ஆர்.மோகன பிரபு, CFA

இந்தியாவின் மிகப் பெரிய கூட்டுறவு வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் & மகாராஷ்டிரா வங்கியின் (PMC Bank) வாடிக்கையாளர் களுக்கு, கடந்த 24-ம் தேதி அதிகாலையில் மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ரிசர்வ் வங்கியின் ஆணையின்படி, பி.எம்.சி வங்கி யின் பணிகள் முடக்கப்படுவதாகவும் அடுத்த ஆறு மாதங்களுக்கு வங்கிக் கணக்கிலிருந்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது என்றும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது.

அதே தினத்தில் காசோலை, ஏ.டி.எம் மற்றும் இணையச் சேவைகள் என அனைத்து வகையான பணப் பரிமாற்றங்களும் முடக்கப்படவே, வாடிக்கையாளர்கள் திகைத்துப்போனார்கள். பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, மீண்டுமொருமுறை வங்கி வாசலில் வாடிக்கையாளர்கள் கண்ணீருடன் காத்திருக்கத் தொடங்கினர். பி.எம்.சி வங்கி முடக்கத்தின் பின்னணி குறித்துக் காண்போம்.

அமெரிக்காவில் சிறிய வங்கிகள் செயல்படாமல் முடங்குவது வாடிக்கையான விஷயமே. என்றாலும், அங்கு டெபாசிட்தாரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு இந்தியாவை விடப் பல மடங்கு அதிகம்.

மாநிலம் கடந்த கூட்டுறவு வங்கி

நம்மூர் பக்கம் உள்ள சிறிய கூட்டுறவு வங்கிகளைப்போல, பி.எம்.சி வங்கியைச் சாதாரணமாக எடைபோட முடியாது. மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, குஜராத், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளைக்கொண்டு, பரந்துவிரிந்த கூட்டுறவு வங்கியாகும் பி.எம்.சி வங்கி. 1984-ம் ஆண்டு மும்பையின் சயான் பகுதியில் சிறிய அளவில் தொடங்கப் பட்ட இந்தக் கூட்டுறவு வங்கி, குறுகிய காலத்தில் அதிவேக வளர்ச்சியைக் கண்டதுடன் இந்தியாவின் முதன்மையான கூட்டுறவு வங்கிகளில் ஒன்றாகவும் உருவெடுத்தது. ரூ.11,617 கோடி டெபாசிட் மற்றும் ரூ.8,383 கோடி கடன்கள் என்று வளர்ந்தது.

ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு

வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 சட்டத்தின் 35-A பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்கீழ் அதிரடியாக ஆணைப் பிறப்பித்த இந்திய ரிசர்வ் வங்கி, பி.எம்.சி கூட்டுறவு வங்கியின் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த உத்தரவின்படி, ரூ.1,000-க்கு மேல் எந்தவொரு வங்கிக் கணக்கிலிருந்தும் பணம் எடுக்க முடியாது; வங்கியால் புதிய டெபாசிட் களைப் பெறவோ, கடன்களை வழங்கவோ இயலாது; புதிய முதலீடுகளை மேற்கொள்ளக் கூடாது; சொத்துகளை வாங்கவோ, விற்கவோ கூடாது என்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் அடுத்த ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதேசமயம், வங்கியின் உரிமம் நீக்கப்படவில்லை என்றும் மறுஉத்தரவு வரும் வரை பி.எம்.சி கூட்டுறவு வங்கி மேற்குறிப்பிட்ட கட்டுப்பாடு களுடன் இயங்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரியல் எஸ்டேட் கடன் சிக்கலில்...

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிற்கு முந்தைய நாள் வரை பி.எம்.சி வங்கியின் நிதிநிலை குறிப்பாக, வாராக்கடன் அளவு குறித்த சந்தேகம் யாருக்கும் எழவில்லை. கடந்த ஆண்டிற் கான (2018-19) நிதி நிலை அறிக்கையில்கூட பி.எம்.சி வங்கி ரூ.99 கோடி வருடாந்தர லாபம் ஈட்டியதாகவும் நிகர வாராக்கடன் கட்டுக்குள் (2.19%) இருப்பதாகவுமே அறிவிக்கப் பட்டிருந்தது. அதுமட்டு மல்லாமல், நிகர லாபத்தில் முதலீட்டாளர்களுக்கு 11% டிவிடெண்ட்கூட தரப்பட்டது.

மும்பையைத் தலைமையிடமாகக்கொண்ட ஹௌசிங் டெவலப்மென்ட் அண்டு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (HDIL) நிறுவனத்திற்கு சுமார் ரூ.2,500 கோடி அளவிற்கு பி.எம்.சி வங்கிக் கடன் வழங்கி இருப்பதாகவும் அந்தக் கடன் வாராக் கடனாக மாறிவிட்டதாகவும் உறுதி செய்யப் படாத செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஹெச்.டி.ஐ.எல் நிறுவனம் ஏற்கெனவே நொடிந்துவிட்டிருப்பதும் அந்த நிறுவனத்தின் கடன் தீர்வுக்காக வங்கிகள் தேசியத் தீர்வாணையத்தை (NCLAT) நாடியிருப்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில், ஹெச்.டி.ஐ.எல் நிறுவனத்திற்கு இவ்வளவு கடன் வழங்கியிருப்பதை மறைத்ததன் காரணமாகவும் வங்கியின் மொத்த மூலதனத்தின் (ரூ.933.93 கோடி) அளவைவிட வாராக்கடன் அளவு அதிகமாக இருப்பதாலுமே பி.எம்.சி வங்கி முடக்கப்பட்டிருப்பதாகவும் ஊகங்கள் எழுந்துள்ளன. ஆனால், இதுகுறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது, வாராக்கடன் விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த பி.எம்.சி வங்கியின் நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ், ஹெச்.டி.ஐ.எல் நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல், வேறு சில ரியல் எஸ்டேட் நிறுவனங் களுக்கும் கடன் வழங்கியிருப்ப தாகவும் தெரிவித்தார்.

அதேசமயம், வங்கியின் துல்லியமான வாராக்கடன் அளவு குறித்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். ஆனால், ஹெச்.டி.ஐ.எல் நிறுவனத்திற்கு வழங்கிய கடன் ரூ.2,500 கோடிக்கும் குறைவு தான் என்று அவர் குறிப்பிட்டார்.

கடன் தந்த நிறுவனத்திலேயே பங்கு

பி.எம்.சி வங்கியின் தலைவரான வர்யம் சிங், இந்த வங்கிக் கடன் ஹெச்.டி.ஐ.எல் நிறுவனத்தின் 1.91% பங்குகளை 2017 வரை வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு அதிக அளவில் கடன் தரப் பட்டதற்கு வர்யம் சிங் ஒரு காரணமாக இருப்பாரோ என்கிற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.

டெபாசிட்தாரர்களின் நிலை என்ன..?

பி.எம்.சி வங்கியின் வாராக்கடன் அளவு குறித்த ரிசர்வ் வங்கியின் விசாரணை முடிந்த பின்னரே வங்கி சந்தித்துள்ள இழப்பு குறித்த துல்லியமான தகவல்கள் வெளிவரும். அதுவரை டெபாசிட்தாரர்கள் பொறுமையாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

வங்கி டெபாசிட்களுக்கு டெபாசிட் இன்ஷூரன்ஸ் அண்டு கிரெடிட் கேரன்டி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் காப்பீடு ரூ.1 லட்சம் வரை உள்ளது. எனவே, ஒரு லட்சம் வரை டெபாசிட் வைத்திருப்பவர்களுக்குப் பணம் முழுமையாகக் கிடைத்துவிட வாய்ப்புள்ளது. அதற்குமேல் உள்ள டெபாசிட் தொகையைத் திரும்பப் பெறுவது, கடன் வசூல் மற்றும் வங்கியின் உண்மையான நிதிநிலையைப் பொறுத்தே அமையும். கடந்த முறை, 2001-ம் ஆண்டு கேத்தன் பரேக் ஊழலில் சிக்கிய (அகமதாபாத்தைச் சார்ந்த) மாதவ்புரா மெர்கண்டைல் வங்கியின் டெபாசிட்தாரர்கள் தங்களது வைப்புத் தொகையைத் திரும்பப் பெற பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்ததை யாரும் மறக்க முடியாது.

வங்கிகள் – நம்பிக்கையின் அடையாளம்

அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் சிறிய வங்கிகள் செயல்படாமல் முடங்குவது வாடிக்கையான விஷயம்தான். என்றாலும், அங்கு டெபாசிட்தாரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு இந்தியாவைவிடப் பல மடங்கு அதிகம். உதாரணமாக, 2,50,000 டாலர் வரையிலான டெபாசிட்களுக்கு அமெரிக்காவில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இந்தத் தொகை கிட்டத்தட்ட ரூ.1.78 கோடி ஆகும்.

இந்தியாவிலோ டெபாசிட் காப்பீடு ரூ.1 லட்சம் மட்டும்தான். இந்தக் காப்பீட்டுத் தொகை 1993-ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப் பட்டதாகும். கடந்த 26 வருடங்களுக்கான பணவீக்கத்தைக் கருத்தில்கொள்ளும்போது, இந்திய டெபாசிட்களுக்கான காப்பீட்டுத் தொகையைப் பல மடங்கு அதிகரிக்க வேண்டிய தேவையை உணர முடியும்.

மேலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தேசத்தின்மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் அடையாளமாகவே வங்கிகள் பார்க்கப்படு கின்றன. வங்கிகள் முடக்கப்படும்போது விவசாயிகள், சிறு குறு வணிகர்கள், பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் எனச் சாதாரண மக்களின் வாழ் வாதார சேமிப்பே கேள்விக்குறியாகிவிடுகிறது. எனவே, கூடியவிரைவில் மக்கள் டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற மத்திய,

மாநில அரசுகளும் ரிசர்வ் வங்கியும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

(இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே)