பல கோடி மக்களுக்கும், பல தொழில்களுக்கும், துறைகளுக்கும் பெரும் இன்னல்களையும் கடும் நெருக்கடிகளையும் கொரோனா பெருந்தொற்று கொடுத்திருந்தாலும், சில துறைகளுக்கு அரிதான நல்வாய்ப்புகளையும் வாரி வழங்கியிருக்கிறது.

வெகு சமீப காலம் வரை பல சிக்கல்களைச் சந்தித்துவந்த தொலைத் தொடர்புத்துறையில் கடந்த இரண்டு மாதங்களாக அந்நிய நேரடி முதலீடு கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டிருக்கிறது. ஃபேஸ்புக், கூகுள் உட்பட பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் பெரும் முதலீடுகளைச் செய்துவருகின்றன. இதைத் தொடர்ந்து இன்னும் பல வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கவனம் இந்திய தொலைத் தொடர்புத்துறையின் பக்கம் திரும்பிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாகப் படாத பாடுபட்டுவந்த இந்தத் துறையை நோக்கி இப்போது அந்நிய நேரடி முதலீடு (FDI) படையெடுக்க என்ன காரணம்..?

வலிமிகுந்த கடந்த காலம்..!

கடந்த 2012-ம் ஆண்டு, 2ஜி அலைக்கற்றை வழக்கின் விளைவாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது அந்தத் துறையின் வளர்ச்சியில் இடியாக விழுந்தது. தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கிடையேயான கடும் போட்டியின் விளைவாகக் கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டதும், கட்டமைப்பு விரிவாக்கத்துக்கான முதலீட்டுத் தேவைகளும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிதி ஆதாரத்தைப் பலவீனப்படுத்தின. விலையில்லா ஜியோவின் அறிமுகம் வாடிக்கையாளர்களுக்கு வரமாக அமைந்தாலும், போட்டி நிறுவனங்களின் வருவாயை வெகுவாக பாதித்தது.

ஒரு காலத்தில் தொலைத் தொடர்புத்துறையில் ஆதிக்கம் செலுத்திவந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா டெலிகாம், ஏர்செல் போன்ற நிறுவனங்கள் கடையைக் கட்ட வேண்டிய சூழ்நிலை உருவானது. அரசுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல் போன்ற நிறுவனங்களும்கூட கடும் நெருக்கடியைச் சந்தித்தன.

இந்த நிலையில், `ரூ.1.47 லட்சம் கோடி ரூபாய் வருவாய் நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும்’ என்ற உச்ச நீதிமன்றத்தின் ஆணை தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மீது மற்றுமொரு சம்மட்டி அடியாக விழுந்தது.

தகவல்தான் இனி கச்சா எண்ணெய்..!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கியத் தயாரிப்பு கச்சா எண்ணெயாக இருந்தது ஒரு காலம். ஆனால், ஜியோ அறிமுகம் அந்த நிலையை வெகுவாக மாற்றியது. ஜியோவின் விலையில்லா திட்ட அறிமுகம், விளிம்புநிலை மக்களையும் இன்டர்நெட் யுகத்துக்கு இழுத்து வந்தது. பொதுமக்களிடையே மொபைல் இணையதள உபயோகம் புதிய உச்சத்தைத் தொட்டது. கவர்ச்சிகரமான புதிய நவீன தகவல் தொழில்நுட்ப ஆப்கள், சமூக ஊடகங்கள், மின்னணு வணிகம், மின்னணு நிதி நிர்வாகம், ஆன்லைன் பிளாட்ஃபார்ம் என மொபைல் உபயோகம் பல பரிமாணங்களை அடைந்தது.

ஜியோ அறிமுகம் ஆரம்பகட்டத்தில் மற்ற நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக அமைந்தாலும், மக்களின் இணையதளப் பயன்பாடு அதிகரித்ததால், அனைத்து நிறுவனங்களுக்கும் வருவாய் அதிகரித்தது.

ஊரடங்கு தந்த பரிசு...!

கொரோனாநோய்த் தொற்றின் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கு பலருக்கும் பலவித வேதனைகளைத் தந்தாலும், தொலைத் தொடர்புத் துறைக்கு மட்டும் இது பொற்காலமாக அமைந்துவிட்டது ஆச்சர்யமே. இந்தியா மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் தங்கச் சுரங்கங் களாகவே மாறி விட்டன.

ஊரடங்கு காலம், வீட்டிலிருந்தே வேலை, படிப்பு, மின்னணு வணிகம்/வர்த்தகம், சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என இணையத்தின் மூலம் புதிய உலகம் சாத்தியமே என்ற நிலையை உருவாக்கியது. இணையதளப் பயன்பாடு புதிய உச்சத்தைத் தொட்டதும் இந்தக் காலத்தில்தான். ஃபேஸ்புக், அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், கூகுள், ஜூம் போன்ற பெரு நிறுவனங்கள் பட்டையைக் கிளப்ப, தொழில்நுட்ப நிறுவனங்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்காவின் நாஸ்டாக் குறியீடு கொரோனா காலத்தில் ஏற்றத்தைச் சந்தித்தது. இதே காலகட்டத்தில் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான பங்குச் சந்தைக் குறியீடுகள் வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.

உலகெங்கும் பரவிய தொலைத் தொடர்பு வெற்றிப் பயணம் இந்தியாவிலும் பிரதிபலிக்கத் தொடங்கியிருக்கிறது. பன்னாட்டுச் சமூக ஊடக ஜாம்பவானான ஃபேஸ்புக், ரிலையன்ஸ் நிறுவனத்தில் 9.99% உரிமையை கைப்பற்றியுள்ளது. இதற்கு அந்த நிறுவனம் கொடுத்த விலை சுமார் ரூ.44,000 கோடி. ரூ.10,00,000 கோடி சந்தை மதிப்புள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பிரிவு மட்டுமே சுமார் ரூ.5,00,000 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. சர்வதேச முதலீட்டு நிறுவனமான கே.கே.ஆர் 1.5 பில்லியன் டாலர் தொகையை ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. மற்றொரு முதலீட்டு நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக்கும் பெருந்தொகையை ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. ‘கடனில்லா ரிலையன்ஸ்’ என்ற முகேஷ் அம்பானியின் கனவை நனவாக்குவதில் ஜியோ பேருதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்தியாவின் மற்ற பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான பாரதி ஏர்டெல், வோடாஃபோன் ஆகிய நிறுவனங்களும் பெரும் அந்நிய முதலீடுகளைப் பெற்று வருகின்றன.

உலகிலேயே மிக அதிக வாடிக்கை யாளர்களைப் பெற்றுள்ள இரண்டாவது நாடு இந்தியா. இங்கு தொலைத் தொடர்புத்துறை நல்ல வளர்ச்சி காணும் என்ற எதிர்பார்ப்பில் பல பன்னாட்டு நிறுவனங்கள் படை எடுக்கின்றன. அடுத்துவரும் 5ஜி அலைக்கற்றை அறிமுகம் இந்தியத் தொலைத் தொடர்புத்துறையைப் புதிய தளங்களுக்கு இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

(இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துகளே!)