உயர்தரமான தங்கும் விடுதி அது.

20 அடுக்குகளைக்கொண்ட அந்த விடுதியின் தரை தளத்தில் ஒரு நீச்சல் குளம். அந்தக் கட்டடத்தின் உச்சியில் நின்றுகொண்டிருந்த ஒருவன், கீழே இருந்த நீச்சல் குளத்தை எட்டிப் பார்த்தான். அப்போது குளத்தின் அருகில் நின்று கொண்டிருந்த ஓர் ஆசாமி சத்தமாகக் கத்தினான்... ‘`ஏ... குப்புசாமி, உன் மகன் நீச்சல் குளத்தில் விழுந்துட்டான்!’’

இதைக் கேட்டதும் உச்சியில் நின்று கொண்டிருந்தவன் பதறிப் போய்க் கீழே குதித்தான்.

இப்போது, அவன் 20-வது மாடியிலிருந்து நீச்சல் குளத்தை நோக்கித் தலைகீழாக வந்து கொண்டிருக்கிறான். அவன், 15-வது மாடியைக் கடக்கும்போது ‘பளிச்’சென்று ஒரு சிந்தனை.

‘ஆமாம்... நமக்குத்தான் மகனே கிடையாதே! அப்புறம் எதுக்கு அவசரப்பட்டு கீழே குதிச்சோம்?’

10-வது மாடியைக் கடந்தபோது, மற்றுமொரு சிந்தனை... ‘அது சரி, நமக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகலையே!’

ஐந்தாவது மாடியைக் கடந்தபோது, இன்னும் ஓர் உண்மை புரிந்தது... ‘அவன் குப்புசாமியிடம்தானே சொன்னான்? நான் குப்புசாமி இல்லையே!’

கந்தசாமி கண் விழித்தான். கனவு கலைந்தது.

நல்லவேளை... அவன் நீச்சல் குளத்தில் கிடக்கவில்லை. படுக்கையில்தான் கிடக்கிறான்.

அந்தக் குளத்தில் விழுகிற கணத்தில், அவனுக்கு விழிப்பு வந்து விட்டது. தான் கண்டது கனவு என்பது புரிந்தது. ‘தான் யார்?’ என்ற உண்மையும் அவனுக்கு விளங்கியது.

இன்றைய மனிதனுக்கு, ‘தான் யார்?’ என்ற உண்மை புரிவதில்லை. அது புரியாமலேயே... கட்டடத்தின் உச்சியிலிருந்து நீச்சல் குளத்தை நோக்கி விழுவதுபோல, அவனது உலகப் பயணமும் போய்க்கொண்டிருக்கிறது. அந்த பயணம் முழுவதும் பதற்றம்; நிம்மதி இன்மை!

விடிகிற வேளையில்தான் சிலருக்கு விழிப்பு வருகிறது. பலரும் விழிக்காமலேயே வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொள்கிறார்கள். நீங்கள், ஆரம்பத்திலேயே விழித்துக்கொள்ளுங்கள்; ஆனந்தமாகப் பயணத்தை மேற்கொள்ளுங்கள். அதற்கு ஆன்மிகம் உதவும்; நீங்கள் யார் என்பதை உங்களுக்கு அடையாளம் காட்டும்.

உலகியலைப் பொறுத்தவரையில், விடியும் நேரமே விழிப்பு!

உண்மையைப் பொறுத்தவரையில், நீங்கள் விழித்துக்கொள்ளும் நேரமே விடியல்!

6.2.2008 இதழிலிருந்து...