Published:Updated:

ஆன்லைன் வகுப்புக்கு கேட்ஜெட்..! - வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை!

ஆன்லைன்
வகுப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்லைன் வகுப்பு

குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புக்கு 2GB ரேம், 50 GB ஹார்ட் டிஸ்க் கொண்ட கம்ப்யூட்டர் தாராளமாகப் போதும்!

ன்றைக்கு நகர்ப்புறங்களில் தனியார் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில்தான் பாடங்களைக் கற்று வருகின்றனர்.

ஆன்லைன்மூலம் பிள்ளைகள் கல்வி கற்று உகந்த கேட்ஜெட்டுகள் என்னென்ன, அவற்றைப் புதிதாக வாங்கலாமா அல்லது செகண்ட் ஹேண்ட் வாங்கலாமா, இப்படி வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன எனப் பல கேள்விகளை ஹியூமன்வேர் அமர்நாத் சொர்ணமணியிடம் கேட்டோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.

ஆன்லைன்
வகுப்பு
ஆன்லைன் வகுப்பு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

லேட்டஸ்ட் ஜெனரேஷன் கம்ப்யூட்டர்..!

‘‘நீங்கள் எந்த எலெக்ட்ரானிக் பொருளை வாங்கினாலும் மூன்று வருடம் கழித்து அதற்கு `ரீசேல் வேல்யூ’ கிடையாது. அதனால், இன்றைக்கு ஓர் எலெக்ட்ரானிக் பொருளில் உங்களுக்கு என்னென்ன வசதிகள் தேவையோ, அவை இருக்கிற கேட்ஜெட்டை வாங்கினால் போதும். ‘வாங்குறதுதான் வாங்குறோம். புதுசா, லேட்டஸ்ட் வெர்ஷனா வாங்கிடுவோம்’ என்ற உங்கள் எண்ணம் எலெக்ட்ரானிக் பொருள்களுக்குப் பொருந்தாது. ஏனென்றால், அவை அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும்.

பள்ளிக்கூட மாணவர்களுக்கு இது போதும்!

மொபலில் மாடல் என்று சொல்வதைப்போல கம்ப்யூட்டரில் ஐந்தாவது ஜெனரேஷன், ஆறாவது ஜெனரேஷன் என்றெல்லாம் சொல்வோம். ஒவ்வொரு ஜெனரேஷனிலும் ஒவ்வொரு சிறப்பம்சம் இருக்கும். ஹையர் செகண்ட்ரி படிக்கிற மாணவர்களுக்கு டூயல் கோர் (Dual core) சிஸ்டம் போதும். இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, புதிய டூயல் கோர் கம்ப்யூட்டர் 28,000 ரூபாய். இவர்களுக்கு core i3, core i5, core i7 என்று காசைக் கொட்டி கம்ப்யூட்டர் வாங்கித் தர தேவையில்லை. வேர்டு, எக்ஸல், டாலி, அக்கவுன்ட்ஸ் என்று படிக்கிற கல்லூரி மாணவர் core i3 வாங்கிக் கொடுக்கலாம். ஜாவா, ஆரக்கல், ஆட்டோ கேட் டிசைனிங் படிப்பவர்களுக்கு core i5 வாங்கிக் கொடுக்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இது தெரியாத பெற்றோர்கள், 10 வயதுப் பிள்ளைக்கு ‘லேட்டஸ்ட்டா கொடுப்பா’ என்று கேட்பார்கள். கடைக்காரர்களும் விலை கூடுதலாக இருக்கிற லேட்டஸ்ட் ஜெனரேஷன் கம்ப்யூட்டரைக் காட்டி, ‘‘சார், இதை வாங்கினா 10 வருஷத்துக்கு எந்தப் பிரச்னையும் வராது’ என்று சொல்லி விற்றுவிடுவார்கள். ஆனால், இந்த லேட்டஸ்ட் ஜெனரேஷன் மிஞ்சிப்போனால் இரண்டு வருஷத்துக்குத் தாங்கும். அதன்பிறகு, ‘இந்த கேம் டவுண்லோடு பண்ண சப்போர்ட் பண்ணல’, ‘அந்த கேம் டவுண்லோடு பண்ண சப்போர்ட் செய்யல’ என்று பிள்ளைகள் புகார் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். விளைவு, காசைக்கொட்டி வாங்கிய கம்ப்யூட்டர் பழைய ஜெனரேஷனாகி விடுவதுடன், வாங்கிய மூன்றாம் வருடத்தில் ரீசேல் வேல்யூவும் இல்லாமல் போய்விடும்.

ஆன்லைன்
வகுப்பு
ஆன்லைன் வகுப்பு

‘த்ரீ டி டைப்பில் வீடியோ வரும்’, ‘விதவிதமாக கேம்ஸ் விளையாடலாம்’ எனப் பிள்ளைகள் லேட்டஸ்ட் ஜெனரேஷன் கம்ப்யூட்டரை வாங்கித் தரச்சொல்லிக் கேட்பார்கள். பிள்ளைகளின் விருப்பத்துக்குத் தலையாட்டாமல் படிப்புக்கேற்றபடி வாங்கிக் கொடுங்கள்.

இப்படியும் ஏமாற்றுகிறார்கள்!

கம்ப்யூட்டரில் ‘atom’ என்றொரு ஜெனரேஷன் இருந்தது. இது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புக்கு போதும். தற்போது இதையே லேட்டஸ்ட் ஜெனரேஷன் என்று சொல்லி விலையைக் கூடுதலாக்கி விற்பனை செய்கிறார்கள். இது ஏமாற்று வேலை. உண்மையில் ‘atom’ ரொம்பவும் ஸ்லோவாக இருக்கும். இது சிறு குழந்தைகளுக்கு ஆன்லைன் கிளாஸில் பாடம் படிக்க ஓகே. ஆனால், கல்லூரி மாணவர்களுக்கு, டிசைனிங் தொடர்பான கோர்ஸ் படிப்பவர்களுக்கு இது பயன்படாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அசெம்பிள்ட் கம்ப்யூட்டர் வாங்கப் போறீங்களா?

கம்ப்யூட்டரை அசெம்பிள் செய்து விற்பனை செய்பவர்கள் அதனுடைய அவுட்லுக்கை லேட்டஸ்ட் ஜெனரேஷனாகவும், அதனுள்ளே இருக்கிற போர்டு, ரேம் போன்றவற்றை பழைய ஜெனரேஷனாகவும் போட்டு ஏமாற்றுவார்கள். இந்த கம்ப்யூட்டரை லாக் இன் செய்தால், டிஸ்ப்ளேவில் லேட்டஸ்ட் ஜெனரேஷன் என்றுதான் காட்டும். ஆனால், மூன்று, நான்கு வருஷத்துக்கு முந்தைய கம்ப்யூட்டர்போல மெதுவாகத்தான் இருக்கும். அதனால், பிராண்டட் கம்ப்யூட்டர்களை வாங்குவதே பாதுகாப்பு. அசெம்பிள்தான் வாங்க வேண்டுமென்றால், இதைப்பற்றி நன்கு தெரிந்தவர்களுடன் சென்று வாங்குவதுதான் நல்லது.

செகண்ட் ஹேண்ட் கம்ப்யூட்டர்..!

குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புக்கு 2GB ரேம், 50 GB ஹார்ட் டிஸ்க் கொண்ட கம்ப்யூட்டர் தாராளமாகப் போதும். ஆனால், இது பழைய ஜெனரேஷன் கம்ப்யூட்டர்களில் மட்டுமே இருக்கும் என்பதால், செகண்ட் ஹேண்டில்தான் வாங்க முடியும். இந்த கம்ப்யூட்டரை இதற்கு முன்னால் வைத்திருந்தவர் மூன்று அல்லது நான்கு வருடங்கள்தான் பயன்படுத்தியிருக்கிறார் என்றாலோ, அதைச் சரியாகப் பயன் படுத்தியிருப்பார் என்றால் தைரியமாக வாங்கலாம். இதற்கும் கம்ப்யூட்டர் பற்றி தெரிந்தவர்களை உடன் அழைத்துச் செல்வதுதான் நல்லது.

அமர்நாத்  சொர்ணமணி
அமர்நாத் சொர்ணமணி

பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வேண்டாமே!

எல்லா மாணவர்களும் படிப்பைவிட கேம்ஸ் விளையாடத்தான் அதிக விருப்பம் காட்டுவார்கள். கல்லூரி மாணவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், அவர்கள் லேப்டாப்பைக் கவனமாகக் கையாள்வார்கள். பள்ளி மாணவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது. படிக்கிற நேரம் போக, கேம்ஸ் விளையாடும்போது, கம்ப்யூட்டரை விளையாட்டுத்தன மாகத்தான் ஹேண்டில் செய்வார்கள். கீ போர்டும் மெளஸும் அவர்களிடம் படாதபாடுதான் படும். டெஸ்க் டாப்பில் கீ போர்டு போய்விட்டது, மெளஸ் போய்விட்டது, டிவிடி டிரைவ் போய்விட்டது என்றால், அதிகபட்சம் 1,000 ரூபாய்க்குள் அவற்றை மறுபடியும் வாங்கிவிடலாம். ஆனால், லேப்டாப்பில் மேலே சொன்ன அதே பார்ட்ஸ் போய்விட்டால் ரூ.3,000 - ரூ.7,000 வரை செலவாகும். தவிர, டெஸ்க் டாப்பைவிட லேப்டாப் விலை அதிகம். கைத்தவறி கீழே விழுவதற்கும் வாய்ப்பு அதிகம். எனவே, பள்ளி செல்லும் பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புக்கு லேப்டாப் வாங்கித் தராமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம்.

செல்போன் வாங்கித் தரப்போகிறீர்களா?

‘பிள்ளையின் ஆன்லைன் கிளாஸ் முடிந்ததும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்ற எண்ணத்தில், விலை கூடுதலான, டெம்பர் கிளாஸ் இல்லாத செல்போன்களை வாங்கிக் கொடுக்காதீர்கள். கைத்தவறி கீழே விழுந்தால் மீண்டும் பெரிதாக செலவழிக்க நேரும்.

டேப் (Tab) வாங்கித்தரப் போகிறீர்களா?

இதையும் குழந்தைகள் கீழே போட்டால் அப்படியே தூக்கி குப்பைத்தொட்டியில் போட வேண்டியதுதான். ஏனென்றால், டேப்களுக்கான ஸ்கிரீன் இப்போதைக்கு மார்க்கெட்டில் அவ்வளவு சுலபமாகக் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் 3,000 - 4,000 செலவழிக்க வேண்டிவரும். டேப் ஆரம்ப விலையே 5,000 ரூபாய்தான். தவிர, டேப்களின் ஸ்கிரீனும் 7 இன்ச்லிருந்து 10.1 இன்ச் வரைக்கும் தற்போது இருக்கிறது. இதனால் செல்போன்களில் படிப்பதைப் போலவே டேபிலும் குழந்தைகள் கண்களைச் சுருக்கி சுருக்கிப் பார்க்க வேண்டிவரும்.

பள்ளி மாணவர்களுக்கு செகண்ட் ஹேண்ட் டெஸ்க் டாப் போதுமானது. கல்லூரி மாணவர்களுக்கு அவர்களுடைய படிப்பைப் பொறுத்து லேட்டஸ்ட் ஜெனரேஷன் கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுக்கலாம்’’ என்றார்.

குழந்தைகளின் படிப்புக்கு இனி கேட்ஜெட் வாங்க நினைப்பவர்கள் இந்த விஷயங்களைக் கருத்தில் கொண்டு செயல்படலாமே!