Published:Updated:

கொரோனா லாக்-டவுன் நேரத்தில் என்னென்ன பொருள்களை ஆன்லைனில் வாங்க முடியும்? சந்தேகங்களும் பதில்களும்...

Representational Image
News
Representational Image

நாடு முழுவதும் லாக்-டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்நிலையில், என்னென்ன பொருள்களை ஆன்லைனில் வாங்க இயலும்?

`கோவிட்-19' கொரோனா வைரஸினால் ஏற்படும் நோய்க்கு மருந்துகள் அறிவிக்கப்படாத நிலையில், அதன் பரவலைக் கட்டுப்படுத்த `சோசியல் டிஸ்டன்சிங்' என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறோம்.

Curfew
Curfew

ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவும் இந்த வைரஸிடமிருந்து தப்பிக்க, தற்போதைய ஒரே தீர்வு மற்றவர்களிடமிருந்து விலகியிருப்பதே என்றாகிய பின்பு கூட்டங்களைத் தவிர்க்க `வொர்க் ஃப்ரம் ஹோம்' முதல் `ஊரடங்கு', `லாக்-டவுன்' என்று பல வழிகளைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கூட்டத்தோடு கூட்டமாக `சமூக' வாழ்க்கையை வாழ்ந்து பழகிய நமக்கு இந்த தனிமைப்படுத்துதல் ஒரு சவாலாக இருந்தாலும், அதைவிட பெரும் பிரச்னையாக இருப்பது, அன்றாட வாழ்க்கையை மேற்கொள்ள அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதுதான்.

Corona
Corona
Vikatan

இந்தியாவில் 21 நாள்களுக்கு லாக்-டவுன் கொண்டுவரப்பட்ட பிறகு, அத்தியாவசியப் பொருள்களான காய்கறி, பழங்கள், பால் போன்ற உணவுப்பொருள்கள், மருந்துகள் போன்ற குறிப்பிட்ட பொருள்களை மட்டுமே கடைகள் மற்றும் நிறுவனங்களில் விற்பனை செய்ய அரசு அனுமதித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கும் வழக்கம்போல விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் லாக்-டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்நிலையில், என்னென்ன பொருள்களை வாங்க இயலும்?

Representational Image
Representational Image

எவற்றையெல்லாம் வாங்க முடியாது? இந்த சந்தேகம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். எனவே, இது குறித்து நமக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களையும், அதற்கான பதில்களையும் பார்ப்போம்.

1) எனக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்க முடியுமா?

காய்கறிகள்
காய்கறிகள்

நிச்சயமாக வாங்க முடியும். சமைப்பதற்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருள்கள் போன்ற அத்தியாவசிய தேவைக்கான பொருள்களை இ-காமர்ஸ் நிறுவனங்கள் டெலிவரி செய்வதை நிறுத்தவில்லை. எனவே, இவற்றைத் தாராளமாக ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கலாம்.

2) எனக்கு ஒரு புது ஹெட்போன் தேவைப்படுகிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியுமா?

ஹெட்போன்
ஹெட்போன்

முடியாது. இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அத்தியாவசிய பொருள்களை மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ஹெட்போன் போன்ற மின்னணுச் சாதனங்களை வாங்க முடியாது.

3) சமைத்த உணவுகளை ஆன்லைனில் வாங்க தடைவிதிக்கப்பட்டுள்ளதா?

சமைத்த உணவு
சமைத்த உணவு

தடை விதிக்கப்படவில்லை. ஆனால், கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி Swiggy, Zomato போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களின் குறிப்பிட்ட நேரங்களில் உணவு எடுத்துச்செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், காலை 7 மணி முதல் 9.30 மணி வரை காலை சிற்றுண்டியும், 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மதிய உணவும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரவு உணவும் எடுத்துச்செல்ல அனுமதி உண்டு.

4) எனக்கு, குடிநீர் மற்றும் பிரெட் போன்றவை தேவைப்படுகின்றன. இவற்றை வீடுகளுக்கு டெலிவரி செய்வார்களா?

பிரெட்
பிரெட்

குடிநீர் மற்றும் பிரெட் போன்றவற்றை டோர் டெலிவரியில் பெறமுடியும். ஏனெனில், இவை அத்தியாவசிய பொருள்களின் பட்டியலின் கீழ் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

5) நான் எப்போதும் மருந்துகள் வாங்கும் மெடிக்கல் ஷாப் திறக்கப்படவில்லை. எனக்குத் தேவையான மருந்துகளை ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியுமா?

மருந்து
மருந்து

முடியும். இ-காமர்ஸ் நிறுவனங்கள் மருந்துப்பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வோருக்கு டெலிவரி செய்து வருகின்றன. இதில் தடை எதுவும் விதிக்கப்படவில்லை. எனவே, அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடமிருந்து மருந்துப் பொருள்களை ஆன்லைனில் வாங்குவது பாதுகாப்பானது.

6) என் செல்லப்பிராணிக்கான உணவை டோர் டெலிவரியில் பெற முடியுமா?

செல்லப்பிராணி
செல்லப்பிராணி

பெற முடியும். இ-காமர்ஸ் நிறுவனங்களின் வெப்-சைட்டுகளில் உங்கள் செல்லப்பிராணிக்கான உணவை ஆர்டர் செய்து, அதை டோர் டெலிவரியில் வாங்க முடியும்.

7) இந்த லாக்-டவுன் காரணமாகப் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படுமா?

பால்
பால்

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு, பால் விநியோகம் செய்யப்படும் நேரத்தில் அரசு சில மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, ஊரடங்கு தளரும் வரை சில்லரை வியாபாரிகள் பால் விநியோகம் செய்யப்போவதில்லை என்றும் பால் முகவர்களின் கடைகளில் மட்டும் அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணிவரை பால் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

8) பெட்ரோல் பங்குகள் தடையின்றி இயங்குமா?

பெட்ரோல் பங்குகள்
பெட்ரோல் பங்குகள்

தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில், காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய அனுமதிக்குமாறு தமிழ்நாடு பெட்ரோல் டீசல் விநியோகஸ்தர்கள் சங்கம், தமிழக அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளது. மேலும், அத்தியாவசியப் பணிகள் மற்றும் வாகனங்களுக்கு மட்டுமே 24 மணிநேரம் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யவும் அனுமதி கோரப்பட்டு உள்ளது.