Published:Updated:

கொரோனா ஹாட்ஸ்பாட் கோயம்பேடு! - யார் காரணம்?

‘ஊரடங்கு நேரத்தில் ஒட்டு மொத்தமாக அனைவரும் கோயம் பேட்டில் கூட வேண்டாம்’ என்று மார்க்கெட்டை மூன்றாகப் பிரிக்க முயன்றது அரசு.

பிரீமியம் ஸ்டோரி
கொரோனா பரவல் மையமாக கோயம்பேடு மார்க்கெட் உருமாறியது அரசுக்கு பெரும் தலைவலி என்றால், வியாபாரிகளின் போராட்டமும் கிடுகிடுவென உயர்ந்துவரும் விலைவாசியும் அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கின்றன.

40 நாள் ஊரடங்கில் கொரோனா பரவலை கச்சிதமாகத் தடுத்து நிறுத்திய அரசு இயந்திரத்துக்கு பெரும் சோதனையாக வந்து சேர்ந்தது கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கூடிய கூட்டம். கட்டுப்பாடு களை மீறி, மக்களும் குறு, சிறு வியாபாரி களும் அங்கே கூடியதன் விளைவு... காய்கறி களுடன் கொரோனாவையும் தமிழகம் முழுக்க பார்சல் செய்து அனுப்பி விட்டது கோயம்பேடு மார்க்கெட்.

கண்ணன் - ராஜசேகர் - கார்த்திகேயன்
கண்ணன் - ராஜசேகர் - கார்த்திகேயன்

விபரீதத்தை உணர்ந்துகொண்ட அரசு, தற்போது கோயம்பேடு மார்க்கெட்டை மூடி சீல் வைத்திருப்பதுடன், சென்னை நகருக்கு வெளியே திருமழிசையில் மார்க் கெட்டை இடமாற்றம் செய்யும் பணியிலும் தீவிரமாகியிருக்கிறது.

இதுகுறித்துப் பேசும் சமூக ஆர்வலர் கண்ணன், ‘‘லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கோயம்பேட்டில் வியாபாரிகள் கடைகளைத் திறந்ததால்தான் இவ்வளவு பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன.

‘ஊரடங்கு நேரத்தில் ஒட்டு மொத்தமாக அனைவரும் கோயம் பேட்டில் கூட வேண்டாம்’ என்று மார்க்கெட்டை மூன்றாகப் பிரிக்க முயன்றது அரசு. ஆனால், பேச்சு வார்த்தையில் கடைசிவரை வியாபாரிகள் அதற்கு ஒத்துழைக்கவே இல்லை. இப்போதும்கூட, மார்க் கெட்டை திருமழிசைக்கு இடமாற்றம் செய்யும் அரசின் முயற்சியை எதிர்த்து வியாபாரிகள் சங்கத்தினர் குரல் கொடுத்து வருகின்றனர்.’’ என்றார்.

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

இதுகுறித்துப் பேசிய கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகர், ‘‘ஊரடங்கு அறிவிக்கப் பட்ட இந்த 40 நாள்களாகவே, நாங்களும் கடையை மூடிவிட்டு வீட்டோடு இருக்கத் தான் நினைக்கிறோம். அரசு அதிகாரிகள் தான் ‘காய்கறிகள், அத்தியாவசிய தேவை’ என்று சொல்லி, மார்க்கெட்டை கட்டாய மாகச் செயல்பட வைத்தனர். அதனால்தான் மக்களுக்கு காய்கறிகள் தட்டுப்பாடின்றி கிடைத்தன. ஆனால், தனி மனித இடைவெளியைப் பின்பற்றாமல், மக்கள் அதிகளவில் கூடியதால்தான் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது அரசுதான். ஆனால், ‘கொரோனாவைப் பரப்பியதே காய்கறி வியாபாரிகள்தான்’ என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோயம்பேட்டில் ஒட்டுமொத்தமாக 27 சங்கங்கள் செயல்பட்டுவருகின்றன. யாரையும் கலந்து ஆலோசிக்காமல், ஒரே இரவில் சீல் வைத்து, திருமழிசைக்கு போகச் சொல்லிவிட்டனர். இதனால், கடைகளில் இருந்த காய்கறிகள் அழுகி விட்டன. காய்கறி வரத்தும் நின்றுவிட்டது. எனவே, இனி காய்கறி விலை கடுமையாக உயரும்.

கோயம்பேடு
கோயம்பேடு

மார்க்கெட்டில் இருந்த 10,000 தொழிலாளர்களும் அவரவர் ஊருக்குப் போய்விட்டனர். வெறும் 100 பேர் மட்டும்தான் இப்போது இருக்கின்றனர். இவர்களை வைத்துக்கொண்டு எப்படி வியாபாரத்தைத் தொடங்க முடியும்? திருமழிசையில் என்ன வசதிகள் செய்யப் பட்டிருக்கின்றன? அங்கேயும் மக்கள் ஒன்றாகக் கூடத்தானே போகிறார்கள். அப்போது கொரோனா பரவாதா?’’ என்று கேள்விகளை அடுக்கினார்.

இதுகுறித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமச் செயலாளர் கார்த்திகேயனிடம் பேசினோம். ‘‘தமிழ்நாட்டில் முதல் கொரோனா தொற்று மார்ச் மாதமே கண்டறியப்பட்டுவிட்டது. ஆனால், கோயம்பேட்டிலிருந்து முதல் தொற்று அறிகுறி ஏப்ரல் 24-ம் தேதிதான் கண்டறியப்பட்டது. எனவே, கொரோனாவை கோயம்பேடுதான் பரப்பியது என்று யாரும் சொல்லவில்லை. மக்களின் அத்தியாவசிய தேவையாக இருக்கும் காய்கறி வியாபாரம் தொடர வேண்டும்; விவசாயிகளும் பாதிக்கப்படக் கூடாது என ஆலோசித்துதான், மார்க்கெட் இடமாற்றம் சம்பந்த மாக பலமுறை கோயம்பேடு வியாபாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினோம்.

இதன் தொடர்ச்சியாகத்தான் பூ, பழம் மார்க்கெட்டை மாதவரத்துக்கு மாற்றினோம். இப்போது திருமழிசையில் அனைத்து வசதிகளுடன் காய்கறி மார்க்கெட்டை மாற்றம் செய்வதற்கான பணிகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் முழுவீச்சில் நடைபெறுகின்றன. வியாபாரிகள், பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை. தட்டுப் பாடின்றி காய்கறி கிடைப்பதற்கான அனைத்து வசதிகளையும் அரசின் தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் இணைந்து செய்துவருகிறார்கள்’’ என்றார் விளக்கமாக.

பொதுமக்களுக்கு தட்டுபாடின்றி காய்கறி கிடைக்க வழிவகை செய்வது அரசின் கடமை. காய்கறிச் சந்தை எங்கு செயல் பட்டாலும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மட்டும்தான் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான ஒரே தீர்வு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு