டாப் மாடல் XUV300 காரை லேட்டஸ்ட்டாக வாங்கியவர்களுக்கு, இந்தச் செய்தி கொஞ்சம் வருத்தமாக இருக்கலாம். ஆம்! இதன் அப்டேட்டட் வெர்ஷன் செம ஸ்போர்ட்டியாக, ‘ஸ்போர்ட்ஸ்’ எனும் வேரியன்ட்டிலேயே வந்திருக்கிறது. வெளியே ஸ்டிக்கரிங் தொடங்கி ஸ்டீயரிங் வரை ஏகப்பட்ட சிவப்பு நிற ஸ்போர்ட்டி அம்சங்கள்.

‘என்ன, காஸ்மெட்டிக் அப்டேட்தானே... நாங்க வெளியிலேயே பண்ணிக்கிடுறோம்’ என்று XUV300 கார் ஓனர்கள் நினைத்துவிட முடியாது. முக்கியமான மாற்றமே இங்குதான் இருக்கிறது. ஆம்! மஹிந்திரா தனது சொந்த உழைப்பில் தயார்படுத்திய ‘எம்ஸ்டாலியன்’ (mStallion) எனும் புதிய டர்போ பெட்ரோல் இன்ஜின்தான் இந்த ஸ்போர்ட்ஸ் வேரியன்ட்டில் இருக்கும் பெரிய மாற்றம்.

ஸ்டாண்டர்டு XUV300 டர்போ பெட்ரோல் கார், 110bhp பவர் - 20kgm வெளிப்படுத்தும். mStallion–ன் 1.2 லி இன்ஜினின் பவர் 130 bhp பவர்/ 23kgm டார்க். இந்தச் சின்ன எஸ்யூவிக்கு இந்த செயல்திறன் ‘பறபற’ அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்.

mStallion இன்ஜினை, மொத்தம் 3 சைஸ்களில் தனியாகவும் காட்சிக்கு வைத்திருந்தது மஹிந்திரா. 1.2 லி, 1.5 லி, 2.0 லி – என மூன்றுமே T-GDI (Turbo Gasoline Direct Injection). 2.0 லிட்டர் இன்ஜினின் பவர் 190bhp–யும், 38kgm டார்க்கும். 1.5 லிட்டர் என்றால் 163 bhp பவர், 28 kgm டார்க். இந்த mStallion–தான் இப்போதைக்கு மஹிந்திராவின் பவர்ஃபுல் பெட்ரோல் இன்ஜின். 6–ஸ்பீடு மேனுவல் மற்றும் 6–ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என இரண்டு டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ்களுடன் வருகிறது mStallion.

இந்த இன்ஜினின் ஸ்பெஷல் – GPF (Gasoline Particulate Filter) இல்லாமலே குறைந்தபட்ச எமிஷனை வெளியிடும் என்பதுதானாம். BS-6 நார்ம்ஸுக்கு ஏற்றபடி வந்திருக்கும் இந்த mStallion, 2023–ல் வரவிருக்கும் கெடுபிடியான எமிஷன் நார்ம்ஸுக்கு ஏற்றபடிகூடச் செயல்படும் என்பது கூடுதல் ப்ளஸ். XUV300–க்கு அடுத்து இனி வரும் மஹிந்திரா, ஸாங்யாங், ஃபோர்டு எஸ்யூவிகள் என எல்லாவற்றுக்கும் இந்த mStallionதான்.

டர்போ பெட்ரோல் என்றாலே மைலேஜ் அடிவாங்குமே என்பவர்கள், mStallion இன்ஜின் கொண்ட கார்களின் டெஸ்ட் ரிப்போர்ட் வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.