Published:Updated:

சிந்தனை விருந்து! - 'உன் விலாசம் என்ன?'

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்தனை விருந்து

தென்கச்சி சுவாமிநாதன், ஓவியம்: சேகர்

வெளிநாடு ஒன்றின் தங்கும் விடுதி அது! அறையில், கம்ப்யூட்டர் முதலான சகல வசதிகளும் இருந்தன.

இங்கு தங்கியிருந்த ஒருவன், தன் மனைவிக்கு இ-மெயில் அனுப்ப எண்ணினான். அவசரத்தில் மின்னஞ்சல் முகவரியைத் தவறாக டைப் செய்தவன், அதை கவனிக்காமல் தவறான வேறொரு மின்னஞ்சலுக்கு அனுப்பினான்!

அதே நேரம்... வேறொரு பகுதி. கணவனின் இறுதிச் சடங்குகள் முடிந்து சில நாள்கள் கழிந்த நிலையில்... ஒருவாறு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, தனது கம்ப்யூட்டரை ‘ஆன்’ செய்தாள் அந்தப் பெண். தன் மின்னஞ்சலில் ஏதேனும் இரங்கல் செய்தி வந்துள்ளதா என்று பார்க்கத் தொடங்கினாள்.

முதல் செய்தியைப் படித்ததுமே மயங்கி விழுந்தாள்.

சிந்தனை விருந்து! - 'உன் விலாசம் என்ன?'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சத்தம் கேட்டு வேறோர் அறையில் இருந்த அவளது மகன் ஓடோடி வந்தான். இ-மெயிலைப் படித்தவள், `ஏன் மயங்கி விழுந்தாள்?’ எனும் யோசனையுடன் அந்த செய்தியைப் படித்தான் ‘அன்பான மனைவிக்கு... நான், இங்கு நல்லபடியாக வந்து சேர்ந்தேன். இங்கே, கம்ப்யூட்டர் வசதியெல்லாம் இருக்கிறது. உன் வருகைக்காக இங்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார். நாளை... இங்கு வரப்போகிற உனக்காக, ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இப்படிக்கு

உன் அன்புக் கணவன்’

இந்த மின்னஞ்சலைப் படித்து, அந்தப் பெண் மயங்கி விழுந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை. வேடிக்கையான கதைதான். கம்ப்யூட்டரில் கை தடுமாறியதால் ஏற்பட்ட குழப்பம் இது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இது ஒருபக்கம் இருக்கட்டும். முதலில், ஓர் உண்மையைக் கவனியுங்கள். இந்த உலகில் இருக்கிற வரை, கணவன் எங்கே போனாலும் ‘நானும் கூடவே வருவேன்’ என்றாள். ஆனால், அதே கணவன், இன்னொரு உலகில் இருந்து கொண்டு ‘வா’ என அழைக்கிறான் என்றதும் மயங்கி விழுகிறாள். இதுதான் மனித இயல்பு. இந்த மயக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது ஆன்மிகம்.

பெரியவர் ஒருவரது உபதேசம் இது...

மனிதர்களே! உங்கள் எல்லோருக்கும் வெளி விலாசம் இருக்கிறது. உங்கள் முகவரி என்ன என்று கேட்டால் உடனே சொல்லி விடுவீர்கள், திருச்சி... கோவை... மதுரை... என்று. உங்களின் உள் விலாசம் என்ன? நாம் பிறப்பதற்கு முன்பு எங்கே இருந்தோம்? எங்கிருந்து புறப்பட்டு இந்த உலகத்துக்கு வந்து சேர்ந்தோம்? இதைப் புரிந்துகொள்வதுதான் ஆன்மிகம்!

நம் ஒவ்வொருவரது வெளி விலாசமும் வேறு வேறு. ஆனால், நம் அனைவரது உள் விலாசமும் ஒன்றுதான். இதை உணரும்போதுதான் ஆன்ம நேயத்தின் அடையாளத்தை நம்மால் அறிய முடியும்.