Published:Updated:

சிந்தனை விருந்து! - ஒப்பனை முகங்கள்!

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்தனை விருந்து

தென்கச்சி சுவாமிநாதன், ஓவியம்: சேகர்

விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர் அந்தத் தம்பதி. சிரித்த முகத்துடனும் கனிவுடனும் உபசரிக்கும் விமான பணிப்பெண்களைக் கண்ட கணவன், ‘`இந்தப் பெண்களைப் பார்... எவ்வளவு அன்போடு உபசரிக்கிறார்கள்?! நீயும் இப்படி இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்!’’ என்றான் மனைவியிடம்.

உடனே மனைவி சொன்னாள் ‘`அவங்க சிரிக்கிறதுக்கும் அன்பா உபசரிக்கறதுக்கும் ஐம்பதாயிரம் ரூபா சம்பளம் கொடுக்கிறாங்க. நீங்களும் இதேபோல பணம் குடுத்தா, நானும் அன்பா கனிவா உங்களை கவனிச்சுக்கறேன்!’’

அவ்வளவுதான்... கப்சிப்பாகி விட்டார் கணவர். பயணம் முடியும் வரை அவர் வாயே திறக்கவில்லை!

சிந்தனை விருந்து! - ஒப்பனை முகங்கள்!

இன்றைய உலகில், நாம் பார்க்கிற முகங்கள் பலவும் ஒப்பனை முகங்களே. ‘அப்பா’ எனும் முகமூடி அணிந்துதான் பிள்ளைகளிடம் பழகுகிறோம். ‘அண்ணன்’ எனும் முகமூடியுடன்தான், தம்பிகளைத் தட்டிக் கொடுக்கவோ தட்டிக் கேட்கவோ முடிகிறது. மனைவியிடம் பேசும்போது, ‘கணவன்’ எனும் முகமூடி தேவை. ‘தொழிலாளி’ எனும் முகமூடியை அணிந்துகொண்டு, முதலாளிகளிடம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. வேலை முடிந்ததும் வேறு முகமூடியை சட்டென மாற்றிக் கொள்ளத் தெரியாத மனிதர்களே வேதனையை அனுபவிக்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆக... வாழ்க்கை எனும் நாடக மேடைக்கு முகமூடி அவசியத் தேவை யாகிவிட்டது. அந்தந்த நேரத்துக்கு தக்கபடி, உரிய முக்கியத்துவத்தை அளிக்க வேண்டிய கட்டாயம் மனிதர்களுக்கு இருக்கத்தானே செய்கிறது! எனவே, இவற்றுக்குத் தக்கபடி வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும். அதேநேரம்... முகமூடி அணிந்திருக்கிறோம் என்கிற கவனமும் வேண்டும். இல்லையெனில், முகமூடியே முகமாகிப் போகும். இந்த நிலை ஆபத்தானது!

இவையெல்லாம் ஞானிகளின் எச்சரிக்கை!

நம் உண்மையான முகம் என்பது, கண்ணாடிபோல! உள்ளதை உள்ளபடி பிரதிபலிப்பதுதானே கண்ணாடியின் இயல்பு. வாழ்க்கையில் முகமூடிகள் தேவைப்படலாம்.

ஆனால், இன்றைய மனிதர்கள், கண்ணாடியை அழகுபடுத்துவதாக எண்ணிக் கொண்டு, அதன் மீது ஓவியங்களைத் தீட்டுகின்றனர். அசையாத ஓவியங்கள் கலைய வேண்டும்; அசையும் ஓவியங்களான மனித முகங்கள் தெரிய வேண்டும்! இதுதான் உண்மையான ஆன்மிக வளர்ச்சி!

ஒருவர், காலையில் எழுந்ததும் கத்தினார் ‘`கருங்குரங்கு படத்தை யாருடி என் ரூம்ல மாட்டினது?’’

சமையற்கட்டில் இருந்த மனைவி பதில் சொன்னாள் ‘`நல்லா பாருங்க... அது முகம் பாக்கற கண்ணாடி!’’