அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இருக்கும் பணத்தை இழக்கும் சம்பவங்கள் பற்றி அடிக்கடி படித்தாலும்கூட மக்கள் ஏமாறுவது இன்னும் நின்றபாடில்லை.
தென்காசி மாவட்ட இலத்தூர் குத்துக்கல் வலசை பகுதியைச் சேர்ந்த மயில்வாகனன் என்பவர் நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களிடம் ரூ.30 கோடி மோசடி செய்திருப்பதாகப் புகார் வந்ததைத் தொடர்ந்து, காவல்துறை அவரைக் கைது செய்யத் தேடிக்கொண்டிருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
இதுகுறித்து நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீஸாரிடம் பேசினோம். ‘‘2017-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி‘ஜே.எஸ்.டைஸ் கேப்பிட்டல்ஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார் மயில்வாகனன். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம்தோறும் ரூ.8,000 தருவதாகவும், விரும்பும்போது முதலீட்டுத் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் சொன்னதைத் தொடர்ந்து பலரும் அதில் பணத்தைப் போட்டனர். ஆனால், சொன்னபடி பணத்தைத் தராமல் பலவிதமான சாக்குபோக்குகளைச் சொல்லி சமாளித்திருக்கிறார் மயில்வாகனன். நம்பிக்கை இழந்த மக்கள் காவல்துறையில் புகார் தந்திருக்கிறார்கள். முதல்கட்ட விசாரணையில் ரூ.30 கோடி மோசடி நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது” என்றார்கள்.
முதலீடு செய்வதில் கூடுதல் கவனம் தேவை என்பதைத்தான் இந்தச் சம்பவம் காட்டுகிறது.