Published:Updated:

திருக்குறள் உலக பொதுமறை அல்ல... ‘பொதுமுறை’!

திருவள்ளுவர், கடவுளோ ஞானியோ யோகியோ கிடையாது. எல்லா காலங்களிலும் நமக்குத் தேவைப்படும் தோழர்

பிரீமியம் ஸ்டோரி

மோடி - ஜின் பிங் சந்திப்புக்குப் பிறகு உலக அளவில் கவனம் ஈர்த்து வருகிறது மாமல்லபுரம். இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும்வகையில் திருவள்ளுவர் மணல் சிற்பத்தை உருவாக்கி திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடி இருக்கின்றனர் மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்த சிற்பிகள்.

மாமல்லபுரம் சிற்பக் கலைக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களும், மணல் சிற்பக் குழுப் பொறுப்பாளர் களான சிற்பி முருகன், பெருமாள் ஆகியோர் தலைமையில் மாமல்லபுரம் சிற்பிகளும் சேர்ந்து இந்த மணல் சிற்பங்களை உருவாக்கியிருந்தனர்.

திருவள்ளுவர் மணல் சிற்பம்
திருவள்ளுவர் மணல் சிற்பம்

மல்லை தமிழ்ச் சங்கச் செயலாளர் சிற்பி பாஸ்கரன் பேசுகையில், “ஒவ்வோர் ஆண்டும் தை மாதம் 2-ம் தேதி திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். 2018-ம் ஆண்டு திருவள்ளுவருக்கு 133 அடி நீளத்தில் மணல் சிற்பம் அமைத்தோம். அது, சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது. அதனால் இந்த ஆண்டும், 40 அடியில் அமர்ந்த நிலையிலான திருவள்ளுவர் உருவத்தையும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...’ என்ற குறளையும் மணலில் சிற்பங்களாக அமைத்தோம். குறளுக்கான விளக்கத்தை ஓவியமாகத் தீட்டிக் கொடுத்தார் ஓவியர் டிராட்ஸ்கி மருது. அந்த ஓவியத்தையும் மணல் சிற்பமாகக் காட்சிப்படுத்தினோம்” என்றார்.

திருக்குறள் உலக பொதுமறை அல்ல...  ‘பொதுமுறை’!

விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட ஒடிசா மாநில முன்னாள் தலைமைச் செயலர் மற்றும் முதல்வரின் சிறப்பு ஆலோசகர் பாலகிருஷ்ணன், “திருவள்ளுவர், கடவுளோ ஞானியோ யோகியோ கிடையாது. எல்லா காலங்களிலும் நமக்குத் தேவைப்படும் தோழர். அதனால்தான் ‘தோழர் திருவள்ளுவர்’ என ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன். திருக்குறளை ‘உலகப் பொதுமறை’ என்கிறார்கள். மறை என்றால் வேதம். திருக்குறள் எந்த மத வரம்பிலும் இல்லை. அரசுத் தரப்பிலும் இன்னும் `உலகப் பொதுமறை’ என்றே எழுதிக்கொண்டிருக் கிறார்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கல்வித் துறைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரனிடம் ‘உலகப் பொதுமுறை என எழுதுவதே சரி’ எனத் தெரிவித்தேன். அவரும் உலகப் பொதுமுறை என மாற்ற உத்தரவிட்டார். அவர் அனுப்பிய அரசுக் குறிப்பு ஒன்றில் `உலகப் பொதுமுறை’ என எழுதி அனுப்பினார். ஆனால், எழுத்துப்பிழை இருக்கிறது என அவருக்கே அதிகாரிகள் கடிதம் அனுப்பினார்கள். ‘அது எழுத்துப் பிழை அல்ல... கருத்துப் பிழை’ என விளக்கத்துடன் பதிவிட்டிருந்தார். இனியாவது தமிழக அரசு `உலகப் பொதுமுறை’ என அனைத்து ஆவணங்களிலும் மாற்ற வேண்டும். திருவள்ளுவரை உலகம் முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு