Published:Updated:

தென்காசி மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்: வேட்பாளர்களை அதிரவைத்த இளைஞர்களின் அறிவிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான போஸ்டர்
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான போஸ்டர்

உள்ளாட்சித் தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களுக்குப் பணத்தைக் கொடுத்து வெற்றியைக் கைப்பற்றிவிடலாம் என்கிற நினைப்புடன் செயல்படக்கூடாது என்று இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் ஒன்பது மாவட்டங்களில் நடத்தப்படாமல் இருந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் 6, 9-ம் தேதிகளில் நடத்தப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் நேற்று (செப்டம்பர் 15-ம் தேதி) தொடங்கிய நிலையில், தேர்தலில் போட்டியிடப் பலரும் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: நெல்லையில் 333 பதற்றமான வாக்குச்சாவடிகள்; கட்டுப்பாட்டு அறை திறப்பு!

இந்த முறை உள்ளாட்சித் தேர்தல்களில் இளைஞர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். சில இடங்களில் இளைஞர்கள் குழு சார்பாக வேட்பாளர்களைக் களமிறக்கவும் திட்டமிட்டு வருவதால், வழக்கமாகத் தேர்தலில் போட்டியிடும் பெரியவர்கள் கலக்கம் அடைந்திருக்கிறார்களாம்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள புதுப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு சில நிபந்தனைகளை விதித்து போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகின்றன; பலரும் இளைஞர்களின் இந்த முயற்சிக்கு ஆதரவும் தெரிவித்துவருகிறார்கள்.

தேர்தலில் செலவு செய்ததை எடுத்துவிடலாம் என்ற கனவுடன் போட்டியிட வர வேண்டாம்.
புதுப்பட்டி கிராம இளைஞர்கள்

’புதுப்பட்டி ஊராட்சிப் பதவிகளுக்குப் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் அன்பான வேண்டுகோள்...’ என்ற தலைப்பில் இளைஞர்கள் வெளியிட்டிருக்கும் போஸ்டரில், ``ஊராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவுடன், தேர்தல் செலவு செய்த பணத்தை ஊராட்சியின் வளர்ச்சிக்கு வரும் பணத்தில் எடுத்துவிடலாம் என நினைத்து யாரும் வர வேண்டாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிராமசபைக் கூட்டங்களில் புதுப்பட்டி ஊராட்சி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் வரவு, செலவு கணக்கு கேட்டு அறியப்படும். அந்தத் தகவல்கள் சரியானவைதானா எனத் தகவல் அறியும் சட்டத்தின்படி சரிபார்க்கப்படும். ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டால் ஊழல் செய்தவரின் படத்துடன் சமூக வலைதளங்களில் வெளியிடுவதுடன், புகார் அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.

போஸ்டர்
போஸ்டர்

புதுப்பட்டி ஊராட்சி இளைஞர்கள் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் சார்பாக வெளியாகியிருக்கும் இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு