பணக்காரர், தனவந்தர் - ஒரே அர்த்தத்தைத் தரும் இரு சொற்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், உற்றுக் கவனித்தால் இரண்டும் வேறுவேறு அர்த்தம் தரும் சொற்கள் என்பது புரியும்.

என்ன வித்தியாசம்?

பண்டமாற்று முறையைத் தவிர்க்க, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய பணம், பிற்பாடு பலவிதங்களில் உருமாறியிருக்கிறது. பணத்தின் பன்முகத்தன்மையானது தினம்தினம் புதிய எல்லைகளைத் தொட்டுக்கொண்டுமிருக்கிறது. இவ்வாறு ஏற்பட்ட பரிணாமம்தான் பணக்காரர் (Rich), தனவந்தர் (Wealthy) என்ற இரு வகையினரை உருவாக்கியிருக்கிறது. ஓர் உதாரணம் மூலம் இதைப் புரிந்துகொள்வோம்.

கிராமத்து ஏழை ஒருவரை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். வெறும் அரை ஏக்கர் நிலம்தான் சொந்தம் அவருக்கு. அதுவும் மானாவாரி. அந்த நிலத்தில் கீரையோ, காய்கறியோ பயிரிட்டு சொற்ப ஜீவனம் நடத்திவருகிறார் அவர்.

பணக்காரர் என்பவர்...

இப்படி இருக்கும்போது, திடீரென்று ஒருநாள் பக்கத்து நகர பேருந்து நிலையம் இவரது கிராமத்தையொட்டியுள்ள இடத்துக்கு மாற்றம் செய்யப்படுகிறது. அதுவும்கூட, இவரது அரை ஏக்கர் நிலத்தையொட்டியே பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்குகின்றன.

இதன்பலனாக, ஆயிரங்களில் மதிப்பிடப் பட்ட இவரது நிலம், லட்சங்களில் விலை போகிறது. அவர் பணக்காரர் ஆகிறார்; விரும்பியதைச் செய்கிறார்; வேண்டியதை வாங்குகிறார். கைக்கு வந்த பணம் விரைவில் கரைந்து காணாமல் போகிறது.

இவர் மட்டுமல்லாமல், லாட்டரியில் பணம் கிடைத்தவர், முறையாக உழைத்து லட்சங்களில் சம்பாதித்தவர் என எவராக இருந்தாலும், வந்து சேர்ந்த பணத்தை வளர்த்தெடுத்து அதை நீண்டகாலத்துக்குத் தேக்கி வைத்துக்கொள்ள முடியாத அனைவருமே பணக்காரர் என்ற அடைமொழிக்குள் அடங்குவர். குறுகிய காலத்துக்கு மட்டுமே பணம் கைவசம் உள்ளவர் பணக்காரரே!

தனவந்தர் என்பவர்...

தனவந்தரின் நிலை இதற்கு நேர்மாறானது. எப்படியென்றால், தற்போதைய தனவந்தரின் குடும்பம், சென்ற தலைமுறையிலும் தனவந்தர் நிலையில் இருந்து, வரப்போகும் தலைமுறைக்கும் பணம் தேங்கியிருக்குமானால், அவர்தான் தனவந்தர் என்கிறது தற்போதைய பண அளவுகோல். ஒருவருக்குப் பல்வேறு வழிகளில் பணம் வந்தாலும், வந்து குவிந்த பணம் எத்தனை கோடி என்பது அளவீடல்ல; வந்து சேர்ந்த பணம் அவரிடம் எவ்வளவு காலம் தங்கியிருக்கிறது என்பதே பணக்காரருக்கும் தனவந்தருக்குமான அடிப்படை வித்தியாசம்.

பஃபெட் ஒரு தனவந்தர்...

தனவந்தர், தனக்குக் கோடி கோடியாக பணம் வந்துசேர்ந்துகொண்டே இருந்தாலும், அரண்மனைபோல் வீடு, ஆடம்பரமான கார், ஆடை, ஆபரணங்களால் தனது பணக்காரத் தன்மையை வெளிக்காட்டிக்கொள்ள விரும்ப மாட்டார். இதற்குச் சரியான உதாரணம், வாரன் பஃபெட்.

பஃபெட் தற்போது வசிக்கும் வீடு, அவர், 1958-ம் ஆண்டு 31,500 டாலருக்கு வாங்கியது. அதேசமயம், அவர் கலிபோர்னியாவில் கடற்கரை விடுமுறை விடுதி ஒன்றை, 1971-ல் 1.5 லட்சம் டாலருக்கு வாங்கி, தற்போது 75 லட்சம் டாலருக்கு விற்றுவிட்டார். இப்போது சொல்லுங்கள், இப்படிப்பட்டவரை விட்டு, பணம் எப்படி விலகிப் போகும்?

லட்சாதிபதியும் கோடீஸ்வரரும்

முன்பெல்லாம் பணக்காரர் என்பதற்கு லட்சாதிபதி என்ற வார்த்தைதான் அடையாளம். காரணம், காண்பதற்கு அரிதாக எங்கோ ஒரு லட்சாதிபதி இருந்த காலகட்டம் அது. தற்போது தெருதோறும் லட்சாதிபதிகள்தாம். எனவே, லட்சாதிபதி என்ற வார்த்தை வழக்கொழிந்து போய், ‘கோடீஸ்வரர்’ என்ற புதிய அடையாளம் முளைத்தது. தற்போது ஊர்தோறும் கோடீஸ்வரர்கள்!

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், சராசரி மனிதர் லட்சாதிபதி ஆனதும், லட்சாதிபதி கோடீஸ்வரராக இருப்பதற்கும் அவர்களின் கடுமையான உழைப்பும் முயற்சியும் மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. பணவீக்கமும் ஒரு முக்கிய காரணம். முன்பு சில ஆயிரங்களில் இருந்த நிறுவனங்களின் வருமானமும் லாபமும் இன்றைக்கு கோடிகளில் இருக்கிறது. எனவேதான், பலரும் இன்றைக்கு கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். ஆகவே, தனவந்தர் என்பதற்கு ஒருவரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்க்காமல் ஒருவரிடம் எவ்வளவு காலத்துக்குப் பணம் நிலைத்து நிற்கிறது என்பதே சரியான அளவுகோலாகப் பார்க்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் ஒருவர் பணக்காரராக இருந்து பயனில்லை. தனவந்தராக நீடிப்பது காலத்தின் கட்டாயமாக மாறிவருகிறது. காரணம், நீண்டு வரும் வாழ்நாள்!

சராசரியாக மூன்று தலைமுறை

கடந்த 50 ஆண்டுகளில் பணவீக்கம் 100 மடங்கைத் தாண்டி வளர்ந்ததைப்போல, அதற்கேற்றாற்போல் நாம் சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகளில் நமது சராசரி வயதும் இரு மடங்காக நீண்டிருக்கிறது. அதாவது, அப்போது 37 என்று இருந்த நமது சராசரி வயது தற்போது 78 ஆக உயர்ந்திருக்கிறது. இனிவரும் நாள்களில் இந்த ஆயுள் காலம் வளரவே செய்யும்.

ஆயுள்காலம் நீண்டுவரும் காரணத்தால், நம்மில் பெருபான்மையோர் தனது மூன்றாவது தலைமுறையினரான பேரன் பேத்திகளைப் பார்ப்பது சகஜமாகி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், எள்ளுப்பேரன், கொள்ளுப்பேரன்/பேத்தியைச் சந்திக்கும் தாத்தாக்களும் பாட்டிகளும் பெருகி வருகிறார்கள்.

எனவே, நாம் தனவந்தராக இருப்பது அவசியமாகிறது. அதாவது, தலைமுறை தாண்டியும் நம்மிடம் பணம் நிலைத்திருப்பது தேவையானதாக இருக்கிறது.

45 –55 வயதுக்கு முன்பாகவே கடன்களிலிருந்து விடுபடுவது; உழைக்கும் காலத்திலேயே இரண்டாவது வருமானத்துக்கு வழிவகை செய்வது என்பவை தனவந்தராக மாற மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்!

நீங்களும் தனவந்தராகலாம்!

பணம் ஒருவரிடம் நீண்டகாலம் நிலைத்திருக்கிற மாதிரி வந்துசேர சில வழிகாட்டல்களும் இருக்கவே செய்கின்றன.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் சேமிப்பு மற்றும் முதலீட்டைத் தொடங்கிவிடுவது.

தொடங்கிய முதலீடு மற்றும் சேமிப்பை விடாப்பிடியாகத் தொடர்வது.

ஏற்கெனவே செய்துவரும் வேலையுடன், உபரியாக ஏதேனும் செய்ய முடியுமா என்பதைப் பரிசீலிப்பது.

தவறான நிதிமுடிவுகளை எடுக்காமல் தவிர்ப்பது.

தேவைக்கேற்ப நிதி ஆலோசனை பெறுவது.

45-55 வயதுக்கு முன்பாகவே கடன்களிலிருந்து விடுபடுவது.

பணக்காரத்தன்மையை காட்டிக் கொள்வதற்காக, விரயமாகச் செலவு செய்வதைத் தவிர்ப்பது.

உழைக்கும் காலத்திலேயே இரண்டாவது வருமானத்துக்கு வழிவகை செய்வது. இப்படிப் பல விஷயங்களைச் செய்வது அவசியம்.

இவையெல்லாம் பணம் நம்மிடம் நீடித்து நிலைத்திருக்கப் பரிந்துரைக்கப்படும் சில வழிமுறைகள். நம்மைத் தனவந்தராக்கவல்ல காரணிகள் இவை.

தனவந்தராக்கும் என்.பி.எஸ் திட்டம்

நமது பணம், நமது வாழ்நாள் முழுதும் பயன்பாட்டிலிருந்து, நமக்குப் பிறகு, நமது சந்ததியருக்குப் பயன்தரும் வகையில் அமைய சேமிப்புத் திட்டங்கள் பலவகைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று, அனைவருக்கும் பொதுவான தேசிய பென்ஷன் திட்டம் என்.பி.எஸ்.

சந்தை வளர்ச்சி சார்ந்த மத்திய அரசின் இந்த பென்ஷன் திட்டம், தற்போது 10.32% வருமானத்தைத் தந்துள்ளதாகத் தகவல்.அதாவது, நமது ஒரு லட்சம் ரூபாய் 35 ஆண்டுகளில் 32 லட்சம் ரூபாயாக வளர்ச்சி பெறும் என்பது இதன் கணக்கீடு.

ஒருவரது சம்பளம் அல்லது வருமானம் ஆண்டுதோறும் 10% வளர்ச்சி பெறுகிறது. அந்த வகையில் தற்போது 25 வயதும் மாதம் 30,000 ரூபாய் வருமானமும் சம்பளமும் உள்ள ஒருவர், தனது சம்பளத்தில் 20 சதவிகிதத்தை என்.பி.எஸ் திட்டத்தில் மாதம்தோறும் செலுத்திவந்தால், 60 வயதில் கிடைக்கக்கூடிய முதிர்வுத்தொகை சுமார் ரூ.7.25 கோடியாக இருக்கும்.

இந்த முதிர்வுத்தொகை முழுவதையும் விட்டுவைத்தால் 8% வட்டி என்ற கணக்கில் மாதம்தோறும் ரூ.4,83,333 கிடைக்கும்.

நமது வாழ்நாள் வரை தொடரும் மேற்கண்ட முதலீடு நமக்குப் பிறகு, நமது சந்ததியரைப் போய்ச்சேரும். இதற்காக நமது பிள்ளைகளையும் சிறுவயதிலேயே நிதி நிர்வாகம் தெரிந்து கொள்ள வைத்திருந்தால் தலைமுறை தலை முறையாகத் தனம் தொடரும். தனவந்தராகத் தொடரும் நமது தலைமுறை.

இதில் கவனிக்க வேண்டியது, என்.பி.எஸ் திட்டத்தில் சேமிப்பு செய்வதற்கான வரம்பு நம் சம்பளத்திலிருந்து 20% அல்ல, 80% ஆகக்கூட இருக்கலாம் என்பதுதான். 80% என்பது வாழ்நாள் முழுக்க சேமிக்க முடியும் தொகை அல்ல என்றாலும், 20 சதவிகிதத்துக்கு மேல் சேர்த்தால், கையில் கிடைக்கும் தொகை இன்னும் கணிசமாக அதிகமாக இருக்கும்.

மேலும், சேமிப்பு, முதலீட்டுக்கு எத்தனையோ திட்டங்கள் காத்துக் கிடக்கின்றன. அவற்றிலும் பணத்தை விதைத்து தனவந்தராக நீங்கள் மாறலாம்!