Published:Updated:

`ககேபோ'... ஜப்பானிய வாழ்வு முறையில் நமக்கான நிதிப் பாடங்கள்!

நிதிப் பாடங்கள்
நிதிப் பாடங்கள்

எழுதிப் பார்க்கும் பழக்கம் பல நன்மைகளை உருவாக்குவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன

எந்தவொரு (அத்தியாவசியமற்ற) பொருளையும் வாங்கும் முன் கீழ்க்காணும் கேள்விகளைக் கேட்டு, அதற்கான பதிலை எழுதுங்கள்:

* இந்தப் பொருள் இல்லாமல் என்னால் இருக்க முடியாதா?

* இதை வாங்கும் பொருளாதார நிலை எனக்கு இருக்கிறதா?

* இதைக் கண்டிப்பாக உபயோகிப்பேனா, இதை வைக்க வீட்டில் இடம் இருக்கிறதா?

* இதுபற்றி எப்படி அறிந்தேன்? (பயன்படுத்தியவர்கள் சிபாரிசு செய்ததா அல்லது பொழுதுபோக்குக்காக விளம்பரம் பார்க்கும்போது நானாக அறிந்துகொண்டேனா?)

* இதை வாங்க நினைக்கும் என் மனநிலை நிலையானதா, இதை வாங்கிய பிறகு எப்படி உணர்வேன்?

* இதைவிடக் குறைவான செலவில் மனநிறைவு பெற முடியுமா?

எழுதிப் பார்க்கும் பழக்கம் பல நன்மைகளை உருவாக்குவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இப்படி எழுதிப் பார்க்கும்போது, அந்தப் பொருள் பற்றி அதிகம் யோசிக்கிறோம். 'ஏன் அதை வாங்க நினைக்கிறோம்...' என்றும், 'அதற்கு மாற்று உண்டா...' என்றும் யோசிக்கிறோம். இதனால் பல வீண் செலவுகள் தவிர்க்கப்படுவதுடன், நம் சேமிப்பும் உயர்கிறது.

- இது 'ககேபோ' என்ற ஜப்பானிய வாழ்வு முறையின் விதிமுறைகளின் ஒரு பகுதி மட்டுமே!

சமீப காலத்தில் தங்கள் வாழ்வை இன்னும் முறையாக, இன்னும் நலமாக வாழ உதவும் வழிவகைகளை மக்கள் தேடித் தேடிப் பின்பற்றுகின்றனர். அந்த வகையில், ஸாரா ஹார்வி எழுதிய சில கட்டுரைகள் கவனம் ஈர்க்கின்றன.

`ககேபோ'... ஜப்பானிய வாழ்வு முறையில் நமக்கான நிதிப் பாடங்கள்!

லண்டனில் எழுத்தாளராக விளங்கிய அவர், லண்டனைவிட்டு ஜப்பானிலுள்ள டோக்கியோவுக்குச் சென்று சில காலம் வாழ்ந்தார். சிறுகச் சிறுக மாற்றங்களை மேற்கொள்ளும் இயல்பு, விழிப்புணர்வுடன் செயல்புரியும் தன்மை... இவை இரண்டும் ஜப்பானியர்களின் தினசரி வாழ்வுடன் பிணைந்து அவர்களுக்குத் தரும் மேன்மைகள் குறித்து அறிந்திருந்த அவர், மேலும் மேலும் அவை குறித்து அறிய முற்பட்டார்.

தனது அதீத செலவுப் பழக்கங்களால் கவலையுற்றிருந்த ஸாரா, 'ககேபோ' என்ற ஜப்பானிய வாழ்வு முறை பற்றிக் கேள்விப்பட்டார். அதுவரை அவர் கேள்விப்பட்டிருந்த எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக இருந்த ககேபோ அவரை ஈர்த்தது. 'ஹனி மொடொகொ' (Hani Motoko) என்ற பெண் எழுத்தாளர் 1904-ம் ஆண்டில் அறிமுகப்படுத்திய இந்த முறை, செலவுப் பழக்கங்களை எளிதாகக் கட்டுப்படுத்தவும், மெதுமெதுவாக செல்வச் செழிப்பை நோக்கி நம்மை உயர்த்தவும் உதவுகிறது என்று கண்டறிந்தார்.

கடந்த 116 வருடங்களாக ஜப்பானியருக்குச் செலவைக் குறைக்க உதவிவரும் ககேபோ குறித்து அவர் கூறுவதை விரிவாகப் பார்ப்போம். குறிப்பாக, ஸாரா ஹார்வி சொல்லும் நாம் பின்பற்றக் கூடிய 6 ககேபோ வழிமுறைகளை நாணயம் விகடன் சிறப்புக் கட்டுரையில் முழுமையாக அறிய க்ளிக் செய்க...> செலவுப் பழக்கங்களை மாற்றும் 'ககேபோ!' - ஜப்பானிய பணவளக்கலை! https://bit.ly/3eHw3Q5

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு