Published:Updated:

சிந்தனை விருந்து! - வாடகை மனிதர்கள்!

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனை விருந்து

தென்கச்சி சுவாமிநாதன் ஓவியம்: சேகர்

சிந்தனை விருந்து! - வாடகை மனிதர்கள்!

தென்கச்சி சுவாமிநாதன் ஓவியம்: சேகர்

Published:Updated:
சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனை விருந்து
ருமுறை, செய்தித் தாளில் வேடிக்கையான ஒரு செய்தி வந்தது! சீனாவில், இரண்டு பேர் சேர்ந்து சேவை நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளது குறித்த செய்தி.

என்ன சேவை தெரியுமா? அடுத்தவர் வாங்க வேண்டிய திட்டுகளையும் அடிகளையும் அவர்களுக்காக இந்த நிறுவனத்தார் வாங்கிக் கொள்கிறார்களாம்!

‘அட... இப்படியும் ஒரு சேவையா’ என்று ஆச்சரியப்படுகிறீர்கள்தானே?

‘வாடகைத் தாய்’ என்றெல்லாம் கேள்விப்படுவது போல், இவர்கள் வாடகை ஊழியர்கள்!

மேலதிகாரியிடம் இருந்து உங்களுக்குத் திட்டு கிடைக்கப்போகிறது. ஆனால், திட்டு வாங்கிக்கொண்டு வேலை பார்க்க முடியாது. அதுசரி... திட்டு வாங்குவதற்கு யாரேனும் ஆசைப் படுவார்களா என்ன? இந்த நிலையில், விஷயத்தை இந்த நிறுவனத்தாரிடம் தெரிவித்தால் போதும்... உங்களுக்கான திட்டுகளை இவர்கள் சிரமேற் கொண்டு வாங்கிக்கொள்வார்கள்.

‘அடடா... இது மாபெரும் சேவையாயிற்றே!’ என்கிறீர்களா?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உண்மைதான்! இதற்குக் கட்டணமும் உண்டு. ஒரு நிமிடத் திட்டுக்கு 585 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கின்றனர். சரி... உயரதிகாரி உங்களை அடிக்க நினைக்கிறார் எனில்?! கூடுதலாக 135 ரூபாய் செலுத்தினால் போதும்; இந்த நிறுவனத்தார் உங்களுக்காக அடியும் வாங்குவார்கள். ஆனால் ஒரு கண்டிஷன்... அடி கொடுக்கும் அதிகாரி பெண்ணாக இருக்க வேண்டுமாம்.

சிந்தனை விருந்து! - வாடகை மனிதர்கள்!

ஷாங்காய் நகரில், ஜாங்லி- சென்ஜுவான் ஆகிய இருவரும் சேர்ந்து நடத்தும் அந்தக் கம்பெனியின் பெயர்- வான்டோங்.

நம்மூர்க்காரர் ஒருவர், பூங்காவில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். ஒரு கட்டத் துக்கு மேல் நடக்க முடியாமல், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அப்படியே உட்கார்ந்து விட்டார். அப்போது அங்கே வந்த நண்பர், ‘`என்ன... உக்காந்துட்டீங்க?’’ என்று கேட்டார்.

உடனே நம்மவர், ‘’தினமும் பத்து ரவுண்டு போகணும்னு டாக்டர் சொல்லிருக்காரு. ஏழு ரவுண்டு முடிச்சிட்டேன். இன்னும் மூணு ரவுண்டுதான் பாக்கி!’’ என்றார்.

‘`அப்புறமென்ன... மூணு ரவுண்டுதானே...’’ என்று நண்பர் கேட்க, நம்மவர் என்ன சொன்னார் தெரியுமா?

‘`மூணு ரவுண்டுதானே? அதான்... வாடகைக்கு ஆள் யாராவது கிடைப்பாங்களான்னு பாக்கறேன்!’’ என்றாராம்.

இந்த மனோபாவம், இன்றைய ஆன்மிகத்திலும் வந்துவிட்டதுதான் வேதனை!

‘`தம்பி... கோயிலுக்கா போறீங்க?’’ என்று கேட்டார் ஒருவர்.

‘`ஆமாம்’’ என்றான் அந்த இளைஞன்.

உடனே பெரியவர் சொன்னார் ‘`அப்படீன்னா ஒரு உதவி பண்ணுங்க. இந்தக் காசை உண்டியல்ல போட்ருங்க. அப்படியே எம்பேருக்கு அர்ச்சனையும் பண்ணிருங்க!’’

இதெப்படி இருக்கு?!

03.10.2009 இதழிலிருந்து...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism