திருவள்ளூர் மாவட்டத்தில், மெய்யூர் அருகே அமைந்துள்ளது இருளர் குடியிருப்பு. 80 வருடங்களுக்கும் மேலாக 40 இருளர் குடும்பங்கள் இங்கு வசித்துவருகின்றன. எளிய மக்கள் பலரின் வாழ்க்கையைக் கலைத்துப்போட்ட கொரோனா, மெலிந்துகிடக்கும் இவர்களின் தோள்களில் துயரைச் சுமக்கக் கொடுத்தது. இந்தத் தகவலைக் கேள்விப்பட்டதும் களத்தை நோக்கி விரைந்தோம்.

பஞ்சகாலத்தின் குறுக்குவெட்டுத் தோற்றமாகக் கண்முன் நின்றது இருளர் குடியிருப்பு. அடுப்புப் புகையைக் காணாத மேற்கூரை வேயப்பட்ட வீடுகள், குழந்தைகளின் ஒட்டிப்போன வயிற்றுக்குக் காரணம் சொல்லின. மழைக்காலத்தில் இடிந்துபோன வீடுகளுக்கு வெளியே, வானமே கூரையாகப் பல குடும்பங்கள். உள்நாட்டு அகதிகளாக, அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, நிரந்தரத் தொழிலின்றி, தெய்வத்தையும் அரசையும் ஒருசேர திட்டியபடியே காலம் கடத்துகிறார்கள் இந்தத் தொல்குடிகள்.

நாட்டின் குடிமக்கள் என்பதற்கான எந்த அடையாள அட்டையும் பலருக்கும் வழங்கப்படவில்லை. 17 குடும்பங்களிடம் ரேஷன் கார்டுகள் கிடையாது. பலருக்கும் ஆதார் கார்டு என்றால் என்னவென்றே தெரியவில்லை. சில குடும்பங்களில் கணவனுக்கு மட்டும் ஆதார் கார்டு வழங்கப்பட்டிருக்கிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பகிர்ந்து கொடுக்கும் ரேஷன் அரிசிதான், ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் வயிற்றை அவ்வப்போது நிறைத்துள்ளது.

குழந்தைகள், பெண்கள் எனப் பலரும் பசியால் தவிக்க, அன்றாட வாழ்வை நகர்த்துவதே அவர்களுக்குப் பெரும்பாடாகிப் போயிருக்கிறது. ரேஷன் கார்டு இல்லாத மக்களுக்கு அரசு வழங்கிய 1,000 ரூபாய் நிவாரணப் பணமும் கிடைக்கவில்லை. ‘ஆறு வயதில் வலது கையை இழந்த பெண் குழந்தைக்கு ரேஷன் கார்டு இல்லை என்ற காரணத் தால், 12 வயதாகியும் மாற்றுத்திறனாளி களுக்கு வழங்கப்படும் நிவாரணம்கூட கிடைக்கவில்லை.

எப்போதாவது வாகனங்களில் வந்திறங்கும் தொண்டு நிறுவன ஊழியர்களும், அரசு அதிகாரிகளும் ரேஷன் கார்டு பெற்றுத்தருவதாகக் கூறிய வார்த்தைகளை நம்பியே அவர்களின் நாள்கள் கழிந்துள்ளன. ஆனால், அரசு அலுவலக மேசைகள் பரிவு காட்டவேயில்லை.

அந்த மக்களுக்கு இரண்டு மாதங்களுக்குத் தேவையான 20 கிலோ அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாசகர்களின் பங்களிப்போடு கொரோனாகால நிவாரணமாக வழங்கியது விகடன் குழுமத்தின் வாசன் அறக்கட்டளை. நிரந்தரத் தீர்வுகாண, அந்த மக்களின் கரம் பற்றி அரசு அலுவலகக் கதவுகளைத் தட்டி அறம் கேட்டது ‘ஜூனியர் விகடன்’ படை.

தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜிடம் மக்களின் துயரை எடுத்துச் சொன்னோம். மறுநிமிடமே தொலைபேசி வாயிலாக சிவில் சப்ளை கமிஷனரைத் தொடர்புகொண்டு, அந்த மக்களுக்கு உடனடியாக ரேஷன் கார்டு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். தன் அருகிலிருந்த உதவியாளர்கள் பாரதிதாசன், ஷர்புதீன் இருவரையும் அழைத்து, துரிதமாகப் பணியை முடித்து, தனக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்கும்படி கூறினார். 15 நாள்களுக்குப் பிறகு, ஊத்துக்கோட்டை வட்ட வட்டார வழங்கல் அலுவலர் பாரதி ஜூ.வி அலுவலகத்துக்கு போன் செய்தார். ‘‘கார்டுகள் தயாராகிவிட்டன. இன்று மாலையே மக்களிடம் நேரில் சென்று விநியோகிக்கும்படி உயரதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். நீங்களும் வருகிறீர்களா?’’ என்று கேட்க, இருளர் குடியிருப்பு நோக்கி விரைந்தோம்.

மக்கள் அளவற்ற புன்னகையோடு வரவேற்றனர். பாரதி, ரேஷன் கார்டுகளை வழங்கினார். கையில் வாங்கிப் பார்த்தவர்கள், “எங்க முகம் ரேஷன் கார்டுல!” என்று பெருமிதப்பட்டார்கள். பலருக்கும் கண்களில் கண்ணீர்.

அம்மக்களில் ஒருவரான சந்திரா, ‘‘குழந்தையிலருந்தே இங்கதான் குடியிருக்கேன். இப்போ எனக்கு 24 வயசு. பள்ளிக்கூடத்துக்கெல்லாம் போனதில்லை. என் வீட்டுக் காரருக்குக் கூலி வேலை. அவருக்கு வேலை இருந்தாத்தான் வீட்டுல அடுப்பெரியும். நான் பொறந்ததுலருந்து ரேஷன் கார்டே எங்க வீட்டுல இல்லை. இலவச அரிசி, வேட்டி-சேலை எதுவுமே கிடைக்காது. இப்போ எனக்கு ரேஷன் கார்டு கிடைச்சுருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்க அக்கா பையன், ‘இந்தா பாரு சித்தி... இதுதான் உன் பேரு... ரேஷன் கார்டுல இருக்கு’னு காமிச்சான். ரொம்ப நன்றிங்க’’ என்றவரின் கைகளிலும் இடுப்பிலுமாக இரண்டு குழந்தைகள்.

இனி அந்தக் குழந்தைகள், இடிந்த வீட்டினுள் கிடக்கும் காலிப் பாத்திரங்களை உருட்டிப் பார்த்து ஏங்காது என்ற நிம்மதி சந்திராவின் முகத்தில் தெரிந்தது. நன்றியோடு ஜூ.வி படையை வழியனுப்பினர் மக்கள். அரசின் கதவுகள் தொடர்ந்து தட்டப்படும் - எளியவர்கள் இன்புற்றிருக்கவே!