Published:Updated:

சிந்தனை விருந்து! - உதவிக்கு அனுப்பக் கூடாதா?

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்தனை விருந்து

தென்கச்சி சுவாமிநாதன், ஓவியம்: சேகர்

ரண்டு மனிதர்கள் சந்தித்தனர். ‘`இன்று முதல், நாம் சகோதரர்கள்'’ என்றபடி ஒருவரையொருவர் கட்டி அணைத்துக்கொண்டனர்.

“அண்ணே, உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்றான் ஒருவன்.

“நானும் அப்படித்தான்” என்றான் அடுத்தவன்.

இருவரும் புறப்பட்டு, ஒரு காட்டின் வழியே பயணித்தனர். இருட்டத் தொடங்கியது.

“இங்கேயே படுத்துத் தூங்கி விட்டு விடிந்ததும் புறப்படலாம்” என்றான் ஒருவன்.

“விலங்குகள் வருமே” என்றான் இன்னொருவன்.

“அதற்கொரு வழி இருக்கிறது” என்று உற்சாகத்துடன் சொன்னான் முதலாமவன். “என்ன வழி...”

- இரண்டாமவன் கேட்டான்.

முதலாமவன் பதில் சொன்னான் “நீ தூங்கும்போது, நான் விழித்திருந்து காவல் காக்கிறேன்... நான் தூங்கும் போது நீ விழித்திரு.”

சிந்தனை விருந்து! - உதவிக்கு அனுப்பக் கூடாதா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்படியே செய்தனர். அந்த வழியே வந்த பெரியவர் ஒருவர், இவர்களைக் கவனித்தார். ‘ஆகா... இந்தக் காலத்திலும் இப்படியொரு சகோதர பாசமா... அண்ணன் தூங்க வேண்டும் என்று தம்பியும்... தம்பிக்காக அண்ணனும் காவல் காக்கின்றனரே’ என்று ஆச்சர்யப்பட்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பெரியவர்... நேராக கடவுளிடம் சென்று, “இறைவா! இந்த சகோதரர்களைக் கவனித்தாயா?” என்று கேட்டார்.

“கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்!” என்றார் கடவுள்.

“ஒருவர் மாற்றி ஒருவர் விழித்துக்கொள்கிறார்களே... இருவரும் சேர்ந்தாற்போல ஒரே நேரத்தில் விழித்துக் கொள்ளக் கூடாதா?” என்று கேட்டார் பெரியவர். அதற்குக் கடவுள் இப்படி பதில் சொன்னார் “கூடாது... இருவரும் சேர்ந்து விழித்துக் கொள்ளாதவரையில்தான் இருவருக்கும் இடையே அன்பும் பாசமும் இருக்கும்!”

இன்றைய மனிதர்களின் அன்பும் பாசமும் இப்படிப்பட்ட நிலைமையில்தான் இருக்கின்றன. உண்மையான அன்புக்கு உதவ மட்டுமே தெரியும்; உதவி பெறத் தெரியாது.

மனிதன் ஒருவன், கடவுளுக்கு முன்னே நின்றான்.

“கடவுளே! இந்த உலகத்தைப் பார்; நீ படைத்த மனிதர்களைப் பார்; எவ்வளவு துயரங்கள், வேதனைகள்... உதவிக்கு எவரை யேனும் இங்கு அனுப்பக்கூடாதா?” - ஆதங்கத்துடன் கேட்டான்.

“உதவி செய்வதற்காகத்தான் அனுப்பி வைத்திருக்கிறேன்!” - அமைதியாகப் பதில் சொன்னார் இறைவன்.

“யாரை?” - ஆர்வத்துடன் கேட்டான் மனிதன். புன்னகைத்த இறைவன் பதில் சொன்னார்

“உன்னைத்தான்!”

(08.05.2009 இதழிலிருந்து...)