Published:Updated:

விழுப்புரம்: கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவியும் உயிரிழப்பு; சோகத்தில் உறவினர்கள்!

சேகர் - பாஞ்சாலை

கணவர் உயிரிழந்த செய்தியைக் கேட்ட மனைவியும் உயிர் இழந்திருக்கும் சம்பவம் கண்டாச்சிபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவியும் உயிரிழப்பு; சோகத்தில் உறவினர்கள்!

கணவர் உயிரிழந்த செய்தியைக் கேட்ட மனைவியும் உயிர் இழந்திருக்கும் சம்பவம் கண்டாச்சிபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
சேகர் - பாஞ்சாலை

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் சேகர் (வயது 70). இவரது மனைவி பெயர் பாஞ்சாலை (வயது 65). இந்தத் தம்பதியினருக்கு தென்னரசு, கலையரசு, குரு என மூன்று மகன்கள் உள்ளனர். கண்டாச்சிபுரத்தில் ஹோட்டல் ஒன்று வைத்து நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வயது மூப்பின் காரணமாக சேகருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. எனவே, அவரது குடும்பத்தினர் அவரை விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். 

உயிரிழப்பு
உயிரிழப்பு
சித்திரிப்புப் படம்

அவரைப் பார்த்துக் கொள்வதற்காக பாஞ்சாலை கூடவே இருந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் பாஞ்சாலை மருத்துவமனையில் வழுக்கி விழுந்ததில், அவரது முதுகில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பாதிப்பு நாளடைவில் தீவிரமாகவே பாஞ்சாலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேகர், இன்று காலை 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

உயிரிழந்த தம்பதி சேகர் - பாஞ்சாலை
உயிரிழந்த தம்பதி சேகர் - பாஞ்சாலை

இந்தத் தகவலை, இன்று மதியம் 1 மணி அளவில் முண்டியம்பாக்கத்தில் சிகிச்சை பெற்று வந்த பாஞ்சாலையிடம் உறவினர்கள் கூறியுள்ளனர். கணவரின் பிரிவு செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாஞ்சாலை, அக்கணமே உயிரைத் துறந்துள்ளார். கணவரின் பிரிவைத் தாங்கிக் கொள்ளாத மனைவி அதிர்ச்சியில் உயிரிழந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.