Published:Updated:

ஏற்றத்தில் ஐ.டி துறை பங்குகள், உயரும் தங்கம் விலை... என்ன காரணம்?

ஐ.டி துறை
ஐ.டி துறை

வர்த்தக நேரத்தில் ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்ததே ஐ.டி துறை பங்குகளின் ஏற்றத்துக்குக் காரணமாக இருக்கிறது.

பங்குச் சந்தை சரிவிலும் ஐ.டி நிறுவனப் பங்குகள் ஏற்றத்தில் செயல்பட்டதுக்கு என்ன காரணம்?

ஷேர்லக்: "கடந்த சில வாரங்களில் பங்குச் சந்தை பெருத்த சரிவு கண்ட சூழ்நிலையிலும்கூட, டி.சி.எஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் ஏற்றத்தில் செயல்பட்டன. நிஃப்டி இண்டெக்ஸில் ஏற்றம் பெற்றிருந்த ஆறு நிறுவனப் பங்குகளில் மூன்று நிறுவனங்கள் ஐ.டி துறை சார்ந்த நிறுவனங்கள். அன்றைய தினம், நிஃப்டி ஐ.டி இண்டெக்ஸ் ஏற்றத்தில் செயல்பட்டிருந்தது. மற்ற இண்டெக்ஸ்கள் அனைத்தும் இறக்கம்கண்டிருந்தன.

வர்த்தக நேரத்தில் ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்ததே ஐ.டி துறை பங்குகளின் ஏற்றத்துக்குக் காரணமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்த கொரோனா ஊரடங்கு காலத்திலும்கூட வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் வீட்டிலிருந்தபடியே ஐ.டி ஊழியர்கள் பணியாற்றுவது அந்த நிறுவனங்களின் மீது முதலீட்டாளர் களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கைக்கும் ஏற்றத்துக்கும் காரணமாகும்."

working in computer
working in computer

> மாருதி சுஸூகி பங்கு விலை திடீர் உயர்வுக்கு என்ன காரணம்?

> எல் & டி இன்ஃபோடெக் நிறுவனத்தின் பங்கு விலையில் திடீர் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாமே?

> கொரோனா விளைவால் எந்தத் துறைகளுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது?

- இந்தக் கேள்விகளுக்கும் ஷேர்லக் அளித்த விரிவான பதில்களை முழுமையாக நாணயம் விகடன் இதழில் வாசிக்க > ஷேர்லக் : கொரோனாவால் பயனடையும் துறைகள்! Click here https://bit.ly/3gn05dm

தொடர்ந்து ஏற்றத்தில் தங்கம்! - இன்னும் விலை உயருமா?

கோவிட் 19-ன் தாக்கங்கள் பங்குச் சந்தையைக் கீழ்நோக்கி நகர்த்தச் செய்யும் அதே வேளையில், தங்கத்தின் விலையில் அதற்கு நேர்மாறாக மேல்நோக்கி நகர்த்தவும் செய்கின்றன. ஏழு வருட உச்சத்தில் சர்வதேச விலையானது வர்த்தகமாகிவருகிறது.

இன்றைய நிலையில், உலகப் பொருளாதாரம் என்பது நிச்சயமற்றதன்மை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மிகவும் கவலைக்குரிய செய்தியாகப் பார்க்கப்படுகிறது. உலகையே அச்சுறுத்திவரும் கோவிட்-19 வைரஸ் 150 நாடுகளின் உற்பத்தி, போக்குவரத்து போன்ற முக்கியப் பொருளாதார இயக்கங்களைத் தடை செய்திருக்கிறது.

தங்கத்தின் விலையேற்றம் என்பது தேவையின் காரணமாக அல்லாமல், மற்ற காரணிகள் அதற்கு அணிவகுத்து நிற்கின்றன. பொதுவாக, விற்பனை அதிகரித்தால் தேவை அதிகரிக்கும். ஆனால், இந்த முறை அப்படியில்லாமல் மத்திய வங்கிகளின் முதலீடுகள், கோல்டு இ.டி.எஃப்-களில் முதலீடு போன்றவற்றால் விலையேற்றம் காணப்படுகிறது.

ஏற்றத்தில் ஐ.டி துறை பங்குகள், உயரும் தங்கம் விலை... என்ன காரணம்?

2015-ம் ஆண்டுக்குப் பிறகு, தங்க உற்பத்தி குறைந்து காணப்படுகிறது. உலக தங்கக் குழுமத்தின் அறிக்கையின்படி, நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் வருடாந்தர அடிப்படையில் மூன்று சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. பொது முடக்கத்தின் காரணமாகச் சுரங்கப்பணிகள் தடைப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருப்பதும் விலையேற்றத்துக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

தங்கம் விலையேற்றதுக்கான காரணங்களை விரிவாகப் பார்ப்பதுடன், எதிர்கால நிலை குறித்த கணிப்பையும் முழுமையாக அறிய > தொடர்ந்து ஏற்றத்தில் தங்கம்! - இன்னும் விலை உயருமா? Click here https://bit.ly/36sPDMV

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு