Published:Updated:

சிந்தனை விருந்து - ஆணவம் விலகினால் ஆனந்தம்!

தென்கச்சி சுவாமிநாதன், ஓவியம்: சேகர்

பிரீமியம் ஸ்டோரி

வசர அவசரமாக வந்த இளம்பெண், அன்று காலையில் நடந்ததை தோழியுடன் பகிர்ந்து கொண்டாள்: ``நானும் மாமியாரும் காலையில் வாக்கிங் போய்ட்டு இருந்தோம். அது காட்டுப் பாதை. திடீர்னு விநோதமான ஒரு பிராணி வந்து மாமியாரைப் பிடிச்சிடுச்சி...’’

``கொஞ்சம் விளக்கமா சொல்லேன்...’’ தோழி கேட்டாள்.

``சொல்றேன்... நீளமான பல், தேவாங்கு மாதிரி உடம்பு, சடை சடையா முடி... பேய் மாதிரி...’’

`அடடா... என்ன பயங்கரம்...?’’

``அவசரப்படாதே. அந்த விலங்கு எப்படி இருந்ததுன்னு இன்னும் நான் சொல்லவே ஆரம்பிக்கலே!’’

ஆமாம். இதுவரை அவள் விவரித்தது தன் மாமியாரைப் பற்றிய வர்ணனை!

இது சிரிப்பதற்காக சொல்லப்பட்ட கதை என்றாலும் இதுபற்றி கொஞ்சம் சிந்திக்கவும் வேண்டியிருக்கிறது. நமக்குப் பிடித்தவர்களைவிட, பிடிக்காதவர்களை நம் மனம் நன்றாக நினைவில் வைத்துக்கொள்கிறது.

சிந்தனை விருந்து
சிந்தனை விருந்து

‘உனக்கு உதவியவர்கள் யார்?’ என்று கேட்டால், உடனடியாக நினைவுக்கு வருவதில்லை. ‘உபத்திரவம் கொடுப்பவர் யார்?’ என்றால், உடனே சொல்ல முடிகிறது. நல்லவர்களை நமக்கு அடையாளம் தெரியாமல் தடுப்பது எது?

ஆன்மிகம் சொல்லும் பதில் - ‘ஆணவம்!’

``வாழைப்பழத்தின் தோலை உரிப்பது போல உரித்து, ஆணவத்தை வீசி எறிந்துவிடு!’’ - என்கிறார் ஓஷோ.

‘அதை நடுப்பாதையில் போட்டுவிடாதே. ஏனெனில், எவரேனும் வழுக்கி விழுந்துவிடக் கூடும். பல பிறவிகளாக நீயே அதில் வழுக்கி விழுந்திருக்கிறாய்!’ என்பது அவரின் கூற்று.

ஆணவம்-நோயுற்ற மனம்; ஆணவமின்மை- ஆரோக்கியமான மனம். ஆணவம் விலக விலக ஆனந்தம் நெருங்குகிறது. அதற்கு உதவி செய்கிறது ஆன்மிகம்.

ஒருவன் வாழைப் பழத்தோல் வழுக்கி விழுந்து விட்டான். அந்த வழியே வந்தவன், இவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தான். அப்புறம் சொன்னான்: ``நீ வாழைப் பழத்தோல்ல காலை வைக்கப் போறதை முன்னாடியே கவனிச்சுட்டேன்!’’

``அப்படின்னா... அப்பவே நீ எனக்கு உதவி செஞ்சிருக்க லாமே?’’

``நான் டாக்டருக்கு உதவலாம்னு நினைச்சுட்டேன்!’’

(17.10.2009 இதழிலிருந்து...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு