Published:Updated:

வழக்கில் வெற்றி... மீண்டும் மிஸ்திரி..!

சைரஸ் மிஸ்திரி
பிரீமியம் ஸ்டோரி
சைரஸ் மிஸ்திரி

டாடா குழுமத்தில் குழப்பமா?

வழக்கில் வெற்றி... மீண்டும் மிஸ்திரி..!

டாடா குழுமத்தில் குழப்பமா?

Published:Updated:
சைரஸ் மிஸ்திரி
பிரீமியம் ஸ்டோரி
சைரஸ் மிஸ்திரி

டந்த 2016-ம் ஆண்டு, அக்டோபர் 24-ம் தேதி இந்தியாவின் மிகப்பெரிய குழுமமான டாடா சன்ஸின் தலைவர் சைரஸ் மிஸ்திரியை இயக்குநர்குழு அதிரடியாக நீக்கியது. முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவுக்கும் சைரஸ் மிஸ்திரிக்கும் இடையேயான கருத்துவேறுபாடுதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2017-ம் ஆண்டு, பிப்ரவரியில் டி.சி.எஸ்-ன் சி.இ.ஓ-வாக இருந்த என்.சந்திரசேகரன், டாடா சன்ஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

வழக்கில் வெற்றி... மீண்டும் மிஸ்திரி..!

தன் பதவி நீக்கத்தைத் தொடர்ந்து, தேசிய சட்ட நிறுவனத் தீர்ப்பாயத்தில் (என்.சி.எல்.டி) சைரஸ் மிஸ்திரி வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கின் விசாரணை முடிந்து, கடந்த டிசம்பர் 18-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பில் சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டது செல்லாது என்றும், என்.சந்திரசேகரன் நியமனம் ‘சட்டத்துக்குப் புறம்பானது’ என்றும் சொல்லப்பட்டிருந்தது. இருந்தாலும், `தீர்ப்பின்மீது டாடா குழுமம் மேல்முறையீடு செய்யலாம்’ என அனுமதி வழங்கப்பட்டிருந்தது. `தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று கம்பெனி பதிவாளர் (ஆர்.ஓ.சி) தாக்கல் செய்த மனுவைத் தீர்ப்பாயம் ரத்துசெய்துவிட்டது. அதனால் அடுத்தகட்ட நடவடிக்கையாக உச்ச நீதிமன்றத்தை நாடியது டாடா குழுமம்.

டாடா குழுமத்தின் சில நிறுவனங்களும், ரத்தன் டாடா தனிப்பட்ட முறையிலும் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். வழக்கு ஜனவரி 10-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

எந்தப் பதவியும் வேண்டாம் என மிஸ்திரி கூறிவிட்டதால், நிறுவனங்களின் தினசரிச் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இருக்காது!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தலைமைப் பொறுப்பு வேண்டாம்!

தனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்த நிலையில், டாடா சன்ஸ் தலைவர் பதவி அல்லது முக்கியமான நிறுவனங்களின் இயக்குநர்குழுப் பொறுப்பை சைரஸ் மிஸ்திரி ஏற்பார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், டாடா சன்ஸ் தலைவர் பதவியோ, முக்கியப் பதவிகளோ தனக்கு வேண்டாம் என சைரஸ் மறுத்திருக்கிறார். ‘‘இந்தத் தீர்ப்பை தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதவில்லை. சிறு முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்கக் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார் மிஸ்திரி. டாடா சன்ஸில் 18% பங்குகள் இருப்பதால், அதன் இயக்குநர் குழுவில் இணைய விரும்புகிறார் அவர்.

சைரஸ் மிஸ்திரி
சைரஸ் மிஸ்திரி

குழுமநலனுக்கு எதிரானது!

‘‘சைரஸ் மிஸ்திரியை நீக்கிய பிறகு, அவர் நடவடிக்கைகள் குழுமநலனுக்கு எதிராக இருக்கின்றன. டாடா குழுமத்தின் தலைவராக இருந்த நேரத்தில் எடுத்த முடிவுகளையும், ரகசியத் தகவல்களையும் பொதுவெளியில் வெளியிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்ன டாடா குழுமம், `டாடா சன்ஸ் தலைவராக சந்திரசேகரன் நியமனம் செய்யப் பட்டது செல்லாது என்று சொன்னதில் எந்த நியாயமும் இல்லை. சைரஸ் மிஸ்திரி மீண்டும் தலைவராக நியமனம் செய்யப்பட்டால், குழுமத்தின் பணிச்சூழல் மாறும். தவிர, சந்திரசேகரன் தலைமையில் நிறுவனம் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதனால் என்.சி.எல்.டி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று டாடா குழுமத்தின் சார்பில் நீதிமன்றத்தில் கோரியிருக்கிறது.

தனக்கு எந்தப் பதவியும் வேண்டாம் என மிஸ்திரி கூறிவிட்டதால், நிறுவனங்களின் தினசரிச் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. ஆனால், டாடா சன்ஸ் இயக்குநர்குழுவில் மிஸ்திரி இணையும் பட்சத்தில் இயக்குநர்குழுக் கூட்டம் சுமுகமாக நடக்குமா என்பதுதான் டாடா குழுமத்தில் உள்ளவர்களின் கேள்வி. இது, அந்தக் குழும நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களின் கேள்வியும்கூட. இந்த நிலையில், டி.சி.எஸ் நிறுவனம் இந்த நிதியாண்டுக்கான மூன்றாம் காலாண்டு முடிவை 9-ம் தேதி வெளியிடவிருந்தது. தற்போது 10-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருவதால், அந்தத் தீர்ப்பு வந்த பிறகு காலாண்டு முடிவு வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறது!

வாசு கார்த்தி