Published:Updated:

“என்னை கோவணத்துடன் நிற்கவைத்தார்கள்!”

சுவாமிநாத தம்பிரான்
பிரீமியம் ஸ்டோரி
சுவாமிநாத தம்பிரான்

திருவாவடுதுறை மடம் ‘திடுக்’

“என்னை கோவணத்துடன் நிற்கவைத்தார்கள்!”

திருவாவடுதுறை மடம் ‘திடுக்’

Published:Updated:
சுவாமிநாத தம்பிரான்
பிரீமியம் ஸ்டோரி
சுவாமிநாத தம்பிரான்

மிழகத்தில் உள்ள 18 சைவ மடங்களில் முதலாவது மடமான திருவாவடுதுறை மடம், பரபரப்பாகியிருக்கிறது. மடத்தில் கட்டளைத் தம்பிரானாக இருந்தவருக்கும் மடாதிபதிக்கும் இடையில் நடக்கும் மல்லுக்கட்டுதான், பக்தி வட்டாரத்தில் இப்போது பரபர ‘டாபிக்’.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ளது திருவாவடுதுறை. இங்கே அமைந்துள்ள திருவாவடுதுறை மடம், கி.பி 14-ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஆசியா முழுவதும் 150-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டிருக்கும் இந்த மடத்தின் சொத்து மதிப்பு, சுமார் 3,000 கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறார்கள். மடத்தின் 24-வது ஆதீன மடாதிபதி, ல அம்பலவாண தேசிகர். மடத்தின் கட்டளைத் தம்பிரானாக இருந்தவர் சுவாமிநாத தம்பிரான். இவர்கள் இருவருக்கு இடையேதான் இப்போது யுத்தம்.

“என்னை கோவணத்துடன் நிற்கவைத்தார்கள்!”

மடத்துக்குச் சொந்தமான குளங்களில் தூர்வாருவதில் தம்பிரான் முறைகேடு செய்துவிட்டதாக திருவிடைமருதூர் போலீஸில் புகார் கொடுத்தார், பா.ஜ.க நகரத் தலைவர் ராஜ். தொடர்ந்து, செப்டம்பர் 15-ம் தேதி மடத்திலிருந்து வெளியேறுவதாக மடாதிபதியிடம் எழுதிக் கொடுத்துவிட்டு வெள்ளை உடை அணிந்து காசிக்குச் சென்றுவிட்டார் சுவாமிநாத தம்பிரான். காசியில் இருந்தபடியே மடத்தின் மீதான குற்றச்சாட்டுகளை ஆடியோப் பதிவாக வெளியிட்டு, அதிரடி கிளப்பிக்கொண்டிருக்கிறார்.

சுவாமிநாத தம்பிரானைத் தொடர்புகொண்டு பேசினோம். “நான்கு ஆண்டு களுக்கு முன்புதான் நான் இந்த மடத்தில் பொறுப்புக்கு வந்தேன். நேர்மையாக நிர்வாகம் செய்தேன். 25 ஆண்டுகளாகத் தூர்வாராமல் இருந்த மடத்துக்குச் சொந்தமான கோயில் குளங்களில் தூர்வாரும் பணியைத் தொடங்கினேன். அந்தப் பணியை தங்களுக்குத் தர வேண்டும் என்று அரசியல் கட்சியினர் சிலரும், மடத்தில் இருந்த சிலரும் எனக்கு நெருக்கடி கொடுத்தனர். நான் மறுத்துவிட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல் மடத்தின் விவசாய நிலங்களைக் குத்தகைக்கு எடுத்திருந்த சிலர், அவற்றை செங்கல்சூளைக்குக் கொடுத்திருந்தனர். அதையும் தடுத்தேன். மடத்துக்குச் சொந்தமான கோயில்களில் நடந்த முறைகேடுகளையும் தடுத்தேன். இதனால், மகாலிங்க சுவாமி கோயிலுக்கும் மடத்துக்கும் வருமானம் இரட்டிப்பானது. சூரியனார் கோயில் முறைகேடு களைத் தடுத்ததால் அந்தக் கோயிலின் கண்காணிப்பாளர் குருமூர்த்தி பாதிக்கப்பட்டார்.

ல அம்பலவாண தேசிகர்
ல அம்பலவாண தேசிகர்

பா.ஜ.கவைச் சேர்ந்த ராஜ் என்பவர், காசிவிஸ்வநாதன் ஆலயத்தில் நடைபெற்ற பாலாலயப் பணியைக் கொடுக்காததால், அங்கு இருந்த தண்டபாணி சுவாமி சந்நிதியை இடித்துத் தள்ளினார். இதுதொடர்பாக அவர்மீது வழக்கும் இருக்கிறது. இதனாலேயே குருமூர்த்தி, ராஜ் இருவரும் என்னை மடாதிபதியிடம் தவறாகச் சித்திரித்தனர். சில நெருக்கடிகளால் மடாதிபதியும் அவர்கள் சொல்வதையே கேட்கிறார்.

கடந்த செப்டம்பர் 15-ம் தேதி, மடத்தில் மடாதிபதியுடன் குருமூர்த்தி உள்ளிட்ட சிலர் இருந்தனர். ‘உடல்நிலை சரியில்லாததால் மடத்தைவிட்டு வெளியேறுவதாக’ என்னிடம் எழுதி வாங்கினார்கள். நான் உடுத்தியிருந்த காவி வேட்டியை உருவிக்கொண்டு கோவணத்துடன் நிற்கவைத்ததுடன், காதில் அணிந்திருந்த வற்றையும் கழற்றி வெள்ளை உடை கொடுத்து உடுத்தச் சொன்னார்கள். எதுவும் சொல்லாமல் ‘மெளனகுருவாக’ இதை வேடிக்கை பார்த்தார் மடாதிபதி. அதன் பிறகும் நான் மடாதிபதியிடம் ஆசி வாங்கிக்கொண்டுதான் காசிக்குப் புறப்பட்டேன். மடத்தைவிட்டு வெளியேறச் சொல்லியிருந்தால் நானே வெளியேறியிருப்பேன். ஆனால், என்னை அவமானப் படுத்தி வெளியே அனுப்பி விட்டார்கள்” என்றார்.

இதுகுறித்து மடாதிபதி யிடம் கேட்டோம். “சுவாமிநாத தம்பிரானின் இயற்பெயர் சுப்பையா. ஈரோட்டைச் சேர்ந்தவர். தீட்சை பெறும் முன்பே ஊமைப்பெண் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். குடும்பத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் துறவு மேற்கொண்டு ஆதீனத்தில் வந்து அடைக்கலமானார். அவர்மீது நம்பிக்கை வைத்து மடத்தில் பொறுப்புக் கொடுத்துத் தங்கவைத்தோம். ஆனால், மடத்தின் உத்தரவை மீறி வீட்டுக்குச் செல்வதாக வெளியே சென்றுவிடுகிறார். அவர் முழுமையான துறவறம் மேற்கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாது, அவருக்கு இதய பாதிப்பு இருக்கிறது. வீட்டுக்குச் சென்று நிம்மதியாக இருக்கட்டும் என்றுதான் மடத்தைவிட்டு வெளியேற்றினோம். ஆதீனத்தின் கட்டளையை மதிக்காமல் காசிக்குச் சென்று மீண்டும் காவி உடை அணிந்து குரு துரோகம் செய்திருக்கிறார்” என்றார்.

பா.ஜ.க நகரத் தலைவர் ராஜ், “குளங்களைத் தூர்வாருகிறேன் என்ற பெயரில் மண்ணை விற்று காசு பார்த்துவிட்டார். `அரசின் அனுமதி வாங்கினீர்களா?’ எனக் கேட்டதற்கு, என்மீது பொய்ப் புகார் கொடுத்தார்” என்றார்.

குருமூர்த்தியிடம் கேட்டதற்கு, “தம்பிரானின் தவறுகள் எல்லாம் மடாதிபதிக்குத் தெரிந்துவிட்டன. ‘இதெல்லாம் ஒரு துறவி செய்கிற வேலையா?’ என்று கேட்ட மடாதிபதி, ‘நீ பக்குவப்படும் வரை வெள்ளை உடையிலேயே இரு’ என்று சொல்லி, காவி உடையை வாங்கிக்

கொண்டார். ‘காவி உடையை உருவினோம்’ என்று அவர் சொல்வதெல்லாம் பொய்” என்றார் நிதானமாக.

யார் சொல்வது உண்மை? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism