Published:Updated:

பின்னந்தலையில் புல்லட்... 15 கத்திக்குத்துகள்... திடுக்கிட வைக்கும் கமலேஷ் திவாரி கொலை

Kamalesh Tiwari
பிரீமியம் ஸ்டோரி
Kamalesh Tiwari

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அக்டோபர் 18-ம் தேதி இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த மாநிலத்தையே உலுக்கியிருக்கிறது.

பின்னந்தலையில் புல்லட்... 15 கத்திக்குத்துகள்... திடுக்கிட வைக்கும் கமலேஷ் திவாரி கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அக்டோபர் 18-ம் தேதி இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த மாநிலத்தையே உலுக்கியிருக்கிறது.

Published:Updated:
Kamalesh Tiwari
பிரீமியம் ஸ்டோரி
Kamalesh Tiwari

வர் கொல்லப்பட்டவிதமே வித்தியாசமானது. சமூக வலைதளங்கள் மூலம் கமலேஷ் திவாரியுடன் நட்பாகிய சிலர், இனிப்பு வழங்குவதற்காக அவரை நேரில் சந்திக்க வருவதைப்போல் வந்து கொலை செய்திருக்கிறார்கள். கமலேஷ் திவாரியின் வீட்டுக்கு ஸ்வீட்பாக்ஸுடன் கொலையாளிகள் வரும் சி.சி.டி.வி காட்சிப் பதிவுகளைவைத்து கொலையாளிகளைப் பிடிக்கக் களமிறங்கியிருக்கிறது உத்தரப்பிரதேச போலீஸ்.

கொலை வழக்கில் கைதானவர்கள்
கொலை வழக்கில் கைதானவர்கள்

திவாரிக்குக் கொடுப்பதற்காக கொலையாளிகள் கொண்டுவந்த ஸ்வீட்பாக்ஸில், சூரத் முகவரி இருந்தது. கொலை நடப்பதற்கு முந்தைய நாளான அக்டோபர் 17-ம் தேதி, கொலையாளிகள் லக்னோவில் உள்ள ஹோட்டலில் தங்கினர். அங்கே, அவர்கள் தங்களின் உண்மையான பெயர் மற்றும் முகவரியைக் கொடுத்திருந்ததாகவும், திவாரியைக் கொன்றுவிட்டு மீண்டும் அந்த ஹோட்டலுக்குச் சென்று உடைகளை மாற்றிக்கொண்டு சூரத்துக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் அஷ்பக் ஷேக் (34), மொய்னுதீன் பதான் (27) ஆகிய இருவர் முதலில் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து மௌலானா, பைசான், ரஷீத் பதான் ஆகிய மூவரை உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநில அதிரடிப்படை போலீஸார் கைதுசெய்துள்ளனர். ‘கடந்த காலங்களில், நபிகள் நாயகத்துக்கு எதிராக கமலேஷ் திவாரி பேசியதற்காக இந்தக் கொலை நடந்திருக்கலாம்’ என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமலேஷ் திவாரி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் யோகி ஆதித்யநாத்
கமலேஷ் திவாரி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் யோகி ஆதித்யநாத்

ஆனால், கமலேஷின் தாயார் கவுசம் திவாரி ஊடகங்களிடம் கண்ணீருடன் சொன்ன தகவல் அதிர்ச்சி ரகம். தன் மகன் கொலை தொடர்பாக பா.ஜ.க-வின் உள்ளூர் தலைவரான ஷிவ் குமார் குப்தா மீது குற்றம்சாட்டியுள்ளார். “தத்தேரி பகுதியைச் சேர்ந்த ஷிவ் குமார் குப்தா, ஒரு மாஃபியா. அவர்மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவருக்கும் கிஷோருக்கும் உள்ளூரில் கோயில் கட்டுவது தொடர்பாக மோதல் நீடித்தது. எனவே, அவர்தான் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கவேண்டும். அவரை விசாரித்தால்தான் உண்மை வெளிவரும்.

கதறும் கமலேஷின் மனைவி
கதறும் கமலேஷின் மனைவி

என் மகன் திட்டமிட்டு கொல்லப்பட்டிருக் கிறான். யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச மாநில முதல்வராக ஆவதற்கு முன், என் மகனின் பாதுகாப்புக்காக 17 போலீஸார் இருந்தனர். யோகி பதவியேற்ற பிறகு போலீஸாரின் எண்ணிக்கையை நான்காகக் குறைத்துவிட்டனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த நான்கு போலீஸாரிடமும் துப்பாக்கி இல்லை. வெறும் லத்தியுடனேயே பாதுகாப்புக்கு வந்தனர். கொலை நடந்த சமயத்தில் அவர்கள் எங்கே போனார்கள் எனத் தெரியவில்லை. ஏதோ சதி நடந்திருக்கிறது. என் மகன் இறந்ததிலிருந்து 12 மணி நேரம் போலீஸார் எங்களை அலைக்கழித்தனர். என்னை காரில் வைத்துப் பூட்டினர். என் மருமகளையும் பேரனையும் போலீஸார் அடித்தனர். ‘முதல்வர் வந்தால்தான் உடலை எடுப்போம்’ என நாங்கள் எவ்வளவோ வாதிட்டோம். ஆனால், முதல்வர் வரவில்லை. நான் சொல்வதை மாநில அரசோ, போலீஸோ கேட்கவில்லை. அவர்கள் இஷ்டம்போல் விசாரணையை நடத்துகின்றனர்” என்று சொல்லியிருக்கிறார்.

கமலேஷ் திவாரி
கமலேஷ் திவாரி

கமலேஷ் குடும்பத்தினரின் குற்றச்சாட்டை, உத்தரப்பிரதேச மாநில காவல்துறை டி.ஜி.பி-யான ஓ.பி.சிங் மறுத்துள்ளார். “அவர் இறப்பதற்கு சில நாள்களுக்கு முன்பு, கொல்கத்தாவுக்குச் செல்லவிருப்பதாகக் கூறி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் எனக் கேட்டார். அவர் கேட்டதை நாங்கள் செய்துவிட்டோம். எங்கள்மீது குற்றம்சாட்டுவது அபாண்டம்’’ என்று கூறியிருக்கிறார்.

ஓ.பி.சிங்
ஓ.பி.சிங்

இதையடுத்து, அக்டோபர் 20-ம் தேதி கமலேஷுன் குடும்பத்தினரை நேரில் அழைத்துப் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “கொலையாளிகள் அனைவரும் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள்” என்று வாக்குறுதி அளித்துள்ளார். இந்தச் சூழலில் கமலேஷின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. ‘அவர் உடலில் 15 முறை கத்தியால் குத்தப்பட்டதற்கான காயங்கள் உள்ளன. கழுத்தில் ஆழமான இரண்டு காயங்கள் இருக்கின்றன. பின்னந்தலையில் துப்பாக்கி புல்லட் பாய்ந்திருக்கிறது. அருகில் நின்று தலையில் சுட்டிருக்கிறார்கள். அவரை கொலைசெய்ய வேண்டும் என்பதைத் தாண்டி வெறியுடன் நடந்துகொண்டிருக்கிறார்கள்’ என்று அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

நேர்மையான விசாரணையில் மட்டுமே இந்தக் கொலை வழக்கில் புதைந்திருக்கும் மர்மங்கள் விலகும்!

கனிஷ்கா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism