Published:Updated:

ஃப்யூச்சர் குழும சொத்துகளை வாங்கும் ரிலையன்ஸ்..! - முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்?

ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ்

ரிலையன்ஸ் நிறுவனம், ஃப்யூச்சர் குழுமத்தில் சில வணிகங்களை மிகவும் தள்ளுபடி விலையில் வாங்கியுள்ளது!

ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் ஃப்யூச்சர் குரூப் நிறுவனத்தின் சில வணிகங்களை ரூ.24,713 கோடிக்கு வாங்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் பங்கு முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம் என்று பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் (Reliance Retail Ventures -RRVL), கிஷோர் பியானியை நிறுவனராகக் கொண்ட ஃப்யூச்சர் குரூப் நிறுவனத்தின் சில்லறை, மொத்த வணிகம், தளவாடங்கள் மற்றும் கிடங்கு வணிகங்களை ரூ.24,713 கோடிக்கு வாங்கப்போவதாக அறிவித்துள்ளது. இது மிகவும் தள்ளுபடியான விற்பனையாகும்.

ஃப்யூச்சர் குழும சொத்துகளை வாங்கும் ரிலையன்ஸ்..! - முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்?

நிறுவனத்தின் தனிப்பட்ட சொத்துகள் மற்றும் கடன்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் இந்த வணிகம், மொத்த தொகைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கைமாறும் தொகையின் மதிப்பு, ஒப்பந்த மதிப்பு, கூட்டு ஏற்பாட்டின் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்களுக்கு உட்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஃப்யூச்சர் குரூப் மேற்கூறிய வணிகங்களை மேற்கொண்டுள்ள சில நிறுவனங்களை ஃப்யூச்சர் என்டர்பிரைசஸ் லிமிடெட் (Future Enterprises Limited - FEL) நிறுவனத்துடன் இணைக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பட்டியலிடப்பட்ட பல்வேறு ஃப்யூச்சர் குரூப் நிறுவனங்களை ஃப்யூச்சர் என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைப்பதற்கான, பங்கு விகிதாசாரங்களைப் பார்க்க வேண்டும். ஃப்யூச்சர் என்டர்பிரைசஸ் நிறுவனம் தவிர்த்து, அனைத்து ஃப்யூச்சர் குரூப் நிறுவனங்களின் (ஃப்யூச்சர் மார்க்கெட் நெட்வொர்க், ஃப்யூச்சர் சப்ளை செயின், ஃப்யூச்சர் ரீடெயில், ஃப்யூச்சர் லைஃப்ஸ்டைல் ஃபேஷன்ஸ், ஃப்யூச்சர் கன்ஸ்யூமர்) பங்குதாரர்களுக்கு இந்த ஒப்பந்தம் சாதகமாக உள்ளது. அது எப்படி என்று விளக்குகிறேன்.

ஃப்யூச்சர் கன்ஸ்யூமர் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒவ்வொரு 10 பங்குக்கும் ஃப்யூச்சர் என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் 9 பங்குகளைப் பெறுவார்கள். இது ஃப்யூச்சர் கன்ஸ்யூமர் கடைசி வர்த்தக விலையான 11.5 ரூபாயுடன் ஒப்பிடும்போது இதன் மதிப்பீட்டு விலையான ரூ.18 என்பது 57% பிரீமியம் ஆகும்.

ஃப்யூச்சர் லைஃப்ஸ்டைல் ஃபேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒவ்வொரு 10 பங்குக்கும் ஃப்யூச்சர் என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் 116 பங்குகளைப் பெறுவார்கள். இது ஃப்யூச்சர் லைஃப்ஸ்டைல் ஃபேஷன்ஸ் கடைசி வர்த்தக விலையான145 ரூபாயுடன் ஒப்பிடும்போது இதன் மதிப்பீட்டு விலையான ரூ.232 என்பது 60% பிரீமியம் ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒவ்வொரு 10 பங்குக்கும் ஃப்யூச்சர் என்டர்பிரைசஸ் லிமிடெடின் 101 பங்குகளைப் பெறுவார்கள். இது ஃப்யூச்சர் ரீடெயில் கடைசி வர்த்தக விலையான 135.20 ரூபாயுடன் ஒப்பிடும்போது, இதன் மதிப்பீட்டு விலையான ரூ.202 என்பது 49% பிரீமியம் ஆகும்.

ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ்
ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ்

ஃப்யூச்சர் சப்ளை செயின் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒவ்வொரு 10 பங்குக்கும் ஃப்யூச்சர் என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் 131 பங்குகளைப் பெறுவார்கள். இது ஃப்யூச்சர் சப்ளை செயின் கடைசி வர்த்தக விலையான 151 ரூபாயுடன் ஒப்பிடும்போது, இதன் மதிப்பீட்டு விலையான ரூ.262 என்பது 74% பிரீமியம் ஆகும்.

ஃப்யூச்சர் மார்க்கெட் நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒவ்வொரு 10 பங்குக்கும் ஃப்யூச்சர் என்டர்பிரைசஸ் லிமிடெடின் 18 பங்குகளைப் பெறுவார்கள். இது ஃப்யூச்சர் மார்க்கெட் நெட்வொர்க் கடைசி வர்த்தக விலையான 27 ரூபாயுடன் ஒப்பிடும்போது, இதன் மதிப்பீட்டு விலையான ரூ.36 என்பது 35% பிரீமியம் ஆகும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - ஃப்யூச்சர் என்டர்பிரைசஸ் லிமிடெடுக்கு இடையிலான பங்குப் பரிமாற்ற விகிதம் பற்றிய எந்தத் தகவலும் இப்போது வெளியாகவில்லை” என்றார்.

ரிலையன்ஸ் ரீடெயில் வென்ச்சர்ஸ், ஃப்யூச்சர் குரூப்பின் சில வணிகங்களை வாங்கப் போவதாக அறிவிப்பு வெளியானதும், ஃப்யூச்சர் குரூப் நிறுவனப் பங்குகளின் விலை வேகமாக ஏறின. இப்போது இறக்கம் காண ஆரம்பித்திருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் செயல்படுவது நல்லது.