Published:Updated:

நாங்கள் அகதிகள் இல்லை! - 36 ஆண்டுகளாகப் போராடும் தாயகம் திரும்பிய தமிழர்கள்...

தாயகம் திரும்பிய தமிழர்கள்
பிரீமியம் ஸ்டோரி
தாயகம் திரும்பிய தமிழர்கள்

1985-ல் இந்தப் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைக்கப்பட்டபோது அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர் பள்ளியின் அமைவிடமாக ‘இலங்கை அகதிகள் முகாம்’ என்று பிழையாகப் பதிவுசெய்துவிட்டார்.

நாங்கள் அகதிகள் இல்லை! - 36 ஆண்டுகளாகப் போராடும் தாயகம் திரும்பிய தமிழர்கள்...

1985-ல் இந்தப் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைக்கப்பட்டபோது அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர் பள்ளியின் அமைவிடமாக ‘இலங்கை அகதிகள் முகாம்’ என்று பிழையாகப் பதிவுசெய்துவிட்டார்.

Published:Updated:
தாயகம் திரும்பிய தமிழர்கள்
பிரீமியம் ஸ்டோரி
தாயகம் திரும்பிய தமிழர்கள்

`அகதி’ என்கிற வார்த்தைக்குப் பின்னாலிருக்கும் வலியை அகதிகள் மட்டுமே அறிவார்கள். ஆனால், அரசு அலுவலர் ஒருவரின் அலட்சியத்தால், அகதியாக இல்லாமலேயே கடந்த 36 ஆண்டுகளாக `அகதிகள்’ என்கிற முத்திரையைச் சுமந்து பல்வேறு அலைக்கழிப்புகளுக்கு ஆளாகிவருகிறார்கள் தாயகம் திரும்பிய தமிழர்கள். தேனியில்தான் இப்படியொரு சோகம்!

கடந்த 1940-ம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால், லட்சக்கணக்கான தமிழர்கள் தேயிலைத் தோட்டப் பணிகளுக்காக இலங்கை சென்றார்கள். 1964-ல் மாவோ-சாஸ்திரி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து 1972-ல் தாயகம் திரும்ப விரும்புவோர் இலங்கையிலிருந்து இந்தியா வருவதற்கு வழிவகை செய்யப்பட்டது. அப்படி 1984-ம் ஆண்டு தாயகம் திரும்பிய தமிழர்களில் 225 குடும்பத்தினர் தேனிக்கு அழைத்துவரப்பட்டார்கள். அவர்களுக்காக திருமலாபுரம் ஊராட்சியில் ஒதுக்கப்பட்ட ஒன்பது ஏக்கர் நிலத்தில் வீடுகளை அமைத்துக் கொண்டார்கள். அந்தக் குடியிருப்பை திறந்துவைத்த அப்போதைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ‘அன்னை இந்திரா நகர்’ என்று பெயர் சூட்டினார். இதையடுத்து நடந்தவற்றை அதே பகுதியைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

நாங்கள் அகதிகள் இல்லை! - 36 ஆண்டுகளாகப் போராடும் தாயகம் திரும்பிய தமிழர்கள்...

“1985-ல் இந்தப் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைக்கப்பட்டபோது அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர் பள்ளியின் அமைவிடமாக ‘இலங்கை அகதிகள் முகாம்’ என்று பிழையாகப் பதிவுசெய்துவிட்டார். அனைத்து ஆவணங்களிலும் அந்தப் பெயரே பதிவாகிவிட்டது. தொடர்ந்து, ஊராட்சி ஒன்றியம் சார்பில் நடைபெறும் மேம்பாட்டுத் திட்டங்களிலும் இந்தப் பகுதியை ‘சிலோன் காலனி’ என்றே குறிப்பிட்டார்கள். அப்போது முதல் எங்கள்மீது விழுந்த `அகதிகள்’ என்ற முத்திரையை அகற்ற முடியவில்லை. இந்த அடையாளத்தை நீக்கக் கோரி கடந்த 36 ஆண்டுகளாக 500-க்கும் மேற்பட்ட மனுக்களை மாவட்ட நிர்வாகம் தொடங்கி தமிழக முதல்வர்கள் வரை கொடுத்தும் பலன் இல்லை. எங்களுக்கு எப்போதுதான் விடிவுகாலம் பிறக்குமோ என்று தெரியவில்லை’’ என்றார் அழாத குறையாக!

மேற்கண்ட அடையாளத்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அந்தப் பகுதி மக்கள் நம்மிடம் குமுறித் தீர்த்து விட்டார்கள்... ‘‘பள்ளியின் அமைவிடத்தை ‘இலங்கை அகதிகள் முகாம்’ என்று எழுதியபோதே அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டபோதும் அமைவிட பெயரை மாற்றக் கோரி மனு கொடுத்தோம். அதையும் பொருட்படுத்தவில்லை. இதனால், ஏற்படும் பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல...

நாங்கள் அகதிகள் இல்லை! - 36 ஆண்டுகளாகப் போராடும் தாயகம் திரும்பிய தமிழர்கள்...

இங்கு பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்களின் கல்விச் சான்றிதழில் ‘இலங்கை அகதிகள் முகாம்’ என்று குறிப்பிடப் பட்டிருப்பதால், மேற்படிப்புக்காகப் பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்குச் செல்லும்போது ‘அகதிகள் இல்லை’ என்று சான்றிதழ் பெற்று வரும்படி அதிகாரிகள் கட்டாயப்படுத்துகிறார்கள். வேலைவாய்ப்பிலும் சிக்கல் ஏற்படுகிறது... வேலை தேடிச் செல்லுமிடமெல்லாம் ஏற இறங்க பார்க்கிறார்கள். இத்தகைய பிரச்னை களால் 600 பேர் படிக்கக்கூடிய பள்ளியில், தற்போது 135 பேர் மட்டுமே படிக்கிறார்கள். இந்தப் பிரச்னைகளுக்கு பயந்தே மூன்று கி.மீ தொலைவிலுள்ள குன்னூர் அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் செல்ல வேண்டியிருக்கிறது.

வருவாய்த்துறை மட்டுமே இந்தப் பகுதியை ‘அன்னை இந்திரா நகர்’ என்று ஆவணங்களில் குறிப்பிடுகிறது. ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகியவை ‘சிலோன் காலனி’ என்றும், பள்ளிக் கல்வித்துறை ‘இலங்கை அகதிகள் முகாம்’ என்றும் குறிப்பிடுகின்றன. அதனால், எங்களில் பலருக்கு ‘அன்னை இந்திரா நகர்’ என்ற பெயரில் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளன. இன்னும் சிலருக்கோ ‘சிலோன் காலனி’ என்ற பெயரில் ஆவணங்கள் வழங்கப்படுகின்றன. இதனால், ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்படுகின்றன. சுற்றுவட்டார மக்களும் எங்களை இலங்கை அகதிகளாகவே பார்க்கிறார்கள். இவையெல்லாம் எங்களுக்குக் கடும் மனஉளைச்சலை ஏற்படுத்துகின்றன. முதல்வர்களாக இருந்த ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்த பிறகு, தேனியைச் சேர்ந்த எம்.பி-க்கள் ஆர்.பார்த்திபன், ரவீந்திரநாத் குமார் ஆகியோர் எங்கள் பகுதிக்கு வந்து ஆய்வுசெய்தார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை’’ என்றார்கள்!

இளஞ்செழியன்
இளஞ்செழியன்
முரளிதரன்
முரளிதரன்

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகனிடம் பேசினோம். ‘‘பள்ளிக்குப் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக 2019 நவம்பரில் தொடக்கக்கல்வி இயக்குநருக்குக் கடிதம் அனுப்பினோம். அவரிடமிருந்து, மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆட்சியர் ஒப்புதல் பெற்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.

மாவட்ட ஆட்சியர் முரளிதரனோ, ‘‘பள்ளிக்கல்வித் துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். அவரிடம், ‘‘ஊராட்சி ஒன்றியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றிலும் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமே...” என்று கேட்தற்கு ‘‘விரைவில் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார்.

இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு இடம்பெயர்ந்த தமிழர்களை ‘அகதிகள்’ என்று அழைப்பதைத் தவிர்க்க, அவர்களது முகாம்களை ‘மறுவாழ்வு மையம்’ என்று சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் பெயர் மாற்றினார். இந்த அறிவிப்பு உலகெங்குமுள்ள தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல், தாயகம் திரும்பிய தமிழர்களான அன்னை இந்திரா நகர் மக்கள் மீதான ‘அகதிகள்’ என்ற முத்திரையை அழிக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!