Published:Updated:

10 ஆண்டுகள்... காணாமல்போன 16,000 பேர்! - இன்னும் முடியாத ஈழத்தின் துயரம்!

ஈழத்தின் துயரம்
பிரீமியம் ஸ்டோரி
ஈழத்தின் துயரம்

துல்லியமான புள்ளிவிவரங்கள் இல்லையெனினும், அரசால் சிறைவைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம் என்பது நிச்சயம்.

10 ஆண்டுகள்... காணாமல்போன 16,000 பேர்! - இன்னும் முடியாத ஈழத்தின் துயரம்!

துல்லியமான புள்ளிவிவரங்கள் இல்லையெனினும், அரசால் சிறைவைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம் என்பது நிச்சயம்.

Published:Updated:
ஈழத்தின் துயரம்
பிரீமியம் ஸ்டோரி
ஈழத்தின் துயரம்

போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. போரின்போதும் அதன் பிறகும் இலங்கைப் பாதுகாப்புப் படையிடம் சரணடைந்த, சந்தேகத்தின் பேரில் அரசால் கைதுசெய்யப்பட்டவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் தவிக்கின்றன ஆயிரக்கணக்கான குடும்பங்கள். துல்லியமான புள்ளிவிவரங்கள் இல்லையெனினும், அரசால் சிறைவைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம் என்பது நிச்சயம்.

இந்தச் சூழலில் விரைவில் மூன்று பிரதான தேர்தல்களைச் சந்திக்கவுள்ளது இலங்கை. அதேசமயம் போர்க்குற்றங்களை எதிர்கொள்கிற சவேந்திர சில்வா ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பதும் பெரும்சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

10 ஆண்டுகள்... காணாமல்போன 16,000 பேர்! - இன்னும் முடியாத ஈழத்தின் துயரம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், 2017-ம் ஆண்டு பிப்ரவரி-20 அன்றுதான் முதல் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால், ஒரு முன்னேற்றமுமில்லை. காணாமல்போனவர்கள், ரகசிய காவல் நிலையங்கள் மற்றும் அதில் சிறைவைக்கப் பட்டுள்ளவர்கள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை அரசு வெளியிட வேண்டும் என்பதுதான் அவர்களின் பிரதான கோரிக்கை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2015, அக்டோபர் 1-ம் தேதி ஐ.நா சபையில் இலங்கை அரசு ஒப்புக்கொண்ட தீர்மானம் (30/1), இலங்கையில் மனித உரிமைகளை நிலைநிறுத்துவது, போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வது, பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்கான நடவடிக் கைகளை மேற்கொள்வது ஆகியவற்றை வலியுறுத்துகிறது. அதில் தந்த வாக்குறுதியின்படி அமைக்கப்பட்டதுதான் ஓ.எம்.பி (Office of Missing Persons) அமைப்பு. `‘சர்வதேச அழுத்தத்தின் காரணமாக இலங்கை அரசு நடத்தும் கண்துடைப்பு நாடகத்தின் ஒரு பகுதியே இது’’ என்கிறார்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர். ஏனெனில், ``இந்த அமைப்புக்கு விசாரிக்கக்கூடிய அதிகாரமும் இல்லை; கட்டமைப்பும் இல்லை. அதனால், இதை ஏற்கப்போவதில்லை’’ என்கின் றனர் போராடும் தமிழர்கள்.

10 ஆண்டுகள்... காணாமல்போன 16,000 பேர்! - இன்னும் முடியாத ஈழத்தின் துயரம்!

இலங்கையில் காணாமல் போனோரின் தற்போதைய நிலை பற்றி அதில் தொடர் புடையவர்களிடம் பேசினோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் அமைப்பாளராக இருக்கிறார் லீலாவதி. அவர் நம்மிடம், ‘‘இதுவரை 16,000 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகக் கண்டறிந்துள்ளோம். பதிவுசெய்யப்படாதவை ஏராளம். ஓ.எம்.பி அமைப்பில் பாதிக்கப்பட்ட வர்களின் பிரதிநிதிகள் இல்லை. போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள ராணுவத்தைச் சேர்ந்தவர்களுமே இதில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சிங்களக் கட்சிகளைத்தான் நம்ப முடியாது என்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களுமே எங்கள் துயரங்களைப் பணமாக்குவதில் குறியாக உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உள்நாட்டு விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கையே போய்விட்டது. சர்வதேச விசாரணை ஒன்றே எங்களுக்கான நீதியையும் தீர்வையும் பெற்றுத்தரும். சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிடுவதற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறோம். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லாமல் போனாலும் அவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். அதுவரை எங்களுடைய போராட்டம் தொடரும்’’ என்றார் உறுதியுடன்.

ஆயுள்தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த சதீஷ்குமாரின் தயார் பவளவள்ளி, ‘‘அரசின் அடக்குமுறைக்குப் பயந்து, செய்யாத குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்டு சிறைவாசம் அனுபவித்தவர்களே அதிகம். எங்களுக்கு சட்டப் போராட்டம் நடத்தகூட எந்தத் தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கவில்லை. ஐ.நா தீர்மானம் போன்ற புற அழுத்தங்களின் காரணமாகவே கண்துடைப்புக்கு சில நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது இலங்கையில் அடுத்தடுத்து மூன்று முக்கியத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால், தமிழ்க் கைதிகளின் விடுதலை குறித்து மீண்டும் பேசப்படுகிறது. தமிழர்களின் வாக்குவங்கி அனைவருக்கும் தேவைப்படுவதால், கைதிகள் விடுதலையில் இந்த முறை யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என எதிர்பார்க்கிறோம். சமீபத்தில் அமைச்சர் மனோ கணேசன் தமிழ்க் கைதிகள் விடுதலைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருக்கிறார். நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

ஈழ எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான நிலாந்தன், ‘‘சர்வதேச விசாரணை, சாத்தியமே இல்லாத கனவு. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவருமே உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகளே இல்லை. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஒருமுறை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்து விட்டதாகச் சொன்னார். பிறகு ஒருமுறை, அனைவரும் வெளிநாட்டுக்குச் சென்று விட்டதாகப் பேசியிருக்கிறார். காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் என்பது, ஐ.நா-வுக்காக இலங்கை செய்கிற கண்துடைப்பே. இனப்படுகொலைக்கு நீதி கேட்ட தமிழர்களுக்கு, அது என்றுமே கிடைக்கப்போவதில்லை. உலகில் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை செய்த எந்த அரசையுமே இதுவரை விசாரிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட்டதில்லை. இலங்கையிலும் அதுதான் நடக்கும். தமிழ் மக்களுக்காகச் செயல்படுகிற அமைப்புகளுமே ஒருங்கிணைப்பு, செயல்திட்டம் இல்லாமல் இலக்கற்றுதான் சென்றுகொண்டிருக்கின்றன. தமிழர்களுக்கான போராட்டங்கள் என்பது வெறும் கோஷங்களுடன் முடிந்துவிட்டன. ஆக்கபூர்வமான செயல்களை நோக்கி நகரவேயில்லை” என்றார் கொதிப்புடன்.

10 ஆண்டுகள்... காணாமல்போன 16,000 பேர்! - இன்னும் முடியாத ஈழத்தின் துயரம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன், ‘‘இலங்கை அரசியல் கட்சிகளிடம் என்றுமே தமிழர்களுக்கான நீதியைப் பெற முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தங்கள் வரம்புக்கு உட்பட்டுதான் செயல்பட முடியும். சர்வதேசச் சமூகத்தின் ஆதரவு இல்லாமல் செயல்பட்டு எங்களால் தமிழர்களுக்கான நீதியைப் பெற முடியாது. தமிழர்கள் நலன்களுக்காகப் போராடுகிறவர்களும் ஒருங்கிணைப்பில்லாமல் சிதறிக்கிடப்பது கசப்பான உண்மை. போர்க்குற்றத்தில் ஈடுபட்ட சவேந்திர சில்வாவை ராணுவத் தளபதியாக நியமித்த அதே தினம் காலை, யாழ்ப்பாணத்தில் ஓ.எம்.பி அலுவலகத்தைத் திறந்து இரட்டைவேடம் போடுகின்றனர். விடுதலைப்புலிகளை அழிப்பதில் காட்டிய உறுதியை, சர்வதேசச் சமூகம் தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுத் தருவதிலும் காட்ட முடியும். அதில் தனக்கு முக்கியமான பங்கு உள்ளதை இந்தியாவும் உணர வேண்டும்’’ என்றார். தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி. இலங்கையில் நீதி மறுக்க மட்டுமல்ல... மறைக்கவும் படுகிறது!

சர்வதேச உதவியுடன் உள்நாட்டு விசாரணை!

சாலிய பீரிஸ், இலங்கை அதிபரின் சட்ட ஆலோசகராக இருந்தவர். இலங்கை மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இலங்கை அரசு அமைத்துள்ள ஓ.எம்.பி அமைப்பின் தலைவர் இவர்தான். பல ஆயிரம் பேர் காணாமல்போன நிலையில் ஓ.எம்.பி கேட்டதன் பேரில் காணாமல்போன முக்கியமான ஐந்து பேரைப் பற்றிய ஆதாரங்கள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுப்பதாக சாலிய பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

10 ஆண்டுகள்... காணாமல்போன 16,000 பேர்! - இன்னும் முடியாத ஈழத்தின் துயரம்!

மின்னஞ்சல் வாயிலாக அவரிடம் தகவல்கள் பெற்றோம். ‘`ஓ.எம்.பி என்பது, கண்துடைப்பு அல்ல. இலங்கையில் அனைத்து தரப்புகளிலும் காணாமல்போனவர்கள் இருக்கிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் பத்து ஆண்டுகளாக நிகழ்ந்துவருகின்றன. அதை நிவர்த்தி செய்ய, ஐ.நா தீர்மானத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி ஓ.எம்.பி நிறுவப்பட்டு, செயல்பட்டுவருகிறது. காணாமல்போனவர்களின் சான்றிதழ்கள் பெற்று, அவர்களின் குடும்பங்களுக்கு பொருளாதார உதவிகள் செய்வதை ஓ.எம்.பி முதன்மையான பணியாகச் செய்துவருகிறது. அரசு தரப்பில் உள்ள தரவுகளையும் ஒருங்கிணைத்துவருகிறோம். உள்நாட்டுச் சட்ட விசாரணையின்மீது பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நம்பிக்கையில்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறோம். அதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களையும் நாங்கள் பரிந்துரைத்திருக்கிறோம். சர்வதேச உதவியுடன்கூடிய உள்நாட்டு விசாரணையே நிச்சயம் சரியானதாக இருக்கும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism