் எனலாம்.

கோவிட்-19... அதிகரிக்கும் ‘வெல்நெஸ் ஹோம்ஸ்!’ - என்னென்ன வசதிகள்..?

நகர்புறங்களில் வீடுகள் அமைந்தாலும் ஆரோக்கியத்துக்குத் தேவையான அடிப்படையான விஷயங்களை மீட்டெடுத்துக்கொடுப்பதுதான் வெல்நெஸ் ஹோம்ஸ்.

இவை தவிர, வீட்டின் சுவருக்கு இதமளிக்கும் வகையில் சுவர்களின் வண்ணத்தைத் தேர்வு செய்வது, வீடு அமைந்திருக்கும் கட்டடத்துக்கு குழு காப்பீட்டுத் திட்டம், அருகில் மருத்துவர் அல்லது மருத்துவமனை வசதி, அனைத்து வீடுகளுக்கும் வீல் சேர் செல்வதற்கு ஏதுவான அமைப்புகள் இடம்பெற்றிருக்க வேண்டும். இவையெல்லாம் இருந்தால்தான் வெல்நெஸ் ஹோம்ஸ் என்ற கருத்தாக்கம் நிறைவுபெறும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வொர்க் ஃப்ரம் ஹோம்க்குத் தேவையான வசதிகள், ஜிம் போன்ற ஃபிட்னஸ்க்கான விஷயங்கள் எனக் கூடுதல் வசதிகளையும் தேவைப்பட்டால் வெல்நெஸ் ஹோமில் சேர்த்துக் கொள்ளலாம்” என்றார்.

கோவிட்-19... அதிகரிக்கும் ‘வெல்நெஸ் ஹோம்ஸ்!’ - என்னென்ன வசதிகள்..?

இத்தனை வசதிகள் இடம்பெறும் என்பதால், இந்த வீடுகளின் விலை அதிகமாக இருக்குமா என்ற சந்தேகம் நமக்கு இயற்கையாகவே எழலாம். மேலும், இந்த வகை வீடுகள் இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் உள்ளதா என்ற கேள்வியும் எழவே செய்கிறது.

இந்தக் கேள்வியையும் அருண் பாரதியிடமே கேட்டோம். “இயற்கையை மீட்டெடுக்கும் அனைத்து விஷயங்களும் இடம்பெற்றிருப்பதால் வீடுகளின் விலை கோடிக் கணக்கில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மலிவு விலையிலும் கட்டுமான நிறுவனங்களால் இது போன்ற வீடுகளைக் கட்டிக்கொடுக்க முடியும். பெங்களூரில் ஓரிரு நிறுவனங்கள் வெல்நெஸ் ஹோம்ஸ் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தனி வீடுகள், வில்லா போன்ற அமைப்புகளில் மட்டுமன்றி அப்பார்ட்மென்ட்டிலும் வெல்நெஸ் ஹோம்ஸை உருவாக்க முடியும். தமிழகத்தில் விரைவில் இந்த வகை வீடுகள் அறிமுகமாக நிறையவே வாய்ப்பிருக்கிறது.

இந்த வகை வீடுகள் இந்தியாவில் பல ஆண்டுகளாகப் பிரபலமடையாமல் இருந்தது. ஆனால், கோவிட்-19-க்குப் பிறகான இந்தக் காலத்தில் இன்னும் சில மாதங்களில் ஆரோக்கியம் தொடர்பான வீடுகளுக்கான தேடல் அதிகரிக்கும். அப்பார்ட்மென்ட் அமைந்திருக்கும் இடம் எளிதில் சென்றடையக் கூடியதாகவும், விலையும் எல்லாருக்கும் உகந்ததாகவும் இருந்தால் வெல்நெஸ் ஹோம்ஸ் அதிகம் பிரபலமடையும்’’ என்றார்.

ஜிம்மும் நீச்சல்குளமும் போதாது!

‘‘அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் வில்லா வீடுகளிலும் எல்லோரும் பயன்படுத்தக்கூடிய இடத்தில் ஜிம்மையும் நீச்சல்குளத்தையும் அமைத்து, அந்த வீடுகளை வெல்நெஸ் ஹோம் என்ற பெயரில் விளம்பரப் படுத்துகின்றனர். இதைப் பார்த்து மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. மேலே சொல்லப்பட்ட அனைத்து வசதிகளும் இருந்தால் மட்டுமே அவை வெல்நெஸ் ஹோம்ஸ். இன்னும் சிலர் வெல்நெஸ் ஹோம்ஸ் என்ற பெயரில் இல்லாமல், இதே கருத்தாக்கத்தில் வீடுகள் கட்டித் தருகின்றனர். ஆனால், அவற்றின் விலை கோடிக்கணக்கில் இருக்கிறது” என்று எச்சரிக்கை செய்கிறார் அருண் பாரதி.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆரோக்கிய வீடுகளில் நாம் குடியிருந்தால், எந்த நோயும் நம்மை அண்டாமல் நிம்மதியாக இருக்கலாமே!

கட்டிய வீட்டை வெல்நெஸ் ஹோமாக மாற்ற முடியுமா?

புதிதாத வீடு வாங்குபவர்கள் ஆரோக்கிய வீடுகளைத் தேர்வு செய்யலாம். ஏற்கெனவே கட்டிய வீடுகளை எப்படி வெல்நெஸ் ஹோமாக மாற்றுவது என ஆலோசனை அளிக்கிறார் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்துக் கட்டுமானப் பொறியாளர் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் ஜி.கணேஷ்.

கோவிட்-19... அதிகரிக்கும் ‘வெல்நெஸ் ஹோம்ஸ்!’ - என்னென்ன வசதிகள்..?

“ஒரு வீடு கட்டும்போது அரசின் விதிமுறைகளின்படி வீட்டின் மொத்தப் பரப்பளவில் எட்டில் ஒரு பங்கு ஜன்னல் அமைந்திருக்க வேண்டும். குளியல் அறை, கழிவறையில் எளிதில் ஈரம் காய்வதற்கு ஏதுவாகக் காற்று உள்ளே வருவதற்காக ஜன்னல் வைத்திருக்க வேண்டும். ஆனால், பல வீடுகளில் இவை இருப்பதில்லை. வாஸ்து மற்றும் விஞ்ஞானபூர்வத்தின் அடிப்படையில் தென்கிழக்கு திசையில் சமையலறை இருக்க வேண்டும். அப்போதுதான் காலையில் சூரிய ஒளி அறையில்படும்.

பூமியின் சுழற்சிக்கு ஏற்றாற்போல் ஆற்றல் (Energy) உருவாகும்போது, வடகிழக்குத் திசையிலிருந்துதான் வீட்டின் உள்ளே நுழையும். அதனால் வீட்டில் வடகிழக்கு திசையில் நிறைய ஜன்னல்களை அமைக்க வேண்டும். உள்ளே வரும் ஆற்றல் தென்மேற்கு திசை வழியாக வெளியேறும் என்பதால், அதைத் தடுப்பதற்கு தென்மேற்கு திசையில் திறப்புகள், ஜன்னல்கள் வைப்பதைக் குறைக்கிறார்கள்.

அரசின் விதிமுறைகளின்படி, ஒரு கட்டடத்தின் பக்கவாட்டுகளில்் ஒரு மீட்டர் இடைவெளிவிட வேண்டும். இதையே பக்கத்து கட்டடத்தின் கட்டுமானத்திலும் பின்பற்ற வேண்டும். அப்படியிருந்தால் இரண்டு கட்டடம் அல்லது வீடுகளுக்கும் இடையில் சுமார் 2 மீட்டர் (6.5 அடி) இடைவெளியிருக்கும்.

இதனால் காற்றோட்டம், சூரிய ஒளி கிடைப்பதுடன், தோட்டம் போடுவது, செடி வைப்பது ஆகியவற்றுக்கான இடமும் கிடைக்கும். வீடும் கண்ணுக்குக் குளுமையாக பசுமையாக காட்சி அளிக்கும்.

கட்டிய வீடுகளில் பரப்பளவில் எட்டில் ஒரு பங்கு ஜன்னல் வைப்பதற்கு வாய்ப்பிருந்தால், கட்டடத்தை சிறிது மாற்றியமைத்து ஜன்னல்களை வைக்கலாம். ஜன்னல்களைப் போதுமான அளவு வைத்தாலே காற்றோட்டம், சூரிய ஒளி கிடைத்துவிடும். இது தவிர, கார்பன் டை ஆக்ஸைடை உட்கிரகித்துக்கொண்டு ஆக்சிஜனை அதிகம் வெளியிடும் இன்டோர் பிளான்ட்ஸ் போன்றவற்றை வளர்க்கலாம்” என்றார்.