Published:Updated:

இந்த வருட வருமானத்தை கடந்த வருடக் கணக்கில் சேர்க்கலாம்... வரியைக் குறைக்கும் வழி இதோ..!

வருமானம்
பிரீமியம் ஸ்டோரி
வருமானம்

கடந்த நிதி ஆண்டில் கிடைத்திருக்க வேண்டிய வருமானம் இந்த நிதி ஆண்டில் கிடைத்தால், அதற்கும் வரிச் சலுகை பெறலாம்!

இந்த வருட வருமானத்தை கடந்த வருடக் கணக்கில் சேர்க்கலாம்... வரியைக் குறைக்கும் வழி இதோ..!

கடந்த நிதி ஆண்டில் கிடைத்திருக்க வேண்டிய வருமானம் இந்த நிதி ஆண்டில் கிடைத்தால், அதற்கும் வரிச் சலுகை பெறலாம்!

Published:Updated:
வருமானம்
பிரீமியம் ஸ்டோரி
வருமானம்
ம்மையெல்லாம் திக்குமுக்காட வைத்த கொரோனாவின் கோர தாண்டவத்தால் நம்மால் ஒரு சில விஷயங்களைத்தான் கவனிக்க முடிந்தது. சிலவற்றைக் கவனிக்க முடியவில்லை. அவ்வாறு கவனம் பெறாத இனங்களில் வரிச்சலுகையும் ஒன்று.

2019-20 நிதி ஆண்டு முடிவடைய இருந்த கடைசி வாரத்தில் ஊரடங்கு நம்மை முடக்கிப் போட்டதால், விடுபட்ட வரிச்சலுகைக்கான செலவு மற்றும் சேமிப்பு இனங்களை ஈடுகட்ட, நிதி ஆண்டு நிறைவடைந்த பிறகும், நான்கு மாத அவகாசம் தந்தது அரசு. இந்த நிலையில், 31.03.2020-க்குள் பெற வேண்டிய அல்லது பெறப்படாத வருமானம் அதாவது, சென்ற நிதி ஆண்டுக்கு உரிய விடுப்புச் சம்பளம், ஒப்படை விடுப்புச் சம்பளம், அகவிலைப்படி நிலுவை, பதவி உயர்வுக்கான சம்பள நிலுவை போன்ற சம்பள வகை ஏதாவது சென்ற நிதி ஆண்டில் தரப்படாமல் தற்போது தரப்பட்டிருந்தால், இதைச் சென்ற நிதி ஆண்டுக் கணக்கிலேயே சேர்த்து வரித் தாக்கல் செய்யலாம் என்கிற செய்தி இன்னும் பலருக்கும் சென்றடையாத தகவலாகவே இருக்கிறது. இந்த வருமான வரிச் சலுகை பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

இந்த வருட வருமானத்தை கடந்த வருடக் கணக்கில் சேர்க்கலாம்... வரியைக் குறைக்கும் வழி இதோ..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வரிக் கணக்கீட்டு விதி

பொதுவாக, நிதி ஆண்டு என்பது ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி அடுத்து வரும் மார்ச் 31-ல் முடிவடைவதாகும். இந்தக் கால இடைவெளிக்குள் ஒரு சம்பள தாரருக்குத் தரப்பட வேண்டிய சம்பள வகை அனைத்தும் வரிக்கணக்கில் கொண்டு வரப்பட வேண்டும்.

சம்பளம் என்பது...

சம்பள வகை என்பது மாதாந்தரச் சம்பளம், அகவிலைப்படி உயர்வு, பதவி உயர்வுக்கான நிலுவை, விடுப்புக்கான சம்பளம், விடுப்பு ஒப்படைப்புக்கான (Surrender of earned leave) சம்பளம், போனஸ் ஆகியவை அடங்கும்.

இந்த வருட வருமானத்தை கடந்த வருடக் கணக்கில் சேர்க்கலாம்... வரியைக் குறைக்கும் வழி இதோ..!

இவை அனைத்தும் பணியாளருக்குத் தரப்பட்டிருந்தாலும் தரப்படாமல் இருந்தாலும் (Whether paid or not), நிதி ஆண்டு முடியும்வரை கொடுக்கப்படாமல் இருந்தாலும் கட்டாயம் வரிக்கணக்கில் கொண்டு வந்தே ஆக வேண்டும்.

இத்துடன்கூட அடுத்த நிதி ஆண்டுக்கு அதாவது, 2020-21 நிதி ஆண்டுக்கு உரிய சம்பளமோ, சம்பள முன்பணமோ முந்தைய நிதி ஆண்டிலேயே (அதாவது, 2019-20) தரப்பட்டிருந்தாலும். அதையும் 2019-20 நிதி ஆண்டுக் கணக்கில் கொண்டுவந்து வருமான வரியைக் கணக்கிட வேண்டும் என்பது விதி.இந்த வரிக் கணக்கு விதியைப் பயன்படுத்தி 2019-20-க்கு வரியைக் குறைக்கலாம் அல்லது வரி கட்ட வேண்டியதைத் தவிர்க்கலாம். எப்படி என ஓர் உதாரணத்துடன் பார்ப்போம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரூ.4,000 வரி கட்ட வேண்டும்...

2019-20 நிதி ஆண்டில் ஒரு சம்பளதாரரின் வரிக்குரிய நிகர வருமானம் 4,60,000 என்று வைத்துக் கொள்வோம். இவருக்கு 2019-20 நிதி ஆண்டிலேயே தரப்பட்டிருக்க வேண்டிய சம்பள நிலுவை / விடுப்புச் சம்பளம் / பதவி உயர்வு சம்பள நிலுவை / அகவிலைப்படி உயர்வு நிலுவை என ஏதோ ஒன்றின் மூலம் கிடைக்க வேண்டிய மொத்தத் தொகை ரூ.20,000 என வைத்துக் கொள்வோம்.

இந்த வருட வருமானத்தை கடந்த வருடக் கணக்கில் சேர்க்கலாம்... வரியைக் குறைக்கும் வழி இதோ..!

இந்த 20,000 ரூபாயையும் 2019-20 நிதி ஆண்டிலேயே இவரது வரிக்கணக்கில் கொண்டு வந்திருந்தாலும் அவர் வரிகட்ட வேண்டி இருக்காது. அது மட்டுமல்ல, 2020 - 21 நிதி ஆண்டில் அகவிலைப்படி உயர்வு கிடையாது. வெறும் இன்கிரிமென்ட் உயர்வு மட்டும்தான் என்கிறபோது, 2020-21 நிதி ஆண்டிலும் இவர் வரி கட்ட வேண்டி இருக்காது. வரித்தொகை பிரிவு 87-A-ன்படி, அந்த வரித் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.

மாறாக, இந்த 20,000 ரூபாயை 2020-21 நிதி ஆண்டுக் கணக்கில் கொண்டு வந்தால் 20% வரியாக, அதாவது 4,000 ரூபாயைச் செலுத்த வேண்டி வரலாம். அவர் தற்போது 20% வரி வரம்பில் (Tax bracket) இருந்தால், இந்த ரூ. 20,000 நிலுவை காரணமாக அவர் செலுத்த வேண்டிய வரி 30% என உயர்ந்து, 6000 ரூபாய் வரி கட்ட வேண்டி இருக்கலாம்.

புதிய வருமான வரித் திட்டத்தில் இணைவோர் மற்றும் பழைய வருமான வரித் திட்டத்தில் தொடர்வோர் ஆகிய இருவருக்கும் பொதுவான விதிதான் இது.

புதிய வருமான வரித் திட்டத்திலும்...

புதிய வருமான வரித் திட்டத்தில் ரூ.2.5 லட்சத்துக்குமேல் ரூ.15 லட்சம் வரையான வரிக்கு உட்பட்ட வருமானத்துக்கு, ஒவ்வொரு 2.5 லட்சம் ரூபாய்க்கு வருமான வரியானது 5% என்ற ரீதியில் அதிகரிக்கும் என்பதால், நடப்பு நிதி ஆண்டில் பெற்றிருக்க வேண்டிய எந்தவொரு தொகையும், காலம் கடந்து பெற நேரும்போது இந்தக் கணக்கீடு பெரிதும் வரியைக் குறைக்க உதவக்கூடும்.

2019–20 ஆண்டுக்கு ஏற்கெனவே வரித் தாக்கல் செய்துவிட்டவர்களும் இந்தக் கணக்கீட்டின்படி, வரி குறைய வாய்ப்பிருந்தால், மறு வரி கணக்குத் தாக்கல் செய்து நடப்பு (2020-21) நிதி ஆண்டின் வரியைக் குறைத்துக் கொள்ளலாம். வர வேண்டிய வருமானத்தையும் கணக்கில் சேர்த்து சம்பளத்தில் வரிப்பிடித்தம் செய்யப்பட்டவர்கள், பெறப்படாத சம்பளத் துக்கு ரீஃபண்ட் பெற வேண்டியதில்லை. தாமதமாகப் பெற்ற இந்த வருமானத்தையும் சென்ற (2019-20) நிதி ஆண்டுக் கணக்கிலேயே சேர்த்துக் காட்டி வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மத்திய அரசு ஊழியர்களும்...

மத்திய அரசு, ரயில்வே, அஞ்சல் துறை, தமிழக அரசின் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் முதலானவர்களுக்கு ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி மார்ச் மாதம்தான் அறிவிக்கப் படுகிறது. எனவே, அடுத்துவரும் நிதி ஆண்டில் தான் ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையைப் பெற முடிகிறது. இவர்களும் இந்த நடைமுறையைப் பின்பற்றினால் வரி சதவிகிதம் குறையும் என்றாலோ, வரி செலுத்த வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விடும் என்றாலோ, இந்த நிலுவைத் தொகையையும் கணக்கிட்டு, முந்திய நிதி ஆண்டிலேயே சேர்த்து வரித்தாக்கல் செய்து, வரியைக் குறைக்கலாம்.

இந்த வரிச் சலுகையைப் புரிந்துகொண்டு செயல்பட்டால், உங்களால் சில ஆயிரங்களை மிச்சப்படுத்த முடியும் என்பது நிச்சயம். முயற்சி செய்து பாருங்கள்!

முன்பணமாகப் பெற்றவர்கள் என்ன செய்ய வேண்டும்?

2020-21 நிதியாண்டுக்குத் தரப்பட வேண்டிய சம்பள இனம் ஏதோ ஒன்றையோ, சம்பள முன்பணத்தையோ 2019-2020 நிதியாண்டில் பெற்றவர்கள் 2019-2020 நிதி ஆண்டு வரிக் கணக்கிலேயே தாக்கல் செய்ய வேண்டும்.

சுருக்கமானச் சொன்னால், ஒரு சம்பள வருமான இனத்தை ஒரு நிதி ஆண்டில் கொண்டு வந்துவிட்டால், மறுபடியும் அதை வேறு எந்த நிதி ஆண்டிலும் கொண்டுசெல்ல வேண்டியதில்லை. இவை எல்லாம் வரிச் சட்டம் அனுமதிக்கும் நடைமுறையே. இவற்றைப் பரிசீலித்து, தேவைப்பட்டால் தாராளமாக பின்பற்றலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism