Published:Updated:

அன்புள்ள திருடன் ஆதங்கத்துடன் எழுதிக் கொள்வது...

அன்புள்ள திருடன் ஆதங்கத்துடன் எழுதிக் கொள்வது...
பிரீமியம் ஸ்டோரி
அன்புள்ள திருடன் ஆதங்கத்துடன் எழுதிக் கொள்வது...

மத்தியப் பிரதேச மாநிலம், தேவாஸ் மாவட்டத்திலுள்ள காடேகான் பகுதியில் இருக்கிறது சப் கலெக்டர் திரிலோசன் வீடு.

அன்புள்ள திருடன் ஆதங்கத்துடன் எழுதிக் கொள்வது...

மத்தியப் பிரதேச மாநிலம், தேவாஸ் மாவட்டத்திலுள்ள காடேகான் பகுதியில் இருக்கிறது சப் கலெக்டர் திரிலோசன் வீடு.

Published:Updated:
அன்புள்ள திருடன் ஆதங்கத்துடன் எழுதிக் கொள்வது...
பிரீமியம் ஸ்டோரி
அன்புள்ள திருடன் ஆதங்கத்துடன் எழுதிக் கொள்வது...

‘க்ரைம்’ நியூஸ்னாலே கொலை, கத்திக்குத்து மட்டும்தானா... காமெடி இருக்காதா என்ன? வாணியம்பாடியில் பூட்டிக்கிடந்த வீட்டில் கொள்ளையடித்த திருடன் அங்கேயே இருந்து சமைத்துச் சாப்பிட்டுவிட்டுச் சென்றது, சேலத்தில் திருடச் சென்ற வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணின் அழகைக் கன்னத்தில் கைவைத்தபடி ரசித்தது... எனத் திருடர்கள் அடிக்கும் லூட்டிகள் ஏராளம். அந்த வகையில், திருடச் சென்ற இடத்தில் உரிமையாளருக்கு, ‘கலாய் கடிதம்’ எழுதிவைத்துச் சென்ற சில சம்பவங்களைப் பார்ப்போம்...

கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியில் ஒரே நாளில் ஐந்து இடங்களில் தனது கைவரிசையைக் காட்டிய திருடன், ஆறாவதாக ஒரு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்கிறான். வீட்டுக்குள் சென்ற பிறகுதான் தெரிகிறது, அது ஒரு முன்னாள் ராணுவ வீரரின் வீடு என்பது. குற்ற உணர்ச்சியில் கூனிக்குறுகிப்போன திருடன், ஃப்ரிட்ஜில் இருந்த மிலிட்டரி சரக்கைக் குடித்தபடியே ஒரு மன்னிப்புக் கடிதத்தை எழுதுகிறான். ``இது ராணுவ வீரரின் வீடு எனத் தெரியாமல் திருட வந்துவிட்டேன். முன்னாடியே தெரிந்திருந்தால் பூட்டைக்கூட உடைத்திருக்க மாட்டேன்” என தேசபக்தி பொங்கக் கடிதம் எழுதியவன், போதையில் அநியாயத்துக்கு நல்லவனாகியிருக்கிறான்... தப்பு... தப்பு... நல்லவராகியிருக்கிறார். ஏற்கெனவே ஒரு வீட்டில் திருடிய 10,000 ரூபாயை, ‘உரியவரிடம் ஒப்படைத்துவிடுங்கள்’ என்ற வேண்டுகோள் கடிதத்துடன் ராணுவ வீரரின் வீட்டிலேயே விட்டுச் சென்றிருக்கிறார் அந்தத் திருடர்! #அந்த மனசுதான் சார் கடவுள்!

கேரள மாநிலம், வயநாட்டிலுள்ள ஒரு துணிக்கடையின் முன்பக்கக் கண்ணாடிக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடன், கல்லாப்பெட்டியை திறந்து ஆராய்ந்திருக்கிறான். கல்லாப்பெட்டி காலியாக இருந்ததால் விரக்தியடைந்தவன், ஒரு செட் டிரெஸ்ஸை மட்டும் எடுத்துக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறான். தான் உடைத்த கண்ணாடிக் கதவின் ஒரு துண்டில் கறுப்பு மையால், ``கடைக்குள்ளதான் எதுவும் இல்லையே... அப்புறம் எதுக்கு கடையை மூடுன... கண்ணாடிக் கதவாச்சும் தப்பிச்சிருக்கும்ல!?” என்று தன் சிந்தனையைக் கடிதமாக எழுதி கடைக்காரரைக் கலாய்த்துவிட்டுச் சென்றுவிட்டான். #இந்த அவமானம் உனக்குத் தேவையா...

மத்தியப் பிரதேச மாநிலம், தேவாஸ் மாவட்டத்திலுள்ள காடேகான் பகுதியில் இருக்கிறது சப் கலெக்டர் திரிலோசன் வீடு. அரசு அதிகாரிகளின் குவார்ட்ரஸுக்குள் இருக்கும் சப் கலெக்டர் திரிலோசன் வீட்டுப் பூட்டை உடைத்து துணிச்சலாக உள்ளே நுழைந்திருக்கிறான் திருடன். பல மணி நேரமாக வீட்டைச் சல்லடை போட்டுத் தேடியும் உருப்படியான ஒன்றும் சிக்கவில்லை. கடுப்பானவன், ``பணம் இல்லாத வீட்டுக்குப் பூட்டு எதுக்கு கலெக்டரே?” என்று கடிதம் எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறான். #நீ கேட்ட ஒவ்வொரு கேள்வியும்...

அன்புள்ள திருடன் ஆதங்கத்துடன் எழுதிக் கொள்வது...

மத்தியப் பிரதேச மாநிலம், பிண்ட் பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியின் வீட்டுப் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த தங்கநகைகள், வெள்ளிப் பொருள்களையெல்லாம் கொள்ளையடித்த திருடன், பீரோவில் ஒரு கடிதத்தை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறான். ``மன்னிக்கவும் நண்பரே... என் நண்பனின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத்தான் உங்கள் வீட்டில் திருடினேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் இதைச் செய்யாவிட்டால் என் நண்பனை இழந்துவிடுவேன். கவலைப்படாதீர்கள், திருடிய பொருள்களைச் சீக்கிரமே திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்!” #அதுக்கு நானாடா கெடைச்சேன்!

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலைக்கு அருகே தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்குச் சொந்தமான ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறது. அதன் பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த திருடன், உள்ளே இருந்த லாக்கரை விடிய விடிய உடைக்க முயன்றிருக்கிறான். உயிரைக் கொடுத்து உடைத்துத் திறந்தால், லாக்கரில் ஒன்றுமேயில்லை. மனம் உடைந்துபோனவன், அங்கிருந்த விலையுயர்ந்த மதுபானத்தைக் குடித்துமுடித்துவிட்டு, லிப்ஸ்டிக்கால், `ஒரு நூறு ரூபாய் வைக்க மாட்டே...’ என்று சுவரில் எழுதிக் குமுறியிருக்கிறான். மேலும், அங்கிருந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்து, `ஒரு ரூபாய்கூட இல்ல, எடுக்கல’ என்றும் உறுதிமொழிக் கடிதம் எழுதிச் சென்றிருக்கிறான். #இரக்கம் இல்லையா உமக்கு!

கடலூர் மாவட்டம், நெய்வேலிக்கு அருகிலுள்ள ஒரு மளிகைக்கடையில் நடந்த சம்பவம் இது. வடிவேலு பட பாணியில் மேற்கூரையைப் பிரித்துக்கொண்டு கடைக்குள் குதித்த திருடன், கல்லாப்பெட்டியை நோக்கி ஓடியிருக்கிறான். ஆனால், அங்கே எதுவுமே இல்லாததால் காண்டாகிப்போன அவன், அங்கிருந்த மளிகைப் பொருள்கள் முதல் மைதா பாக்கெட் வரை கிழித்து தரையில் போட்டு நாசப்படுத்தியிருக்கிறான். கடைசியாக, அங்கிருந்த ஒரு ரசீது பேப்பரை எடுத்து, ``உயிரைப் பணயம்வெச்சு திருட வந்தா, காசு இல்லாம கல்லாவைத் தொடச்சிவெச்சு என்னை ஏமாற்றலாமா... அதுக்குதான் இந்தக் குரங்கு வேலை” என்று லந்து கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறான். #ஹலோ பிரபா ஒயின்ஷாப் ஓனரா?!