காவிரியின் ஐந்து கிளை நதிகள் ஓடும் அழகிய ஊர் திருவையாறு. தஞ்சை மாவட்டத்தின் வளமான அடையாளங்களில் ஒன்று. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெற்றிலை, இந்திய அளவில் புகழ்பெற்றது. திருவையாற்றின் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து மாதம் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு வெற்றிலை வர்த்தகம் நடைபெறுகிறது. இந்தப் பகுதியைச் சேர்ந்த வெற்றிலை உற்பத்தியாளர் சுகுமாறனிடம் பேசியபோது, ‘`தொடர்ச்சியா வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவங்க, திருவையாறு வெற்றிலையைத்தான் விரும்புவாங்க. மென்மையான சிறிய இலை, மிதமான காரத்தோட, சீக்கிரம் வதங்கிப் போகாத தன்மையுள்ளதாலேயே இதை அதிகம் விரும்புறாங்க. கொடியிலிருந்து பறிச்ச பிறகு ஈரத்துணியில சுத்திவெச்சிட்டோம்னா, ஒரு வாரம் வரைக்கும் அப்படியே பசுமையா இருக்கும். திருவையாறு வெற்றிலை இந்தளவுக்குச் சிறப்பா இருக்கிறதுக்கு காவிரித் தண்ணீரும் இந்த மண்ணும்தான் முக்கிய காரணங்கள். 100 வெற்றிலை கொண்டது ஒரு கவுளின்னு சொல்லுவோம். சூழ்நிலைக்கேற்ப ஒரு கவுளி குறைந்தபட்சம் 15 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 60 ரூபாய் வரைக்கும் விற்பனையாகும். 25 கவுளி கொண்டது ஒரு முட்டி.

100 கவுளி கொண்டது ஒரு கோட்டைன்னு சொல்வோம்” என்றார் சுவாரஸ்யமாக.