Published:Updated:

பி.எஃப் சிறப்பு அட்வான்ஸ், பிடித்தம் 2% குறைப்பு... பலன் உண்டா, இல்லையா?

ஊழியர்களின் மூன்று மாதச் சம்பளம் அல்லது அவரது பி.எஃப் கணக்கில் உள்ள தொகையில் 75% இரண்டில் எது குறைவோ அதை எடுத்துக்கொள்ளலாம்.

'கொரோனா பேரிடர் ஊரடங்கில், ஊழியர்கள் பணச் சிக்கலால் பாதிக்கப்படக் கூடாது' என்ற நல்ல நோக்கத்தில், பி.எஃப்-ல் சேர்த்து வைத்த பணத்தில் சிறப்பு முன்பணம் பெற விதிமுறை திருத்தம் ஒன்றைச் செய்தது மத்திய அரசு. இதன்படி, நாடெங்குமுள்ள 'எம்ப்ளாயீஸ் பிராவிடன்ட் ஃபண்ட்' (EPF - Employees Provident Fund) ஊழியர்கள், தங்களது பிராவிடன்ட் ஃபண்டிலிருந்து 'கொரோனா' சிறப்பு முன்பணம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஊழியர்களின் மூன்று மாதச் சம்பளம் அல்லது அவரது பி.எஃப் கணக்கில் உள்ள தொகையில் 75% இரண்டில் எது குறைவோ அதை எடுத்துக்கொள்ளலாம். இதற்கு ஆவண ஆதாரம் எதுவும் தரத் தேவையில்லை. உடல்நலக் குறைவு, கல்விச் செலவு போன்றவற்றுக்காக சமீபத்தில் கடன் வாங்கியிருந்தாலும், இந்தச் சிறப்பு முன்பணத்தைப் பெறலாம். விண்ணப்பித்த 72 மணி நேரத்தில் வங்கிச் கணக்கில் பணம் வந்துசேரும் என்பதெல்லாம் இதிலிருக்கும் கவர்ச்சிகரமான அம்சங்கள்.

பி.எஃப் சிறப்பு அட்வான்ஸ், பிடித்தம் 2% குறைப்பு... பலன் உண்டா, இல்லையா?

இந்தச் சலுகையைப் பயன்படுத்தி 9.6 லட்சம் பி.எஃப் உறுப்பினர்கள் ரூ.2,985 கோடியைத் திரும்ப எடுத்திருக்கிறார்கள். அதாவது, சராசரியாக ஓர் ஊழியர் எடுத்தப் பணம் ரூ.31,093 (06.05.2020 வரையான கணக்கு இது. 'பிராவிடன்ட் ஃபண்ட்' என்பது ஊழியர்களின் ஓய்வுக்காலத்துக்கான ஊன்றுகோல். இதிலுள்ள பணத்தை எடுக்க எடுக்க ஊன்றுகோலின் உயரம் குறைந்துவிடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இவர்கள்கூட பி.எஃப் பணம் பெற்றுள்ளதை நியாயப்படுத்திவிடலாம். ஏனென்றால் இவர்களில் பலர் ரூ.10,000 - 15,000 என்ற அளவில் மாதச் சம்பளம் பெறுபவர்கள். ஆனால், இ.பி.எஃப் அமைப்பில் சேராத வேறு சில நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இதைவிட அதிகமான பணத்தைத் தங்கள் கணக்கிலிருந்து எடுத்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

'பணத்தேவை என்று வரும்போது பி.எஃப்-ல் இருக்கும் பணத்தை எடுக்காமல், வேறென்ன செய்வது?' என்று ஊழியர்கள் கேட்கலாம். நியாயமான கேள்விதான். ஆனால்... சில விஷயங்களை நாம் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றை முழுமையாக நாணயம் விகடன் இதழில் வாசிக்க > கொரோனாகால பி.எஃப் முன்பணம்! - முதிர்வுத் தொகையில் என்ன பாதிப்பு? https://bit.ly/2Zztlrm

பி.எஃப் தொகை பிடித்தம் 2% குறைப்பு... லாபமா? கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுக்கத் தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றன. இதிலிருந்து மீண்டுவர, பணப் புழக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் நிதியுதவித் திட்டங்களை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக பணியாளர்கள் சம்பளத்தில் பிடிக்கப்படும் பிராவிடன்ட் ஃபண்ட் (பி.எஃப்) தொகையை 12 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக மத்திய நிதி அமைச்சகம் குறைத்திருக்கிறது.

`இதன் மூலம் நிறுவனங்கள் பணியாளர்களுக்குத் தர வேண்டிய சம்பளத்தில் 2% குறையும். அதேநேரத்தில், பணியாளருக்கு 2% சம்பளம் கூடுதலாகக் கிடைக்கும்' என்பது மத்திய அரசின் கணக்கு. `இதன் மூலம் ரூ.6,750 கோடி புழக்கத்துக்கு வரும்' என மத்திய அரசு கணித்திருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை மூலம் 6.5 லட்சம் தொழில் நிறுவனங்கள் மற்றும் 4.3 கோடி பி.எஃப் உறுப்பினர்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பி.எஃப் சிறப்பு அட்வான்ஸ், பிடித்தம் 2% குறைப்பு... பலன் உண்டா, இல்லையா?

இந்தியாவைப் பொறுத்தவரை, பி.எஃப் என்பது பிரபலமான ஓய்வுக்கால முதலீட்டுத் திட்டமாக இருக்கிறது. ஒருவரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12% பி.எஃப்-ஆக பணியாளரின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும். இதே அளவு தொகையை நிறுவனமும் தொழிலாளர் கணக்கில் செலுத்தும். உதாரணமாக, ஒருவரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி சேர்த்து ரூ.25,000 என்று வைத்துக்கொள்வோம். இந்த 25,000 ரூபாயில் 12% தொகையான ரூ.3,000 பணியாளர் சம்பளத்தில் பிடிக்கப்படும், இதே அளவு தொகையை நிறுவனம் தன் பங்காகச் செலுத்தும். ஆக மொத்தம், ரூ.6,000 பணியாளர் பி.எஃப் கணக்கில் சேரும். இப்போது 2% குறைக்கப் பட்டிருப்பதால், இனி பணியாளர் கணக்கில் 5,000 ரூபாய்தான் சேரும். பணியாளருக்குக் கூடுதலாக ரூ.500 செலவுக்குக் கிடைக்கும். நிறுவனத்தின் கையிலிருந்து செல்லும் தொகையும் மாதம் ரூ.500 குறையும்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து சென்னையின் முன்னணி ஆடிட்டர்களில் ஒருவரான எஸ்.சதீஷ்குமாரிடம் கேட்டதற்கு, '`இந்த 2% பி.எஃப் தொகை குறைப்பு என்பது அடுத்த மூன்று மாதங்களுக்குத்தான் (2020 ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) என்பதால், பணியாளர்களுக்குப் பெரிய பாதிப்பு இல்லை; பெரிய அளவில் நன்மையும் இல்லை." எப்படி என்கிறீர்களா... - இதுகுறித்து நாணயம் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > பி.எஃப் தொகை பிடித்தம் 2% குறைப்பு..! - பணியாளர்களுக்கு லாபமா? Click Here https://bit.ly/2ZxOceJ

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு