Published:Updated:

சாத்தான்குளம் லாக்அப் மரணங்கள்: “இது சிஸ்டம் ஃபெயிலியர்!”

திலகவதி ஐ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
திலகவதி ஐ.பி.எஸ்

திலகவதி ஐ.பி.எஸ் நேர்காணல்

சாத்தான்குளம் லாக்அப் மரணங்கள்: “இது சிஸ்டம் ஃபெயிலியர்!”

திலகவதி ஐ.பி.எஸ் நேர்காணல்

Published:Updated:
திலகவதி ஐ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
திலகவதி ஐ.பி.எஸ்
‘‘மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் காவல்துறையினருக்கு தண்டனைகள் உறுதி செய்யப்பட்டால்தான் காவல்நிலையச் சித்ரவதைகளுக்கும், காவல்நிலைய மரணங்களுக்கும் முடிவுகட்ட முடியும்’’ என்கிறார் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான ஜி.திலகவதி. சாத்தான்குளம் விவகாரம் பரபரப்பாக இருக்கும் தருணத்தில் அவரைச் சந்தித்தோம்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தையும் மகனும் சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் முன்னாள் போலீஸ் அதிகாரியான உங்களுக்கு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது?”

‘‘தாங்க முடியாத துயரத்தையும் மிகப்பெரிய மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.’’

“குற்றம் செய்த காவலர்கள்மீது கொலை வழக்கு பதியப்படவும், அவர்கள் கைது செய்யப்படவும் தலைமைக் காவலர் ரேவதியின் வாக்குமூலம்தான் காரணமாக இருந்தது. அத்தகைய கடமை உணர்வும் தைரியமும் அங்கிருந்த மற்ற காவலர்களுக்கோ, உயர் அதிகாரிகளுக்கோ ஏன் இல்லை?”வேண்டும்.”

திலகவதி ஐ.பி.எஸ்
திலகவதி ஐ.பி.எஸ்

“இந்த வழக்கில் ரேவதியின் சாட்சியம் முக்கியமானது. காவல்துறையில் இருப்பவர்களுக்கு மன தைரியம் இருக்க வேண்டும். ஒவ்வொரு காவல்நிலையத்திலும் தகவல்களைச் சேகரித்து, மாவட்ட எஸ்.பி-க்குத் தெரிவிப்பதற்கு ஒரு காவலர் இருப்பார். ஆனால், சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவங்கள் எஸ்.பி-க்கு சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை. `எஸ்.பி அருண் பாலகோபாலன் கடமை தவறிவிட்டார்’ என்று சொல்கிறார்கள். ஐ.பி.எஸ் ஆகத் தேர்வாகிவரும் அதிகாரிகளை எடுத்தவுடனேயே பிரச்னைகள் நிறைந்த, பதற்றத்துக்குரிய மாவட்டங்களில் எஸ்.பி-யாக நியமிப்பது தவறு. ஓரளவு அனுபவம் வாய்ந்த அதிகாரிகளைத்தான் அத்தகைய இடங்களில் நியமிக்க

“ஐ.பி.எஸ் ஆகத் தேர்வாகிவரும் இளம் அதிகாரிகள் எத்தனையோ பேர் இது போன்ற மாவட்டங்களில் சிறப்பாகப் பணிபுரியத்தானே செய்கிறார்கள்?”

“சாத்தான்குளம் சம்பவங்கள் எஸ்.பி-யின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்லப்படவில்லை என்று கேள்விப்பட்டேன். தகவல் தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட சப் இன்ஸ்பெக்டர்களை எஸ்.பி சஸ்பெண்ட் செய்துள்ளார். இவ்வளவு நடந்த பிறகும்கூட, அந்த சப் இன்ஸ்பெக்டர்களைக் கைது செய்வது எளிதான விஷயமாக இருக்கவில்லை. காரணம், அந்தப் பகுதியில் செல்வாக்குமிக்க அரசியல்வாதிகள், சாதிய அமைப்புகளின் தலைவர்கள், மணல் மாஃபியா ஆகியோரின் ஆதரவு இந்த சப் இன்ஸ்பெக்டர்களுக்கு இருந்ததாகக் கேள்விப்படுகிறேன்.”

“மாநில முதல்வரே அவர்களுக்கு ஆதரவாகத்தானே இருந்தார். உடல்நிலை சரியில்லாமல்தான் தந்தையும் மகனும் இறந்தார்கள் என்று உடற்கூறு ஆய்வறிக்கை வருவதற்கு முன்பாகவே முதல்வர் கூறினாரே?”

“இந்த நேரத்தில் முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். காமராஜர் ஆட்சியில் காவல்துறை அமைச்சராக கக்கன் இருந்தார். அவருக்குப் பிறகு காவல்துறைக்கென்று தனி அமைச்சர் இங்கு கிடையாது. முதல்வராக வருபவர்கள் காவல்துறையைத் தங்கள் கையில் வைத்துக்கொள்கிறார்கள். ஆந்திரா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் காவல்துறைக்கு தனியாக அமைச்சர்கள் இருக்கிறார்கள். இங்கு முதல்வர் வசம்தான் காவல்துறை இருக்கிறது. அதிகாரிகள் என்ன தகவல் தெரிவிக்கிறார்களோ, அதைத்தான் முதல்வர் சொல்வார். சாத்தான்குளம் விவகாரத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.”

“எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என யார் முதல்வராக இருந்தாலும், குற்றமிழைத்த காவல்துறை யினருக்குத்தான் ஆதரவாக இருந்திருக் கிறார்கள். ஏராளமான உதாரணங்கள் உள்ளன. சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் பத்மினி என்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது, ‘பத்மினி நடத்தை சரியில்லாத பெண்’ என்று ஜெயலலிதா காவல்துறைக்கு வக்காலத்து வாங்கினார். ‘குற்றம் செய்யும் காவல்துறை யினரைப் பாதுகாக்க வேண்டும்’ என ஆட்சியாளர்கள் நினைப்பது என்ன மாதிரியான மனநிலை?”

“காவல்துறையில் தவறுகள் நடந்தால் தாங்களும் அதற்குப் பொறுப்பாக வேண்டியிருக்கும் என்ற சிந்தனையே இதன் பின்னால் இருக்கும் என்று நினைக்கிறேன். இன்றைய முதல்வரைப் பொறுத் தவரை, ஒரு குடும்பத் தலைவரின் மனநிலையில் பதற்றத்தையும் பரபரப்பையும் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருப்பது தெரிகிறது. அதனால்தான், கொரோனா பிரச்னையிலும்கூட `மூன்று நாள்களில் சரியாகிவிடும்’ என்று சொல்கிறார்.”

“கொலை வழக்கு பதியப்பட்டு சப் இன்ஸ்பெக்டர்கள் கைது செய்யப்பட்டதற்கு அரசோ, ஆட்சியாளர்களோ, காவல்துறையோ காரணம் அல்ல. நீதிமன்றத்தின் தலையீட்டால்தானே இது நடந்திருக்கிறது?”

திலகவதி ஐ.பி.எஸ்
திலகவதி ஐ.பி.எஸ்

“எப்படி இருந்தாலும் நீதி வென்றுள்ளது. ஒரு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், காவல்துறையில் மாற்றங்களையும் சீர்திருத்தங் களையும் கொண்டுவர ஏழு கட்டளைகளை வழங்கியது. தமிழ்நாட்டில் இதுவரை நான்கு போலீஸ் கமிஷன்கள் போடப்பட்டு, பல பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. காவல்துறை செயல்பாட்டில் ஆட்சியாளர்களின் குறுக்கீடு இருக்கக் கூடாது என்பதற்காக, `ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும்’ என்று சொல்லப் பட்டுள்ளது. `டி.ஜி.பி நியமனம் தகுதி அடிப்படையிலும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்’ என்று பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவற்றை அமல்படுத்த ஆட்சியாளர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். `காவல் துறையினரைப் பணியிட மாற்றம் செய்வதற்கு ஓர் ஆணையம் உருவாக்கப்பட வேண்டும்’ என்று சொல்லப்படுகிறது. ஆனால், பணியிட மாற்றம்தான் ஆட்சியாளர்களின் கையிலிருக்கும் பிரம்பு. அதை அவர்கள் ஒருபோதும் விட்டுத்தர மாட்டார்கள். சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கு இவைதான் காரணம்.”

“மனித உரிமைகள் சம்பந்தமான வகுப்புகள், பயிற்சிகள் காவல்துறையினருக்கு வழங்கப்படுகின்றன. அப்படியிருந்தும் ஏன் இது போன்ற அத்துமீறல்களில் காவல்துறையினர் ஈடுபடுகிறார்கள்?”

“அது போன்ற வகுப்புகளைத் தொடர்ச்சியாக நடத்த வேண்டும். அந்தக் கருத்துகள் காவல்துறையினரின் மனத்தில் ஆழமாகப் பதியும் அளவுக்கு அது இருக்க வேண்டும். காவலர் பயிற்சிக் கல்லூரியில் நான் பணியாற்றியபோது, டி.ஜி.பி முதல் காவலர்களை வரை பாலியல் நிகர்நிலைப் பயிலரங்கம் நடத்தினோம். அது போன்ற பயிற்சிகளைத் திரும்பத் திரும்ப நடத்த வேண்டும். மேலும், குற்றம் செய்யும் காவல்துறையினருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அதுதான் மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும்.”

“சாத்தான்குளம் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட்டிருப்பதால், தண்டனை உறுதியாகுமா?

“இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட்டிருந்தாலும்கூட, இந்த வழக்கு எப்போது முடியும் என்பது தெரியாது. இந்தியாவில் 2001 முதல் 2019 வரை 1,727 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சம்பந்தப்பட்ட ஒருவர்கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை. இதற்கு காவல்துறையை மட்டும் குற்றம் சொல்லிவிட முடியாது. பலருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. சாத்தான்குளம் சம்பவத்தில்கூட மாஜிஸ்ட்ரேட்டும், மருத்துவரும் எப்படி நடந்துகொண்டார்கள் என்பது பற்றிப் பல செய்திகள் வெளிவந்துள்ளன. எனவே, இதை ஒரு `சிஸ்டம் ஃபெயிலியர்’ என்றுதான் சொல்ல வேண்டும்”.